Friday, July 12

இறக்கும் கலை

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இறக்கும் கலை

        ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை , இறப்பும் இல்லை என்று முன்பே அறிந்திருக்கிறோம் . அது ஆண்டவனுடைய சக்தி என்பதனால் அவருடைய திருலோகம் போய் சேராதவரை இந்த பிரம்மாண்டத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது . தன்னுடைய கர்மங்களுக்கேற்ப சில நேரம் பூலோகத்திலும் சில நேரம் கீழ் லோகத்திலும், சில நேரம் மேல் லோகத்திலும் பிரயாணம் செய்கின்றது.

சாஸ்திரத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது .
ப்ரம்மாண்ட ப்ரமிதே கோனே பாக்யவான் ஜீவ
குரு க்ருஷ்ண ப்ராஸ தே பாய் பக்திலதா பீஜ

இந்த பிரமாண்டத்திலேயே அதிக பாக்கியவான் யாரென்றால் குரு மற்றும் கிருஷ்ணரின் அனுக்கிரகம் பெற்றவன். அவன் இந்த உலகில் மறுபடியும் பிறப்பது கிடையாது. அதுவரை இவ்வுலகத்தில் தொடர்ந்து பிறப்பு இறப்பு எனும் சக்கரத்தில் கழல்கின்றான்.

பாஸ்கஸ்மாத்து பாவோன்யோ வ்யக்தோவ்யத்தாத் ஸதாதக :
ய : ஸ ஸர்வேஷு பூதேஷு ‘ நஷ்யத் ஸு ந வினஸ்யதி

தோன்றி மறையும் இந்த ஜடத்திற்கு அப்பால் நித்தியமானதும் திவ்யமானதுமான மற்றொரு தோன்றாத இயற்கை உள்ளது. அது பரமமானது என்றும் அழிவடையாதது. இவ்வுலகிலுள்ள அனைத்தும் அழிவடையும் போதும் , அப்பகுதி அழிவதில்லை .
– பகவத்கீதை 8.20

தற்காலிகமான இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் இரண்டு வழிகளில் ! தன்னுடைய உடலை விட்டு செல்கின்றனர் . ஆத்மாவிற்கு மனம், அறிவு, பொய்த்தன்னுணர்வு ஆகியவை வாகனமாகச் செயற்பட்டு ஒருவனைப் புதிய வாழ்வின் பாதையில் கொண்டு செல்கின்றது.

ஷுக்ல க்ருஷ்ணே கதீ ஹ்யதே ஜகத : ஷாஷ்யதே மதே
ஏகயா யாத் – யனாவ் ருத்திம் அன்ய யாவர் ததே புன:

வேதக்கருத்தின்படி இந்த உலகிலிருந்து செல்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஒளியில், மற்றது இருளில், ஒளியில் உடலை விடுபவன் திரும்பி வருவதில்லை. ஆனால் இருளில் உடலை விடுபவனோ திரும்பி வருகிறான்.
– பகவத் கீதை – 8.20

அக்னி ஜ்யோதிர் அஹ : ஷுக்ல : ஷண் பாலா உத்தராயனம்
தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஜனா :

பரபிரம்மனை அறிந்தவர்கள் அக்னி தேவனின் ஆதிக்கத்தில் ஒளியில் பகலின் நல்ல நேரத்தில் வளர்பிறை உள்ள இரு வாரங்களில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் ஆறுமாதங்களில் இவ்வுலகை விட்டுச் சென்று அந்தப் பரமனை அடைகின்றனர்.
– பகவத்கீதை – 8.24

தாமோ ராத்திஸ் ததா க்ருஷண : ஷண் மாலா தக்ஷிணாயனம்
தத்ர சாந்த் ரமஸம் ஜ்யோதிர் யோகீ ப்ராப்ய நிவர்ததே

புகையிலும், இரவிலும், தேய்பிறையிலும், சூரியன் தெற்குநோக்கி செல்லும் ஆறுமாதங்களிலும், இவ்வுலகை விட்டுச் செல்லும் யோகிகள் சந்திரலோகத்தை அடைந்து மீண்டும் திரும்பி வருகின்றனர்.
– பகவத்கீதை – 8.25

