Saturday, December 21

பகவத் கீதை – 18.58

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

மத்-சித்த: ஸர்வ-துர்காணி
மத்-ப்ரஸாதாத் தரிஷ்யஸி
அத சேத் த்வம் அஹங்காரான்
ந ஷ் ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி

மத் – எனது; சித்த – உணர்வில்; ஸர்வ – எல்லா; துர்காணி – தடங்கல்களை; மத்-ப்ரஸாதாத் – எனது கருணையால்; தரிஷ்யஸி – நீ கடந்து விடுவாய்; அத – ஆனால்; சேத் – எனில்; த்வம் – நீ; அஹங்காராத் – அஹங்காரத்தினால்; ந – இல்லை; ஷ்ரோஷ்யஸி – கேட்கவில்லை; வினங்க்ஷ்யஸி – அழிந்து போவாய்.

நீ என்னைப் பற்றிய உணர்வில் நிலைபெற்றால் , எனது கருணையின் மூலம் , கட்டுண்ட வாழ்வின் எல்லாத் தடங்கல் களையும் கடந்துவிடுவாய் . ஆனால் , அத்தகு உணர்வின்றி , அஹங்காரத்துடன் , நான் சொல்வதைக் கேட்காமல் செயல்பட்டால் , நீ அழிந்துவிடுவாய் .

பொருளுரை : முழுமையான கிருஷ்ண உணர்வில் இருப்பவன் , தனது வாழ்வின் கடமைகளை ஆற்றுவதற்காக அளவிற்கதிகமாக கவலைப்படுவ தில்லை . எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுதலை பெற்ற இந்த மிகச் சிறந்த நிலையை முட்டாள்களால் புரிந்துகொள்ள முடியாது . கிருஷ்ண உணர்வில் செயல்படுபவனுக்கு , பகவான் கிருஷ்ணர் மிகவும் நெருங்கிய நண்பராவார் . அவர் தனது நண்பனின் சௌகரியத்தை எப்போதும் பார்த்துக் கொள்கிறார் . அவர் தன்னையே தனது நண்பனிடம் அளிக்கின்றார் . நண்பனோ அவரைத் திருப்தி செய்வதற்காக ஒரு நாளின் இருபத்துநான்கு மணி நேரமும் பக்தியுடன் செயலாற்றுகின்றான் . எனவே , உடல் சார்ந்த வாழ்வின் அஹங்காரத்தில் யாரும் மயங்கிவிடக் கூடாது . யாருமே , தான் ஜட இயற்கையின் சட்டங்களிலிருந்து விடுபட்டவன் என்றோ , விருப்பப்படி செயல்படலாம் என்றோ , தவறாக எண்ணக் கூடாது . அவன் ஏற்கனவே இயற்கையின் கடுமையான சட்டங்களுக்கு உட்பட்டுள்ளான் . இருப்பினும் , கிருஷ்ண உணர்வில் செயல்பட்ட உடனேயே , ஜடத்தின் குழப்பங்களி லிருந்து விடுபட்டு முக்தி பெற்றவனாகின்றான் . கிருஷ்ண உணர்வில் செயல்படாதவன், பிறப்பு இறப்பு கடலில் சுழலில் தன்னையே இழக்கின்றான் என்பதை மிகவும் கவனமாக எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தவொரு கட்டுண்ட ஆத்மாவும், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை உண்மையில் அறிவதில்லை, ஆனால் கிருஷ்ண உணர்வில் செயல்படுபவனின் செயல் ஒவ்வொன்றும் உள்ளிருக்கும் கிருஷ்ணரால் தூண்டப்பட்டு, ஆன்மீக குருவால் உறுதி செய்யப்படுவதால், அவன் சுதந்திரமாகச் செயலாற்ற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question