தேவையான பொருட்கள் :
1. நைலான் ஜவ்வரிசி – 1 கப் (100 கிராம்)
2. வறுத்த வேர்க்கடலை – ½ கப் (50 கிராம்)
3. பச்சை மிளகாய் – 2 பீஸ்
4. இஞ்சி – தேவயான அளவு
5. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
6. ராக்சால்ட் (உப்பு) – தேவையான அளவு
7. நெய் (அ) தேங்காய் எண்ணெய் (அ) கடலை எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வானெலியை அடுப்பில் வைத்து ஜ்வ்வரிசியை அதில் போட்டு தீயை சிம்மில் வைத்து ஜவ்வரிசியை படபட வென்று வெடிக்கும் போது எடுத்து தண்ணீரில் கழுவி தண்ணீரை நன்றாக வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு வேறு பாத்திரத்தில் 2 கப் த்ண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதி வரும் போது அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தை இறக்கி அந்த நீரில் கழுவி வைத்த ஜ்வ்வரிசியை போட்டு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும் 10 அ 15 நிமிடத்தில் ஜவ்வரிசி தண்ணீரை உறிஞ்சி உதிரியாக இருக்கும்.
வானெலியை அடுப்பில் வைத்து நெய் (அ) தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு சிவந்ததும் இஞ்சி பச்சைமிளகாய் பேஸ்ட் போட வேண்டும் வருத்தவேர்க்கடலையை தோல்நீக்கி மிக்சியில் பருபரு வென்று பொடி செய்து அதையும் எண்ணெயில் போட்டு லைட்டாக சிவந்ததும் ஜவ்வரிசியை அதில் போட்டு உப்பு சேர்த்து தீயை சிம்மில் வைத்து நன்றாக கலக்கி கொண்டே இருக்க வேண்டும் நன்றாக சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கவேண்டும் ஜவ்வரிசி உப்புமா தயார்.