நைதே ஸ்ருதீ பார்த ஜானன் யோகி முஹ்யதி கஷ்சன
தஸ்மாத் ஸர்வேஷு காலேஷு யோக யுக்தோ பவர்ஜூ
னா

அர்ஜுனா இவ்விரு பாதைகளையும் அறிந்துள்ள பக்தர்கள் ஒரு போதும் குழப்பமடைவதில்லை . எனவே எப்போதும் பக்தியில் நிலை பெறுவாயாக.
-பகவத்கீதை 8.27

உண்மையான தர்மத்தை அறிந்து கடைப்பிடிப்பவர்கள் இவ்வெல்லா விஷயங்களைப் புரிந்திருந்தாலும் இதைப்பற்றி அவர்களுக்குப் பயம் கிடையாது. சுப வேளையோ, அசுப வேளையோ, தற்செயலாகவோ , ஏற்பாட்டின் அடிப்படையிலோ எப்போது வேண்டுமானாலும் அவன் தனது உடலை விடலாம். ஆண்டவனின் அனுக்கிரகம் பெற்றவனுக்கு இவ்வுலகில் எந்த பயமும் கிடையாது.

ததாமி புத்தி யோகம் தம் யேனமாம் உபயாந்திதே
தேஷாம் ஸதத யுக்தானாம் பஜதாம் ப்ரீதி பூர்வகம்

எனக்கு அன்புடன் தொண்டுச் செய்வதில் இடையறாது ஈடுபட்டுள்ளவர்களுக்கு என்னிடம் வந்தடைவதற்குத் தேவையான அறிவை நானே வழங்குகின்றேன். (பகவத்கீதை 10.10)

தேஷாம் ஏவானு கம் பார்தம் அஹம் அக்ஞான ஜம் தம:
நாஷயாம் யாத்ம பாவ ஸ்தோ க்ஞான தீபேன பாஸ்வ
தா

அவர்களிடம் விசேஷ கருணையை காட்டுவதற்காக அவர்களது இதயத்தினுள் வசிக்கும் நான் , அறியாமையினால் பிறந்த இருளை ஞானமெனும் சுடர்விடும் தீபத்தினால் அழிக்கிறேன்.
-பகவத்கீதை 10 – 11)

மரணத்திற்குத் தன்னை தயார்படுத்தும் முறை

இறக்கும் தறுவாயில் செய்ய வேண்டிய காரியங்கள்

மரணத்தை எதிர்நோக்கியுள்ள ஒருவரின் மனோபாவம் சரியாக இருக்காது . வேதனையுடனும், பயத்துடனும், குழப்பத்துடனும் இருக்கும் அவரை இப்பொழுது பூமியின் மடியில் வைக்க வேண்டும். காரணம் பூமி ஒரு தாயாகக் கருதப்படுகிறது. தாயின் மடியில் இருந்தால் சாந்தி உண்டாகும். உலகத்தில் ஏழு தாய் உள்ளனர். பெற்றதாய், அரசனின் மனைவி, பிராமணனின் மனைவி, குருவின் மனைவி, தாதி (நர்ஸ்), பசு, பூமாதேவி. இப்பொழுது தரையைக் கோமியத்தால் கழுவி அதன்மேல் கறுப்பு எள் போட்டு தர்ப்பையைக்

பரப்ப வேண்டும். (எள் விஷ்ணுவின் வியர்வையில் தோன்றுகிறது . தர்ப்பை புல்லோ ஆகாயத்தில் உண்டாயிற்று. ஒரு நுனியில் ப்ரம்மா, மறுநுனியில் சிவன், மத்தியில் விஷ்ணுவும் இருக்கிறார்கள். தர்ப்பைக்கு ஈர்க்கும் சக்தி உண்டு. அதற்கு தோஷம் கிடையாது ) பின்பு அதன் மேல் விரிப்பு விரித்து இறந்தவரின் தலை தெற்குப் புறமாகவும் பாதம் வடக்குப் புறமாகவும் இருக்குமாறு படுக்க வைக்க வேண்டும். அவருடைய கையில் தர்ப்பையும், துளசியும் கொடுத்து மூன்று விஷயங்களை செய்விக்க வேண்டும்.

 1) வாயில் புனித தீர்த்தம் ( துளசி தீர்த்தம் ) ஊற்றி பகவானின் திருநாமத்தை சொல்ல வைக்க வேண்டும். அவர் கூறமுடியவில்லை என்றால் அருகில் உள்ளவர்கள் சப்தமாகக் கூறவேண்டும்.

