Saturday, July 27

ஸ்ரீமத் பகவத் கீதை – 108 முக்கியமான ஸ்லோகங்கள் (9.26 – 18.78)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

 


9.26

த்ருதராஷ்ட்ர உவாச

பத்ரம் புஷ்பம் பலம் தோயம்
யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்த்யுபஹ்ருதம்
அஷ்னாமி ப்ரயதாத்மன:

அன்புடனும் பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஓர் இலையோ, ஓரு பூவோ, ஒரு பழமோ,  நீரோ அளித்தால் அதனை நான் ஏற்கின்றேன்.

 


9.27

யத் கரோஷி யத் அஷ்னாஸி
யஜ் ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய
தத் குருஷ்வ மத்-அர்பணம்

 

குந்தியின் மகனே, எதையெல்லாம் நீ செய்கின்றாயோ, எதையெல்லாம் நீ உண்கின்றாயோ, எதையெல்லாம் நீ படைக்கின்றாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கின்றாயோ, எந்த தவங்களையெல்லாம் நீ செய்கின்றாயோ, அதனை எனக்கு அர்ப்பணமாக செய்வாயாக.

 


9.29

ஸமோ (அ)ஹம் ஸர்வ-பூதேஷு
ந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா
மயி தே தேஷு சாப்-யஹம்

 

நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.

 


9.30

அபி சேத் ஸு-துராசாரோ
பஜதே மாம் அனன்ய-பாக்
ஸாதுர் ஏவ ஸ மந்தவ்ய:
ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:

 

ஒருவன் மிகவும் மோசமான செயலைச் செய்தாலும், அவன் பக்தித் தொண்டில் பிறழாது ஈடுபட்டிருந்தால், அவனை சாதுவாகவே கருத வேண்டும்; ஏனெனில், அவன் தனது தீர்மானத்தில் திடமாக உள்ளான்.

 


9.32

மாம் ஹி பார்த வ்யபாஷ்ரித்ய
யே (அ)பி ஸ்யு: பாப-யோனய:
ஸ்த்ரியோ வைஷ்யாஸ் ததா ஷூத்ராஸ்
தே (அ)பி யாந்தி பராம் கதிம்

 

பிருதாவின் மகனே, பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என கீழ் குலத்தைச் சார்ந்தவர்கள் யாராக இருந்தாலும், என்னிடம் சரணடைபவர்கள் பரமகதியை அடைய முடியும்.

 


9.34

மன்-மனா பவ மத்-பக்தோ
மத்-யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம்
ஆத்மானம் மத்-பராயண:

 

உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.

 


10.8

அஹம் ஸவர்வஸ்ய ப்ரபவோ
மத்த: ஸர்வம் ப்ரவர்ததே
இதி மத்வா பஜந்தே மாம்
புதா பாவ-ஸமன்விதா:

 

ஜட, ஆன்மீக உலகங்கள் அனைத்திற்கும் மூலம் நானே. எல்லாம் என்னிடமிருந்தே தோன்றுகின்றன. இதனை நன்றாக அறிந்த அறிஞர்கள், எனது பக்தித் தொண்டில் ஈடுபட்டு, இதயப்பூர்வமாக என்னை வழிபடுகின்றனர்.

 


10.9

மச்-சித்தா மத்-கத-ப்ராணா
போதயந்த: பரஸ்பரம்
கதயந்தஷ் ச மாம் நித்யம்
துஷ்யந்தி ச ரமந்தி ச

 

எனது தூய பக்தர்களின் சிந்தனைகள் என்னில் மூழ்கியுள்ளன. அவர்களது வாழ்க்கை எனது தொண்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், என்னைப் பற்றி தங்களுக்குள் உரையாடுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசித்துக் கொள்வதிலும் இவர்கள் பெரும் திருப்தியும் ஆனந்தமும் அடைகின்றனர்.

 


10.10

தேஷாம் ஸதத-யுக்தானாம்
பஜதாம் ப்ரீதி-பூர்வகம்
ததாமி புத்தி-யோகம் தம்
யேன மாம் உபயாந்தி தே

 

எனக்கு அன்புடன் தொண்டு செய்வதில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு, என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகிறேன்.

