Tuesday, October 15

குருதேவ்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும்.

(1)
குருதேவ்
கிருபா பிந்து தியா கோரோ யே தாஸே
திருணாபேகா அதிஹீன
சகலசஹனே, பலதியா கோரோ
நிஜ மானே ஸ்ப்ருஹாஹீன
(2)
சகலேசம்மான கோரிதே ஷகதி
தேஹோ நாத ஜதாஜத
தபே தோ காய்போ ஹரி நாம சுகே
அபராத ஹ பே ஹத
(3)
கபே ஹேனோ கிருபா லபியா ஏஜன
கிருதார்த்த ஹோய்பே நாத
சக்தி புத்திஹீன ஆமி அதி தீன
கோரோ மோரே ஆத்ம ஸாத
(4)
ஜோக்யதா விசாரே கிச்சு நாஹி பாய்
தோமார கருணா ஸார
கருணா நா ஹோய்லே காந்தியா காந்தியா
ப்ராண நா ராகிபோ ஆர


(1)
குருதேவ ! உமது கருணைத்துளியால் உமது சேவகனாகிய என்னை புல்லிலும் பார்க்க மிகப் பொறுமையுடையவனாக ஆக்க வேண்டும். எல்லாவித துன்பங்களையும் தொந்தரவுகளையும் தாங்குவதற்கு சக்தி அளிக்க வேண்டும், என் சொந்தப் பெருமைக்காகவும் புகழுக்காகவும் உள்ள ஆசைகளிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்.
(2)
ஓ, தலைவா ! பிரபு எல்லா ஜீவராசிகளையும் முறையாக கெளரவிப்பதற்குரிய சக்தியை எனக்கு தந்தருளவேண்டும். அப்போது தான் நான் ஆனந்த பரவசத்தில் மூழ்கி புனித நாமங்களைப் பாடுவேன். எனது குற்றங்களும் நீங்கும்.
(3)
ஓ, தலைவா ! பிரபு எப்போது இந்த அடியேன் உங்கள் கருணையைப் பெற்று உய்வது ? நான் மிக வீழ்ச்சியடைந்தவன், கீழானவன், விவேகமற்றவன், பலமற்றவன், தயவுசெய்து என்னை உங்கள் அன்பான சேவகனாக ஆக்க வேண்டும்.
(4)
என்னைப்பற்றி நான் பார்த்த பொழுது எந்த விதத்திலும் பெருமதிப்பற்றவன். ஆகவே, உமது கருணை எனக்கு அவசியம் தேவைப்படுகிறது, நீர் என்மீது கருணை கொள்ளாவிடில் நான் தொடர்ச்சியாக கதறியழுது கொண்டே இருக்க வேண்டியதுதான், நான் தொடர்ந்து உயிர்வாழ மாட்டேன்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question