https://youtu.be/wN9fehB9AAU
மோக்ஷத ஏகாதசி மகிமைகுருக்ஷேத்திரத்தில் கிருஷ்ணரால் அர்ஜுனருக்கு கீதை சொல்லப்பட்ட நாள் இது என்பது மோக்ஷத ஏகாதசிக்கு மற்றொரு சிறப்பு.மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் வரும் ஏகாதசியின் மகிமையை விளக்குமாறு கிருஷ்ணரை வேண்டுகிறார் யுதிஷ்டிரர். அந்த ஆர்வமே பாவங்களைப் போக்கி மோக்ஷம் தரவல்லது என்கிறார் கிருஷ்ணர்.இப்புனித நாளில் தூபம், நெய் தீபம், நறு மலர்கள், மற்றும் துளசி மஞ்சரிகளைக் கொண்டு தாமோதரரை வணங்குதல் வேண்டும்.இதன் மகத்துவத்தைக் கேட்போரது இறந்துபோன மூதாதையர் நரகத்திற்குச் சென்றோராயினும் மீண்டு சுவர்கலோகம் செல்வர்.சம்பக நகரம் எனும் அழகிய நகரை வைக்காணசா என்னும் ஒரு பக்தி நிறைந்த மன்னன் ஆண்டு வந்தான். இறந்து போன அவன் தந்தை நரகத்தில் மிகுந்த வேதனை அனுபவிப்பதுபோல் அவனுக்கு ஒரு நாள் கனவு வந்தது. துக்கத்தால் நெகிழ்ந்து போன மன்னன் தன் ஆலோசகர்...