2) அவர் காதில் மரணத்திற்கான மந்திரத்தைக் கூற வேண்டும் . ( ப்ராண , அபான , வ்யான , உதான , சமான என்ற ஐந்து வித காற்றின் மேல் ஆத்மா மிதந்து கொண்டிருக்கின்றது . அந்தக் காற்றை ஒருமுகப்படுத்தக்கூடிய மந்திரம்.)

3) அவர் கையால் தானம் செய்விக்க வேண்டும். அவன் கையால் ஏழுவகைத் தானியங்களை ( கடலை, மொச்சை, எள், கொள்ளு, பயறு, துவரை, கோதுமை ) ஒரு தட்டில் வைத்து அதனுடன் குடை, ஆடை, மோதிரம், செருப்பு, உதக கும்பம் ( கலசம் ) ஆசனம் ( உட்காரும் பலகை ) அரிசி, பழம், பூஜைக்குரிய திரவியங்கள் தாமிர பாத்திரம் ( காப்பர் செம்பு அல்லது தட்டு ) இவைகளை ஒரு நல்ல குணம் வாய்ந்த பிராமணனுக்கு அல்லது பக்தனுக்கு தானமாகக் கொடுக்கச் அதற்கான மந்திரத்தைச் சொல்லி இவைகளைத் தானம் கொடுத்தவரின் பிரயாணத்திற்கு பயன்படும்படி பிரார்த்தனை செய்ய வேண்டும். இவை அனைத்தையும் தானமாகக் கொடுக்க முடியாவிட்டால் ஒருபடி உப்பை தானமாகக் கொடுக்க வேண்டும். ( உப்புவைகுண்டத்தில் உண்பானவை )

இந்தத் தானத்தினால் கிடைக்கும் நன்மைகள்

1 ) குடைதானம் – எம தூதர்கள் அந்த ஜீவனை எமபுரிக்கு அழைத்துச் செல்லும் போது குளிர்ச்சிதரும் மரம் நிறைந்த பாதையில் அழைத்துச் செல்வார்கள்.

 2 ) ஆடை தானம் – எமதூதர்கள் அவனுக்கு துன்பம் தரமாட்டார்கள்.

 3 ) மோதிர தானம் – அவனுடைய பாவங்கள் நீங்கும்

4 ) தண்ட தானம் – யமதூதர்கள் ஜீவனை அடிக்க மாட்டார்கள்.

 5 ) மாரடி ( செருப்பு ) – ஜீவன்களுக்கு எமதூதரிடத்தில் பயம் நீங்கும், குதிரையில் பயணிக்கலாம்.

 6 ) உதக கும்பம் – ஜீவனின் தாகம் தீரும்.

 7 ) உட்காரும்பலகை – ஜீவனுக்கு வழியில் இளைப்பாற இடம் கிடைக்கும்.

 8 ) அரிசி தானம் – ஜீவன் பசியால் வருந்தாது.

 9 ) பசு தானம் – வைத்தாரணி நதியைக் கடக்கும் போது நதியின் கரையில் கொண்டு விட உதவும்.

 உயிரோடிருக்கும் போது தானம் செய்யாவிட்டால் கருமாதி தினத்தன்றாவது தானம் செய்ய வேண்டும்.

 தானம் கொடுக்க சிறந்த காலம் :

எந்த ஒரு செயலுக்கும் மனத்தூய்மை அவசியம் . நாம் கொடுக்கும் முறையில் வேறுபாடு உண்டு . யாராவது ஒருவர் கேட்டு நாம் கொடுக்கும் பொருளுக்கு தர்மம் என்று பெயர். நாமாக முன் வந்து கொடுக்கும் பொருளுக்கு தானம் என்று பெயர். கார்த்திகை மாதத்தில் உத்தராயண புண்ய காலத்தில் சுக்ல பட்சத்தில் ( வளர்பிறை ) பௌர்ணமி திதியில் தானம் கொடுப்பது மிகச் சிறந்தது.

