Wednesday, December 4

ஸ்ரீ நாம-கீர்த்தனை(கீதாவளியிலிருந்து)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும்.

(1)
யசோமதி-நந்தன-ப்ரஜ-பரோ-நாகர
கோகுல-ரஞ்சன கான
கோபி-பராண-தன மதன-மனோஹர
காலிய-தமன-விதான
(2)
அமல ஹரிநாம் அமிய-விலாஸா
விபின-புரந்தர நவீன நாகர-போர
வம்சி-வதன ஸுவாஸா
(3)
வ்ரஜ-ஜன-பாலன அஸுர-குல-நாசன
நந்த-கோதன-ராகோவாலா
கோவிந்த மாதவ நவநீத-தஸ்கர
சுந்தர நந்த-கோபாலா
(4)
யமுனா-தட-கர கோபி-பஸன-ஹர
ராஜ-ரஸிக க்ருபாமோயா
ஸ்ரீ-ராதா-வல்லப வ்ருந்தாவன-நடபர
பக்திவிநோத்-ஆச்ர்ய


1)
பகவான் கிருஷ்ணர் அன்னை யசோதையால் நேசிக்கப்படுகிறார்; விரஜபூமியின் தெய்வீக காதலரும், கோகுலத்தை மகிழ்ச்சியூட்டுபவரும், கோபிகைகளின் வாழ்க்கைச் செல்வமும் அவரே, மன்மதர்களின் மனதையும் திருடும் அவர், காளியன் என்ற பாம்பை தண்டிக்கிறார்.
2)
பகவான் ஹரியின் புனிதமான நாமங்கள் முழுவதும் அமிர்தச்சுவை போன்றதாகும். கிருஷ்ணர் விருந்தாவனத்தின் பன்னிரெண்டு வனங்களுக்கு பிரபு ஆவார். எப்பொழுதும் இளமையான அவர், அன்பிற்ச் சிறந்தவர். எப்பொழுதும் புல்லாங்குழலுடன் விளையாடும்அவர், ஆடை அணிகலங்களில் கைதேர்ந்தவர்.
3)
விருந்தாவன வாசிகளின் காவலரான கிருஷ்ணர், அநேக அசுரவம்சத்தை அழித்தார். பசுக்களை பராமரித்து, இன்பமளிக்கிறார். அதிர்ஷ்ட தேவதையின் மணாளனும், வெண்ணை திருடுபவரும், நந்த மகராஜாவின் அழகிய புதல்வரும் அவரே.
4)
கிருஷ்ணர் யமுனா நதிக்கரையோரத்தில் சஞ்சரிக்கிறார். அங்கே குளித்துக் கொண்டிருந்த விருந்தாவன இளம் பெண்களின் ஆடைகளை திருடினார். ராச நடனத்தின் நயத்தில் அவர் இன்பமூட்டுகிறார். மிகவும் கருனை உள்ள அவர், ஸ்ரீமதி ராதா ராணியின் அன்புக்கு பாத்திரமானவர். விருந்தாவனத்தின் மிகச்சிறந்த நாட்டியக்காரர், பக்தி வினோத
தாகூரரின் புகலிடம் அவரே.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question