Saturday, July 27

ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

நமஸ்தே நரசிம்மாயா
ப்ரஹ்லாதாலாத-தாயினே
ஹிரண்யகசிபூர் வக்ஷ:
சிலா-டங்கான காலாயே
இதோ நரசிம்மா பரதோ நரசிம்மோ
யதோ யதோ யாமித தோ நரசிம்ம
பஹிர் நரசிம்மோ ஹ்ருதயே நரசிம்மோ
நரசிம்ஹம் ஆதிம் சரணம் ப்ரபத்யே
நரசிம்மஸ்துதி
(தஸாவதார ஸ்தோத்திரத்திலிருந்து)
தவகர-கமல-வரே நகம் அத்புத்-ஸ்ருங்கம்
தலித-ஹிரண்யகசிபு-தனு-ப்ருங்கம்
கேசவ த்ருத-நரஹரி-ரூபா ஜய ஜகதீச ஹரே


1
ஹிரண்யகசிபுவின் பாறை போன்ற மார்பினை தன் கூரிய உழி போன்ற நகங்களால் கிழித்தெரிந்தவரும், பிரஹலாதனின் ஆனந்தத்திற்கு காரணமானவருமான பகவான் ஸ்ரீ நரசிம்மரை நான் வணங்குகிறேன்.
2
பகவான் நரசிம்மர் இங்கும், அங்கும் செல்லும் இடமெல்லாம் இருக்கிறார். அகத்திலும் புறத்திலும் கூட இருக்கிறார் காரணங்களுக்கெல்லாம் காரணமான பகவான் நரசிம்மரை நான் தஞ்சமடைகிறேன்.
3
ஓ கேசவா, பிரபஞ்சத்தின் பிரபுவே, ஓ ஹரியே பாதி மனிதனும் பாதி சிங்கமுமான உருவத்தை ஏற்ற உமக்கு எல்லா புகழும் உரித்தாகுக. ஒருவன் தனது விரல் நகங்களுக்கிடையே சிறு பூச்சியை நசுக்குவது போல, அசுரன் ஹிரண்யகசிபுவின் உடலை உமது அழகிய விரல் நகங்களால் கிழித்தெரிந்து விட்டீர்கள்.

************************************************************************

நரஸிம்ஹ கவச பீஜ மந்திரம்

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணு:
ஜ்வலந்தம் சர்வதோ முகம்
நரஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யூர் ம்ருத்யும் நமாமியஹம்


உக்ரமானவரே, சக்தி வாய்ந்தவரே, மிகச்சிறந்த விஷ்ணுவே, நெருப்பு போல தகிப்பவரே, எல்லா திசைகளிலும் முகத்தை கொண்டவரே, பயத்தை கொடுப்பவரே, மரணத்தை வென்றவனுக்கும் மரணத்தை கொடுப்பவரே, நரஸிம்மரே உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question