Thursday, September 19

பக்தி யோகம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பக்தி யோகம் - மிக சிறந்த யோகம் மாஹாமந்திர ஜப யோகம்

"மஹாமந்திரம்" ஓர் விளக்கம்

 

“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
 கிருஷ்ண  கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம 
ஹரே ஹரே”
என்ற 16 வார்த்தை அடங்கிய மந்திரமே மஹாமந்திரம்

 

இல்லை. இம் மஹாமந்திரம். “கலி சந்தரண உபநிஷத்” என்ற உபநிஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

“மன்” என்றால் மனம் என்றும், “திரா” என்றால் விடுவிப்பது என்றும் பொருள். ஆகையால் மந்திரம் என்றால், மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது துன்பங்களில் இருந்து மனதை விடுப்பது மந்திரம் எனப்படும்.

 

எல்லா மந்திரங்களுக்கும் பெரிய மந்திரம் “மஹாமந்திரம்”. சாரதாரணமக ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்திலிருந்து மனதை விடுவிக்கும். ஆனால் “மஹா மந்திரம்” என்றால். எல்லா வகையான துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்தது என்று பொருளாகும்.

ஜப யோகம் பற்றிய விளக்கங்கள்

 

“யோகம்” என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு “இணைத்தல்” என்று பொருள். அதாவது யோகப் பயிற்சி செய்பவரை மிக உயர் சக்தியாகிய இறைவனுடன் இணைத்தலே யோகம் எனப்படும்.

 

பாகவானின் நாமங்களை, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடாது உச்சரித்து வருவது, ஜபம் எனப்படும்.

 

பாகவானின் நாமங்களை, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடாது உச்சரித்து வருவதால்,இறைவனுடன் தொடர்பு கொள்வதே ஜப யோகம் எனப்படும்.

 

“ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே”
என்ற 16 வார்த்தை அடங்கிய மந்திரமே மஹாமந்திரத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தினசரி விடாது உச்சரித்து வரும் ஜப யோகமே, “மஹாமந்திர ஜப யோகம்” எனப்படும்.

மஹா மந்திரம் ஜப யோகம் செய்வதற்கான விதிமுறைகள் யாவை ?

 

எல்லா மதத்தினரும், இனத்தினரும், ஜாதியினரும், மொழியினரும் எவ்வித வேறுபாடும் இன்றி சொல்லலாம்.

எந்த இடம், நேரம், சூழ்நிலைகளில் சொல்லலாம். 
உட்கார்ந்தோ, நின்றோ, நடந்தோ, எந்நிலையிலும் சொல்லலாம்.
பயணத்தின் போதும், பல இடங்களில் காத்திருக்கும் பொழுதும், உறக்கதின் இடையிலும் கூட சொல்லலாம்.

 

சுத்தமாகவோ, சுத்தமற்ற நிலையில் இருந்தாலும் சொல்லலாம். மனம் குழம்பிய அல்லது தெளிவான நிலையிலும் சொல்லலாம். விரும்பியோ, விரும்பாமலோ சொல்லலாம்.

 

குறைபட சொன்னாலும், குறையில்லை. எப்படி சொன்னாலும், இம்மந்திரம் நன்மையே பயக்கும். குறைபட சொல்பவர்களின் குறைகளையும், இம்மந்திரமே, அதன் மகிமையால், படிப்படியாக நீக்கிவிடும். பகவத்கீதை 10.25ல், “யாகங்களில் நான் ஜப யாகமாய் இருக்கிறேன்” என்று கிருஷ்ணர் கூறுவது “பகவானின் நாமமே, ஜபமாக செய்யப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்துகிறது.

தினசரி மந்திரத்தை சொல்வதற்கு, தொடர்ந்த வழிகாட்டுதல்கள் தேவையில்லை

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question