Wednesday, October 16

பகவத் கீதை – 2.27

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர்
த்ருவம் ஜன்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே (அ)ர்தே
நத்வம் ஷோசிதும் அர்ஹஸி

Synonyms:
ஜாதஸ்ய — பிறந்தவன்; ஹி — நிச்சயமாய்; த்ருவ: — உண்மை; ம்ருத்யு:—மரணம், த்ருவம்—அதுவும் உண்மை; ஜன்ம — பிறப்பு; ம்ருதஸ்ய — இறந்தவனின்; ச — மேலும்; தஸ்மாத் — எனவே; அபரிஹார்யே — தவிர்க்க முடியாதது; அர்தே — பற்றிய பொருளில்; ந — வேண்டாம்; த்வம் — நீ; ஷோசிதும் — கவலைப்பட; அர்ஹஸி — தகுதி.

Translation:
பிறந்தவன் எவனுக்கும் மரணம் நிச்சயம், மரணமடைந்தவன் மீண்டும் பிறப்பதும் நிச்சயமே. எனவே, தவிர்க்க முடியாத உன் கடமைகளைச் செயலாற்றுவதில், நீ கவலைப்படக் கூடாது.

Purport:
வாழ்வில் ஒருவன் செய்யும் செயல்களுக்கேற்ப அவன் மறுபிறவி எடுத்தாக வேண்டும். மேலும், ஒரு முறை செயல்களை முடித்த பின், மீண்டும் பிறப்பதற்காக இறந்தாக வேண்டும். இவ்வாறு முக்தியின்றி, பிறப்பும் இறப்பும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்த வண்ணம் உள்ளன. எனினும், பிறப்பும் இறப்பும் தொடர்கின்றன என்ற கருத்து, கொலை, மிருகவதை, போர் முதலிய தேவையற்ற செயல்களை ஆதரிப்பதில்லை. அதே நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்காக, வன்முறையும் போரும் மனித சமுதாயத்தில் தவிர்க்க முடியாதவை.

பகவானின் விருப்பமான குருஷேத்திரப் போர் தவிர்க்க முடியாததாகும்; மேலும், நேர்மைக்காகப் போரிடுவது சத்திரியனின் கடமை. தனக்குரிய கடமையைச் செய்வதில், உறவினரின் இழப்புக்காக அர்ஜுனன் ஏன் கவலைப்படவோ ஐயப்படவோ வேண்டும்? சட்டத்தை மீற அவனுக்கு உரிமையில்லை; ஏனெனில், அவ்வாறு செய்தால் அவன் மிகவும் பயந்து கொண்டிருந்த பாவ விளைவுகளை அவன் அடைந்தாக வேண்டும். தனக்குரிய கடமையை புறக்கணிப்பதால் தனது உறவினரது மரணத்தை அவன் நிறுத்த முடியாது என்பது மட்டுமல்ல, தவறான முடிவை எடுத்ததற்காக இழிந்தவானகி விடுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question