Thursday, April 18

ஸ்ரீ ஸ்ரீ சத் கோஸ்வாமி அஷ்டகம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ நிவாச ஆச்சாரியரால் பாடப்பட்ட பாடல்

1
கிருஷ்ணோ கீர்த்தன கான நர்த்தன பரெள
பிரேமாம்ருதாம் போ நிதி
தீராதீர ஜனபிரியெள பிரிய கரெள
நிர்மத்சரெள பூஜிதெள
ஸ்ரீ சைத்தன்ய கிருபா பரெள புவி புவோ
பாராவ ஹந்தாரகெள
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள
2
நாண சாஸ்த்ர விசாரணைக நிபுணெள
சத் தர்ம சமஸ்தாபகெள
லோகானாம் ஹித காரிணெள திரிபுவனே
மான்யெள சரண்யாகரெள
ராதா கிருஷ்ண பாதாரவிந்த பஜனா
நந்தேன மத்தாலிகெள
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள
 
3
ஸ்ரீ கெளரங்க குணானுவர்ணன விதெள
சிரத்தா சம்ருத்யன்விதெள
பாபோத்தாப நிகிருந்தனெள தனு பிறுதாம்
கோவிந்த கானாம்ருதை
ஆனந்தாம்புதி வர்த்தனக நிபுணெள
கைவல்ய நிஸ்தாரகெள
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள
4
த்யக்த்வா தூர்ணம் அசேச மண்டல பதி
ச்ரேணீம் சதா துச்சவத்
பூத்வா தீன கணேசகெள கருணயா
கெளபீன காந்தாஸ்ரிதெள
கோபி பாவ ரசாமிருதாப் திலகரி
கல்லோல மக்னெள முஹீர்
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள
5
கூஜாத் கோகில ஹம்ச சாரச கணா
கீர்ணே மயூரா குலே
 நான ரத்ன நிபத்த மூல விதப
ஸ்ரீ யுக்த விருந்தாவனே
ராதாகிருஷ்ணம் அஹர்நிசம் பிரபஜதெள
ஜீவார்த்ததெள யெள முதா
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள
6
சாங்க்ய பூர்வக நாம கான நடிபி
காலா வசானீ கிருதெள
நித்ராஹார விஹாரகாடி விஜிதெள
சாத்யந்த தீனெள ச யெள
ராதாகிருஷ்ண குணஸ்மிருதேர் மதுரிமா
நந்தேன சம்மோகிதெள
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள
7
ராதா குணட தடே கலிந்த தனயா
தீரே ச வம்சீவடே
பிரேமோன்மாத வசாத் அசேசதஸயா
கிரஸ்தெள பிரமத்தெள சதா
காயந்தெள ச கதா ஹரேர்குணவரம்
பாவாபிபூதெள முதா
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள
8
ஹே ராதே வ்ரஜ தேவிகே ச லலிதே
ஹேநந்த சூனோ குத
ஸ்ரீ கோவர்த்தன கல்ப பாதப தலே
காலிந்தீ வனே குத
கோசந்தாவ் இதி சர்வதோ விரஜ புரே
கேடைர் மஹா விஹ்வலெள
வந்தே ரூப சனாதனெள ரகுயுகெள
ஸ்ரீ ஜீவ கோபால கெள

1

 
பகவான் கிருஷ்ணரின் புனித நாமங்களை ஓதுவதிலும், பாடுவதிலும், பரவசத்தில் ஆடுவதிலும் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு என் பணிவான வணக்கங்களைச் செலுத்துகிறேன். அவர்கள் கடவுளின் அன்புக்கடலைப் போன்றவர்கள். மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளாதவர்களாதலால் முரடர்களிடத்தும் இரக்கம் உடையவர்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அவை மற்றவர்களைத் திருப்திப் படுத்துவனவாகவேயிருக்கும் – பகவான் சைத்தன்யரின் முழு அருளையும் உடையவர்கள். ஆகவே இந்த பிரபஞ்சத்தில் ஆத்மாக்களை விடுவிக்கும் பணிகளில் ஈடுபட்டவர்கள்.
 
2
மனித இனத்திற்கு நன்மை பயக்கும் விதத்தில் நிலையான சமயக்கோட்பாடுகளை நிலைநாட்டும் நோக்கத்திற்காக. அதிகாரம் வாய்ந்த சாஸ்திரங்களை நுணுக்கமாகப் படிப்பதில் வல்லுனர்களான ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு எங்கள் பணிவான வணக்கங்கள். அவர்கள் மூவுலகங்களிலும் புகழப்படுகிறார்கள். ராதா கிருஷ்ணரின் திவ்வியமான உன்னத பக்திசேவையில் ஈடுபட்டு கோபிகளின் நிலையில் மூழ்கியிருப்பதால் அவர்கள் சரணடைவதற்கு ஏற்ற தகுதியுடையவர்கள்.
 