 தஸ்மாத் ஓம் இதி உதாஷ்குத்ய யக்ஞதானதபாக்ரியா:

 ப்ரவத்ந்தே விதானோக்தா: ஸததம் ப்ரஹ்ம வாதினாம்

 இவ்வாறு ஆண்மீகிகள் எப்போதுமே ‘ ஓம் ‘ உடன் ஆரம்பித்து பரமனை அடைவதற்காக யாகங்கள், தானங்கள், தவங்கள் இவற்றை மேற்கொள்கின்றனர். (பகவத்கீதை 17 – 24)

உயிர் பிரிவது எப்படி ?

உயிரானது மனிதனுடைய உடலை விட்டு நீங்கும் பொழுது கண்வழி , மூக்கின் வழியாக, ரோம கால்கள் ( துவாரம் ) வழியாக! வெளியேறும். ஞானிகளுக்கு கபாலம் பிளந்து வெளியேறும். உயிர் நீங்கிய உடன் உடலானது ஒரு மரக்கட்டை போல் அசைவற்று இருக்கும். மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது. ஏனவே அது ப்ருத்துவி என்ற மண்ணிலும் , அப்பு என்ற நீரிலும், தேஜஸ் என்ற அக்னியிலும், வாயு என்ற காற்றிலும், ஆகாயம் என்ற வானத்திலும் கலந்து விடும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற ஆறும் கர்மேந்திரியம் ஐந்துக்குள்ளும் ஞானேந்திரியம் ஐந்துக்குள்ளும் ஒளிந்திருக்கும். உயிர் உடலில் இருந்து பிரிந்த உடன் இவை ஆறும் மனதுடன் ஒன்றிவிடும். பின் மனம் அறிவு பொய் தன்னுணர்வு ஆகியவை ஆத்மாவின் பிரயாணத்திற்கு வாகனமாகச் செயற்படுகிறது. மறுபிறவியில் இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு தேகத்தில் அவன் குடியேறுவான்.

6 கோசங்கள் ( அடுக்குகள் )

 மனித உடலில் ஆறுவித கோசங்கள் உள்ளன. அவைகள் வீரியம் | எலும்பு / நீர் / நரம்பு / ரோமம் / இரத்தம் . உடலிலுள்ள ஒவ்வொரு பகுதியும் ஏதாவதொரு பஞ்ச பூத தொடர்பைக் கொண்டுள்ளது.

உடம்பின் பகுதியும் – பஞ்ச பூதமும்

மண் – தோல், எலும்பு, ரோமம், சதை, நகம்

நீர் – உமிழ் நீர், சிறுநீர், வீர்யம், இரத்தம், சீழ்

நெருப்பு – பசி, தாகம், தூக்கம், சோம்பல், காந்தி

வாயு – விருப்பம், கோபம், பயம், வெட்கம், மோகம், உடல் ஏக்கம்.

ஆகாயம் – சப்தம், எண்ணம், கேள்வி

வயிற்றுப் பகுதியில் அக்னியும் அதற்கு மேல் தண்ணீரும் அதற்கு மேல் உணவு ஆகியவை வரிசையாக உள்ளன.

வாயில் 32 பற்கள் உள்ளன.

உடலில் மூன்றரை கோடி ரோமங்கள் உள்ளன.

இறந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்கள்

ஒருவன் இறந்தவுடன் அவனது கால்களையும், கைகளையும் கட்ட வேண்டும். இறந்த வீட்டில்

1. உணவு சமைக்கக் கூடாது. கிராமமாக இருந்தால் ஊரில் உள்ள அனைவரும் இறந்தவனை அடக்கம் செய்யும் வரை உணவும், நீரும் அருந்தக்கூடாது.

2. இறந்தவனின் அருகில் படுத்து உறங்கக்கூடாது. அருகில் உள்ள கோவிலைப் பூட்டி விட வேண்டும். உடலை எடுத்துச் சென்ற பிறகு கோவிலைத் திறக்க வேண்டும்.

3. இறந்த வீட்டில் மகிழ்ச்சியாக ஆடுவதும், சிரிப்பதும், ஓடித்திரிவதும் கூடாது. இறந்த வீட்டில் சீட்டாடக்கூடாது. மதுபானம் அருந்தக்கூடாது. தனித்தனியே நின்று வீண் பேச்சுக்கள் பேசக்கூடாது. சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது.

