ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை துளசி செடியின் முன்பு தலைவணங்கி உறுதியுடன் ஜபிப்பவர்களுக்கு ஆன்மிக பலம் அதிகம் உண்டு.
இத்தகைய பலமானது இந்த வழிமுறையை பின்பற்றுவதால் சுலபமாக பெறக்கூடிய ஒன்றாகும்.
–ஸ்ரீசைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 3.100 பொருளுரை
——————————
துளசியை பார்த்தல், தொடுதல், தியானத்தல், புகழ்பாடுதல், வணக்கங்களை சமர்ப்பித்தல் , பாராட்டுதல், நடவு செய்தல், சேவை செய்தல், மற்றும் வழிபடல் ஆகிய 9 வழிமுறைகளை தினமும் செய்வதன் மூலம் பகவான் கிருஷ்ணரின் வீட்டில் 10 மில்லியன் வருடங்கள் வாழலாம்
–பக்தி ரசாம்ருத சிந்து 1.2.204 ஸ்கந்த புராண மேற்கோள்
——————————
துளசியை பார்ப்பதால் எல்லா பாவங்களும் அழியும். துளசியை தொடுவதால் உடல் தூய்மை அடையும். துளசி்க்கு வணக்கங்களை தெரிவிப்பதன் மூலம் அனைத்து துயரங்களும் அழிவடையும் . துளசிசெடிக்கு நீரை விடுவதன் மூலம் மரணத்திலிருந்து விடுபட முடியும். துளசிசெடியை நடவு செய்வதன் மூலம் நமது மனதை கிருஷ்ணருடன் இணைத்து இருக்கும் வாய்ப்பை அளிப்பார். துளசியை கிருஷ்ணரின் பாதத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் துளசிதேவி நமக்கு பிரேம பக்தியினை அளிப்பதன் மூலம் சிறப்பு விடுதலை அளிப்பார். நான் எனது வணக்கங்களை துளசி்க்கு சமர்ப்பிக்கிறேன்.
–பக்தி ரசாம்ருத சிந்து 1.2.203 ஸ்கந்த புராண மேற்கோள்
——————————
மிகவும் புனிதமான துளசிச் செடி எந்த வீட்டில் செழித்து வளர்கின்றதோ, அது புனித தீர்த்த இடத்திற்கு சமமானது. அங்கு எமதூதர்கள் வர இயலாது
-கருட புராணம் சரோதரா 9.7
——————————
ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை இடைவிடாது ஜபித்தல் மற்றும் துளசிச் செடிக்கு தினந்தோறும் நீர் விடல் மற்றும் துளசி்க்கு நமது வணக்கத்தை சமர்ப்பித்தல் – இந்த வழியில் நாம் செயல்படும் பொழுது விரைவாக ஸ்ரீகிருஷ்ணரின் பாத கமலங்களைச் சரணடையும் வாய்ப்பை நாம் பெற முடியும்
-ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் அந்திய லீலை 3.137
——————————
ஒருவர் ஆயிரக்கணக்கான பாவங்கள் உடையவராய் இருந்தாலும் அவர் தன்னுடைய வாழ்க்கையை துளசி மற்றும் துளவி மலர்க்காக அர்ப்பணித்திருக்கும் பொழுது எமதர்மரால் அவரை பார்க்க இயலாது
-கருட புராணம் சரோதரா 9.8
——————————
ஏகாதசி விரதங்களை கடைபிடிப்பது, பகவத் கீதை படிப்பது, கங்கா தீர்த்தம் ஏற்றுக்கொள்வது , துளசி இலை பிரசாதத்தை சாப்பிடுவது, சரணாமிர்தம் ஏற்றுக்கொள்ளல் , பகவான் ஹரியின் நாம ஜபம் ஆகிய இந்த ஆறு வழிமுறைகளும் மரணத்திலிருந்து விடுதலை அளிக்கக் கூடியவை
-கருட புராணம் சரோதரா 8.26
——————————
துளசிச் செடியின் நிழலானது (எங்கு உள்ளளதோ ) இநத ஜட உலகின் அனைத்து விதமான பாவ இருப்புக்களை நீக்க வல்லது. மேலும் மரணத்திலிருந்து (பிறப்பு இறப்பிலிருந்து) விடுதலை தரக்கூடியது. அத்தகைய விடுதலையானது தானம் கொடுப்பதால் பெறுவதைவிட கடினமானது.
-கருட புராணம் சரோதரா 9.6
——————————
உன்னத பகவான் ஸ்ரீஹரி, துளசி இல்லாத யாருடைய வழிபாட்டையும் ஏற்பது இல்லை. ஆகையால் துளசி இலை இல்லாத சூழ்நிலையில் துளசி கட்டையை பகவான் ஹரியின் உடலை தொட பயன்படுத்தலாம். துளசி கட்டையும் கிடைக்காத சூழ்நிலையில் துளசி நாமத்தை ஜபிப்பதன் மூலம் பகவான் ஹரியை வழிபடலாம்.
-ஹரி பக்தி விலாஸ் 7. 263-264 வாயு புராண மேற்கோள்