 


10.11

தேஷாம் ஏவானுகம்பார்தம்
அஹம் அக்ஞான-ஜம் தம:
நாஷயாம்-யாத்ம-பாவ-ஸ்தோ
க்ஞான-தீபேன பாஸ்வதா

 

அவர்களிடம் விஷேச கருணையைக் காட்டுவதற்காக, அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான், அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விடும் தீபத்தினால் அழிக்கின்றேன்.

 


10.12 ~ 13

அர்ஜுன உவாச

பரம் ப்ரஹ்ம பரம் தாம
பவித்ரம் பரமம் பவான்
புருஷம் ஷாஷ்வதம் திவ்யம்
ஆதி-தேவம் அஜம் விபும
அஹுஸ் த்வாம் ருஷய: ஸர்வே
தேவர்ஷிர் நாரத ஸ் ததா
அஸிதோ தேவலோ வ்யாஸ:
ஸ்வயம் சைவ ப்ரவீஷ மே

அர்ஜுனன் கூறினான்: நீரே பரபிரம்மன், உன்னத இருப்பிடம், மிகவும் தூய்மையானவர், பரம சத்தியம், நீரே நித்தியமானவர், திவ்யமானவர், ஆதி தேவர், பிறப்பற்றவர், மிகப் பெரியவர். உம்மைப் பற்றிய இந்த உண்மையினை, நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற மிகச்சிறந்த ரிஷிகளும் உறுதி செய்துள்ளனர், இப்பொழுது நீரே இதனை எனக்கு அறிவித்துள்ளீர்.

 


10.41

யத் யத் விபூதிமத் ஸத்த்வம்
ஸ்ரீமத் ஊர்ஜிதம் ஏவ
வா
தத் தத் ஏவாவகச்ச த்வம்
மம தேஜோ-(அ)ம்ஷ-ஸம்பவம்

 

அழகான, புகழத்தக்க வைபவங்கள் அனைத்தும், என்னுடைய தேஜஸின் சிறு பொறியிலிருந்து தோன்றுபவையே என்பதை அறிவாயாக.

 


11.54

பக்த்யா த்வ் அனன்யயா ஷக்ய
அஹம் ஏவம்-விதோ (அ)ர்ஜுன
க்ஞாதும் த்ரஷ்டும் ச தத்த்வேன
ப்ரவேஷ்டும் ச பரந்தப

 

எனதன்பு அர்ஜுனா, உன் முன் நிற்கும் என்னை, கலப்பற்ற பக்தித் தொண்டினால் மட்டுமே இதுபோன்று நேரடியாகக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியும். இவ்வழியில் மட்டுமே என்னைப் பற்றிய உண்மையின் இரகசியங்களிலே உன்னால் நுழைய முடியும்.

 


11.55

மத்-கர்ம-க்ரூன் மத்-பரமோ
|மத்-பக்த: ஸங்க-வர்ஜித:
நிர்வைர :ஸர்வ–பூதேஷு
ய: ஸ மாம் ஏதி பாண்டவ

 

எனதன்பு அர்ஜுனா, எவனொருவன், எனது தூய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளானோ, பலன்நோக்குச் செயல்கள் மற்றும் மனக்கற்பனைகளின் களங்கங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளானோ, எனக்காக செயல்படுகிறானோ, என்னை தனது வாழ்வின் பரம இலக்காக வைத்துல்லானோ, மற்றும் எல்லா உயிர்களிடத்திலும் நண்பனாக உள்ளானோ, அவன் நிச்சயமாக என்னை வந்தடைகின்றான்.

 


12.5

க்லேஷோ (அ)திகதரஸ் தேஷாம்
அவ்யக்தாஸக்த-சேதஸாம்
அவ்யக்தா ஹி கதிர்து:கம்
தேஹவத்பிர் அவாப்யதே

 

எவரது மனம், பரமனின் தோன்றாத அருவத்தன்மையிடம் பற்றுதல் கொண்டுள்ளதோ, அவர்களது வளர்ச்சி மிகவும் கடினமானதாகும். அவ்வழியில் முன்னேற்றம் காண்பது உடலை உடையவர்களுக்கு எப்போதும் சிரமமானதாகும்.

 


12.8

மய்யேவ மன ஆதத்ஸ்வ
மயி புத்திம் நிவேஷய
நிவஸிஷ்யஸி மய்யேவ
அத ஊர்த்வம் ந ஸம்ஷய:

 

முழுமுதற் கடவுளான என்மீது உனது மனதை நிறுத்தி, உன்னுடைய முழு அறிவையும் என்னில் ஈடுபடுத்துவாயாக. இவ்வாறு நீ எப்போதும் என்னிலேயே வாழ்வாய் என்பதில் ஐயமில்லை.