சைத்தன்ய மஹா பிரபுவைப்பற்றிய விளக்கங்களில் மிக தேர்ச்சியடைந்தவர்களும், அவரது திவ்வியமான உன்னத தன்மைகளைப்பற்றி கூறுவதில் திறமைபெற்றவர்களுமான ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு என் பணிவான வணக்கங்கள். கோவிந்தனுடைய திவ்வியமான உன்னத பாடல்களைப்பாடி கருணையைப் பொழிவதில் பந்தப்பட்ட ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கி தூயமைப்படுத்தக் கூடியவர்கள் அவர்கள். உன்னதமான ஆனந்த பரவசத்தில் ஆழ்த்துவதில் வல்லவர்கள். மோக்ஷத் தையே நோக்கமாகக் கொண்ட நிலையிலிருந்து ஜீவராசிகள்க் காப்பவர்கள்.
 
4
அரசாங்க தொடர்புகள் முக்கியமற்றதென அவற்றை உதறிவிட்டு பெரும்பதவிகளைத் துறந்து வந்த ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு என் பணிவான வந்தனங்கள். அவர்கள் பிரபஞ்சத்தில் பந்தப்பட்ட ஆத்மாக்களை விடுவிக்கும் நோக்கத்துடன் கந்தல் துணியை கட்டிக் கொண்டு பிச்சைக்காரர்கள் போல் தங்களை ஆக்கிக் கொண்டபோதிலும் எப்பொழுதும் பகவான் கிருஷ்ணரில் கோபிகள் கொண்ட அன்பு போல் – பிரேமையில் – ஆனந்த பரவசம் கொண்டவர்களாய் – அதே பக்தி சமுத்திரத்தின் அலைகளில் மீண்டும் மீண்டும் மூழ்கியிருந்தார்கள்
 
5
வேரினடியில் விலைமதிப்பற்ற ரத்தினங்களைக் கொண்டதும், பூக்களும், பழங்களும் நிறைந்து அழகானதுமான மரங்களைக் கொண்டவிருந்தாவனமெனும் புண்ணிய திவ்வியமான உன்னத பூமியில் ராதாகிருஷ்ண வழிபாட்டில் முற்றாக தங்களை ஈடுபடுத்திய ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு என் பணிவான வந்தனங்கள் கோஸ்வாமிகள் ஜீவராசிகளனைத்தினதும் வாழ்க்கையின் இலட்சியத்திற்கேற்ப வரமளிப்பதில் சிறந்தவர்கள்.
 
6
காலந்தவறாது வணங்கிக் கொண்டு புனித நாமங்களை ஓதிக்கொண்டு இருக்கின்ற ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு என் பணிவான வந்தனங்கள்.
அவர்கள் எப்பொழுதும் தூய பக்தி சேவைகளிலேயே தங்கள் விலைமதிப்பற்ற வாழ்வை பிரையோகப்படுத்தினர். அதற்காக உண்ணுதல், உறங்குதல், இவற்றை விட்டு பகவானின் திவ்வியமான உன்னத தன்மைகளை நினைத்து அடக்கமும் பணிவும் உடையவர்களாக இருந்தனர்.
 

 

7
சிலவேளைகளில் ராதா குண்டத்தின் (குளம்) கரையிலும், சில வேளைகளில் யமுனைக்கரையிலும் சில வேளைகளில் வம்சி வாடாவிலும் திரிந்து கொண்டு கிருஷ்ணப்பிரேமையில் பரவசத்தில் – பைத்தியம் பிடித்தவர்கள் போல் கிருஷ்ண உணர்வில் முழ்கியவர்கலாய் உடம்பில், பல திவ்வியமான லீலைகளின் அறிகுறிகள் தோன்றத்திரிந்த ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு என் பணிவான வந்தனங்கள்.
 

 

8
ஓ விருந்தாவனத்தின் அரசியே ! ராதா ராணியே ! ஓ லலிதா ! ஓ நந்த மகாரஜாவின் மைந்தனே. நீங்கள் எல்லோரும் இப்போ எங்கு இருக்கிறீர்கள், கோவர்த்தன மலையின் மேல் இருக்கிறீர்கள் அல்லது யமுனைக்கரையில் உள்ள மரங்களுக்கு கீழ் இருக்கிறீர்களா ? என்று கூவிக்கொண்டு திரியும் ஸ்ரீ ரூபகோஸ்வோமி, ஸ்ரீ சனாதன கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஸ்ரீ ரகுநாததாச் கோஸ்வாமி, ஸ்ரீ ஜீவகோஸ்வாமி, ஸ்ரீ கோபாலபட்ட கோஸ்வாமி ஆகிய ஆறு கோஸ்வாமிகளுக்கு என் பணிவான வணக்கங்கள்.
 
+7
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question