Thursday, April 18

ஸ்ரீ தசாவதார—ஸ்தோத்ரம் (ஜெய தேவ கோஸ்வாமியின் கீத கோவிந்தத்திலிருந்து)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

(1)
ப்ரளய-பயோதி-ஜலே த்ருதவான் அஸி வேதம்
விஹித-வஹித்ர-சரித்ரம் அகேதம்
கேசவ த்ருத-மீன-சரீர ஜெய ஜகதீச ஹரே
(2)
க்ஷிதிர் இஹ விபுலதரே திஷ்டதி தவ ப்ருஷ்டே
தரணி-தாரண-கிண-சக்ர-கரிஷ்டே
கேசவ த்ருத-கூர்ம-சரீர ஜெய ஜகதீச ஹரே
(3)
வஸதி தசன-சிகரே தரணீ தவ லக்னா
சசனி கலங்க-கலேவ நிமக்னா
கேசவ த்ருத-சூகர-ரூப ஜெய ஜகதீச ஹரே
(4)
தவ கர-கமல-வரே நகம் அத்புத-ச்ருங்கம்
தலித-ஹிரண்ய கசிபு-தனு-ப்ருங்கம்
கேசவ த்ருத-நரஹரி-ரூப ஜெய ஜகதீச ஹரே
(5)
சலயஸி விக்ரமணே பலிம் அத்புத-வாமன
பத-நக-நீர-ஜனித-ஜன-பாவன
கேசவ த்ருத-வாமன-ரூப ஜெய ஜகதீச ஹரே
(6)
க்ஷத்ரிய-ருத்ர-மயே ஜகத்-அபகத-பாபம்
ஸ்னபயஸி பயஸி சமித-பவ-தாபம்
கேசவ த்ருத-ப்ருகுபதி-ரூப ஜெய ஜகதீச ஹரே
(7)
விதரசி திக்ஷு ரணே திக்-பதி-கமணீயம்
தச-முக-மெளலி-பலிம்ரமணீயம்
கேசவ த்ருத-ராம-சரீர ஜெய ஜகதீச ஹரே
(8)
வஹஸி வபுஷி வஸதே வசனம் ஜலதாபம்
ஹல-ஹதி-பீதி-மிலித-யமுனாபம்
கேசவ த்ருத-ஹலதர-ரூப ஜெய ஜகதீச ஹரே
(9)
நிந்தஸி யஞ்ஞ-விதேர் அஹஹ ஸ்ருதி-ஜாதம்
ஸ்தய-ஹ்ருதய தர்சித-பக-காதம்
கேசவ த்ருத-புத்த-சரீர ஜெய ஜகதீச ஹரே
(10)
ம்லேச்ச-நிவஹ-நிதனே கலயஸி கரவாலம்
தூமகேதும் இவ கிம் அபி கராலம்
கேசவ த்ருத-கல்கி-சரீர ஜெய ஜகதீச ஹரே
(11)
ஸ்ரீ-ஜெயதேவ-கவேர் இதம் உதிதம் உதாரம்
ச்ருணு ஸுக-தம் சுப-தம் பவ-ஸாரம்
கேசவ த்ருத-தச-வித-ரூப ஜெய ஜகதீச ஹரே
(12)
வேதான் உத்தரதே ஜகந்தி வஹதே பூ-கோளம் உத்பிப்ரதே
சைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ர-க்ஷயம் குர்வதே
பெளலஸ்த்யம் ஜயதே ஹலம் கலயதே காருண்யம் ஆதன்வதே
ம்லேச்சான் மூர்சயதே தசாக்ருதி-க்ருதே க்ருஷ்ணாய துப்யம் நம;