 


12.9

அத சித்தம் ஸமாதாதும்
ந ஷக்னோஷி மயி ஸ்திரம்
அப்யாஸ–யோகேன ததோ
மாம் இச்சாப்தும் தனஞ்ஜய

 

செல்வத்தை வெல்பவனான எனதன்பு அர்ஜுனா, உனது மனதை என்மீது பிறழாது நிலைநிறுத்த முடியாவிடில், பக்தி யோகத்தின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவாயாக. என்னை அடைவதற்கான விருப்பத்தினை இதன் மூலம் விருத்தி செய்வாயாக.

 


12.10

அப்யாஸே (அ)ப்யஸமர்தோ (அ)ஸி
மத்-கர்ம-பரமோ பவ
மத்-அர்தம் அபி கர்மாணி
குர்வன் ஸித்திம் அவாப்ஸ்யஸி

 

பக்தி யோகத்தின் விதிகளை உன்னால் பயிற்சி செய்ய முடியாவிடில், எனக்காக மட்டும் செயலாற்ற முயல்வாயாக. ஏனெனில், எனக்காக செயல்படுவதன் மூலம் நீ பக்குவ நிலைக்கு வந்தடைவாய்.

 


14.4

ஸர்வ-யோனிஷு கௌந்தேய
மூர்தய: ஸம்பவந்தி யா:
தாஸாம் ப்ரஹ்ம மஹத் யோனிர்
அஹம் பீஜ ப்ரத: பிதா

 

குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்

 


14.26

மாம் ச யோ (அ)வ்யபிசாரேண
பக்தி-யோகேன ஸேவதே
ஸ குணான் ஸமதீத்யைதான்
ப்ரஹ்ம-பூயாய கல்பதே

 

எந்தச் சூழ்நிலையிலும் தவறாமல், எனது பூரண பக்தித் தொண்டில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து, பிரம்மன் நிலைக்கு வந்தடைகின்றான்.

 


14.27

ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹம்
அம்ருதஸ்யாவ்யயஸ்ய ச
ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய
ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச

 

மேலும், மரணமற்றதும், அழிவற்றதும், நித்தியமானதும், இறுதி இன்பத்தின் தர்மமுமான அருவ பிரம்மனின் ஆதாரம் நானே

15.5

நிர்மான-மோஹா ஜித-ஸங்க-தோஷா
அத்பாத்ம-நித்யா வினிவ்ருத்த-காமா:
த்வந்த்வைர் விமுக்தா: ஸுக-து:க-ஸம்ஞைர்
கச்சந்த்-யமூடா: பதம் அவ்யயம் தத்

 

பொய் கெளரவம், மயக்கம் மற்றும் தவறான சங்கத்திலிருந்து விடுபட்டு, நித்தியத்தைப் புரிந்து கொண்டு, பெளதிக காமத்தை நிறுத்திவிட்டு, இன்ப துன்பம் என்னும் இருமையை ஒழித்து, மயக்கமுறாமல் இருப்பவர்கள், பரம புருஷரிடம் சரணடைவது எவ்வாறு என்பதை அறிந்து, அந்த நித்திய ராஜ்ஜியத்தை அடைகின்றனர்

 


15.6

ந தத் பாஸயதே ஸூர்யோ
ந ஷஷாங்கொ ந பாவக:
யத் கத்வா ந நிவர்தந்தே
தத் தாம பரமம் மம

 

எனது அந்த பரம வாசஸ்தலம் சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தினாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜட உலகிற்குத் திரும்புவதில்லை

 

15.7


மமைவாம்ஷோ ஜீவ-லோகே
ஜீவ-பூத: ஸனாதன:
மன:-ஷஷ்டானீந்த்ரியாணி
ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

 

இந்தக் கட்டுண்ட உலகில் இருக்கும் ஜீவாத்மாக்கள் எல்லாரும் எனது நித்தியமான அம்சங்களாவர்கட்டுண்ட வாழ்வின் காரணத்தால், மனம் உட்பட ஆறு புலன்களுடன் இவர்கள் மிகவும் கடினமாக சிரமப்படுகின்றனர்

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question