1)
ஓ கேசவா! பிரபஞ்ச பிரபுவே! மீன் உருவத்தை எடுத்த பகவான் ஹரியே, எல்லாப் புகழும் உமக்கே! அழிவை உண்டாக்கும். கொந்தளிப்பான கடலுக்குள்ளே மூழ்கியிருந்த வேதங்களைக் காப்பதற்காக, பெரிய மீன் உருவை ஒரு படகு போல மிக சுலபமாக ஏற்றுக் கொண்டீர்கள்.
2)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! ஆமை உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லா புகழும் உமக்கே! இந்த அவதாரத்தில் பாற்கடலை கடைவதற்காக பிரம்மாண்டமான உமது ழுதுகை ஒரு அச்சு போல பயன்படுத்தி மந்தார மலையை தாங்கி நிற்கிறீர்கள். பிரம்மாண்டமான மலையை சுமந்ததினால் முதுகில் பெரிய வடுவை உடையவராக இருக்கிறீர். இது உமக்கு பெரும் புகழைத் தருகிறது.
3)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! காட்டுப்பன்றியின் உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லாப் புகழும் உமக்கே! இந்த பிரபஞ்சத்திற்கு அடியில் கர்போதக கடலில் ஆழ்ந்திருந்த பூமியை, சந்திரனுக்கு மேலே ஒரு புள்ளியைப் போல் உம்முடைய கோரமான பல்லின் நுனியில் தாங்குகிறீர்கள்.
4)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! பாதி மனிதன், பாதி சிங்ககத்தின் உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லாப் புகழும் உமக்கே! சிறு பூச்சியை ஒருவர் மிக சுலபமாக விரல் நகங்களுக்கிடையே வைத்து நசுக்குவது போல, சக்தி வாய்ந்த அசுரன் ஹிரண்ய கசிபுவின் உடல் உமது தாமரைக் கைகளில் உள்ள மிக அற்புதமான கூரிய நகங்களால் கிழித்தெரியப்பட்டது.
5)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! குள்ள பிராமண(வாமன) உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லாப் புகழும் உமக்கே. மாபெரும் பாத அடிகளால் அரசர் பலிச்சக்ரவர்த்தியை பணியவைத்தீர்கள், உங்களுடைய பாத விரல் நுனியிலிருந்து வெளிப்பட்ட கங்கை நீரின் மூலம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளையும் விடுவிக்கிறீர்கள்.
6)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! பரசுராம உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லாப் புகழும் உமக்கே! குருட்சேத்திரத்தில் உம்மால் கொல்லப்பட்ட அசுர அரசர்களின் உடலிலிருந்து வந்த ரத்த ஆற்றில் இந்த பூமியை கழுவுகிறீர்கள். இவ்வாறு உலகத்தின் பாவங்கள் கழுவப்பட்ட உம்மால், மக்கள் பெளதிக வாழ்க்கை என்ற பற்றி எரியும் நெருப்பிலிருந்து விடுபட்டுள்ளார்கள்.
7)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! ராமச்சந்திர உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லாப் புகழும் உமக்கே! இலங்கைப் போரில் பத்து தலை கொண்ட அசுரன் ராவணனைக் கொன்று, அவனுடைய தலைகளை இந்திரன் தலைமையிலான பத்துதிசைகளையும் நிர்வகிக்கும் தேவர்களுக்கு விரும்பிய பலியாக விநியோகிக்கிறீர்கள், இச்செயல் அவர்கள் எல்லோராலும் விரும்பப்பட்டது.
8)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! கலப்பையை கையாளும் பலராம உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லா புகழும் உமக்கே! மழை மேகம் போன்ற ஜொலிக்கும் நீல வண்ண ஆடைகளை உங்களுடைய பளபளப்பான வெண் நிற உடலில் அணிந்திருக்கிறீர்கள். இத்தகைய ஆடைகள் யமுனா நதியின் அழகிய மேக வர்ணத்தைப் போல் உள்ளது, யமுனையானது உமது கலப்பையின் தாக்குதலில் அச்சமுற்றிருக்கிறது.
9)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! புத்தர் உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லாப் புகழும் உமக்கே! கருணையுள்ளம் கொண்ட புத்தரே, வேதங்களில் விதிக்கப்பட்ட கேள்விகளுக்கேற்ப நடத்தப்பட்ட மிருகவதையை தடுத்து விட்டீர்கள்.
10)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! கல்கி உருவத்தை எடுத்த பகவான் ஹரியே! எல்லாப் புகழும் உமக்கே! அச்சமூட்டும் வால் நட்சத்திரம் போன்ற ஒரு வாளை ஏந்தி நீங்கள் தோன்றுகிறீர்கள். இந்த அவதாரமானது, கலியுக முடிவில் துர்நடத்தையுள்ள, காட்டுமிராண்டித்தனமான மனிதர்களை அழிப்பதற்காகும்.
11)
ஓ கேசவா! பிரபஞ்சத்தின் பிரபுவே! பத்து வகையான வெவ்வேறு உருவத்தில் அவதரித்த பகவான் ஹரியே! எல்லா புகழும் உமக்கே! எல்லோரும் புலவர் ஜெய தேவ கோஸ்வாமியின் இந்த பாடலை கேளுங்கள். இது மிகவும் அற்புதமானது, மகிழ்ச்சிக்கு ஒரு சான்றிதழ், மங்கள கரத்தை அளிக்கக்கூடியது. மேலும் இந்த இருண்ட உலகிற்க்கு இது மிகச் சிறந்ததாகும்.
12)
ஓ கேசவா! உமக்கு எனது பணிவான வணக்கங்கள். நீங்கள் பத்து அவதாரத்தை எடுத்துள்ளீர்கள். மத்ஸ்ஸய அவதாரத்தில் வேதங்களை காப்பாற்றினீர்கள், கூர்மா அவதாரத்தில் உமது முதுகில் மந்தார மலையை தாங்கினீர்கள், வராக அவதாரத்தில் கர்பக்கடலில் இருந்து பூமியை உமது கோரைப் பற்களால் ஏந்தி காத்தீர்கள். நரசிம்ம அவதாரத்தில் ஹிரண்யகசிபுவின் மார்பை கிழித்தெரிந்தீர்கள், வாமன அவதாரத்தில் அரசர் பலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டு, மிகப்பெரிய உருவமாக மாறிமுழு உலகையும் அளந்து பெற்றுக் கொண்டீர்கள், பரசுராமராக தோன்றி கெட்ட அரசர்களை கொன்று குவித்தீர்கள். ராமராக தோன்றி ராவணனை வென்றீர்கள், பலராம அவதாரத்தில் துஷ்டர்களை அழித்துவிடும் கலப்பையை ஏந்தி, யமுனாநதியை உங்களை நோக்கி வரவழைக்கின்றீர்கள். புத்த அவதாரத்தில் உலகில் துன்பப்படும் அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டினீர்கள். கலியுக முடிவில் கீழ்த்தரமான மனிதர்களை (மிலேச்சர்கள்) அழிப்பதற்க்காக கல்கியாக அவதரிக்கிறீர்கள்.

+7
error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question