4. அழக்கூடாது ( ஆத்மாவிற்கு கவலை இன்னும் அதிகமாகும் )

5. சுருட்டு, மது, மாமிசம் படைக்கக்கூடாது. பயன்படுத்தவும் கூடாது

(ஆத்மாவும், ஆண்டவனும் இந்த உடலில் குடியிருந்ததால் அது கோவிலாகக் கருதப்படுகிறது. அதனால் தான் இந்த மரியாதை கொடுத்து காரியங்களைச் செய்கின்றோம்.)

பொதுவாகத் தென்திசை எம திசையாகும். தென்திசைக்கும் நிருதியின் திசைக்கும் இடையில் யமலோகம் உள்ளது. இதை தேவர்களாலும் அசுரர்களாலும் அழிக்க இயலாது. பூமியிலிருந்து 5,60,000 மைல் தொலைவில் உள்ளது யமபுரி. யமனது அரண்மனை 6400 மைல் பரப்பளவும் 200 மைல் உயரமும் , 1008 மைல் அகலமும் உடையதாகும். நன்றாக அலங்கரிக்கப்பட்டு தங்க மயமாக ஜொலிக்கும். தூண்கள் வைரத்தாலானது. யமனுக்கு கூற்றுவன் என்று பெயர். அஞ்சத் தக்க உருவத்தை உடையவன். தூதுவர்களும் அவ்வாறே இருப்பர். முகத்தில் கோபக்கனல் தெறிக்கும். கறுப்பு நிற ஆடையும் பாசக்கயிறு முதலான

ஆயுதங்களையும் தரித்திருப்பர். இறந்தவுடன் அந்த ஜீவனை யமதூதர்கள் முதல் 48 நிமிடங்களுக்குள் ( 1 முகூர்த்தம் ) பூலோகத்திலிருந்து யம லோகத்திற்கு அழைத்துச் செல்வர். பின்பு யமதர்மனின் முன் முட்டி போட வைத்து யமனை தன் தலைவனாகக் காட்டி கருமாதி நிகழ்வுகள் முடிந்தபின் மறுபடியும் இங்குதான் வரவேண்டும் என்று நினைவூட்டி அவன் உடல் இருக்கும் இடத்தில் கொண்டு வந்து விட்டுவிடுவர். யமதர்மர் தன் தூதர்களைப் பார்த்து இந்த ஜீவனை மீண்டும் அவன் இருந்த இடத்திற்கே கொண்டு போய் விட்டு விடுங்கள். இன்றிலிருந்து பதினோராம் நாள் முடிந்த பின்னர் மீண்டும் இங்கே கொண்டு வாருங்கள் என்பார்.

பிறகு யமதூதர்கள் பாசத்தால் கட்டிய சூட்சம உடலை அவிழ்த்து விடுவார்கள். அது தன் உடலில் நுழைய முயற்சிக்கும். ஆனால் முடியாது. உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது ஆத்மாவும் கூடவே செல்லும். தன் உடலுக்குள் புகமுடியாமல் தவிக்கும். தன் உடலுக்கு தீவைக்கும் பொழுது பத்து முழ உயரத்தில் ஆவி வடிவில் ஐயோ ! ஐயோ / என்று ஓலமிட்டு அழும். புண்ணிய ஆத்மா என்றால் இந்த உடல் எரிந்து சாம்பலாவதே நல்லது என்று மகிழ்ச்சியடையும். உடல் முழுவதும் எரிந்து சாம்பலானதும் பற்று நீங்கி விடும்.

பிண்டம் படைக்கும் நிகழ்வு

( அரிசி , பால் , நெய் , தேன் , எள் கலந்த கலவை )

சுடுகாட்டு நிகழ்வுகள் முடிந்த பிறகு வீட்டில் அவருடைய உடலை எடுத்த இடத்தில் அவருடைய படத்தை வைக்க வேண்டும். அவருக்கு இப்போது பிரேத உடல் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். காரணம் ஆத்மாவின் பிரயாணத்தின் போது பசிக்கு உணவு உண்ணவும், தாகத்திற்கு நீர் அருந்தவும் பிரேத உடல் தேவைப்படுகின்றது. ஆகையால் பிரேத உடலை உருவாக்குவதற்கு பத்துத் தினங்கள் பிண்டம் படைக்க வேண்டும். ( ஒரு குழந்தை தாயின் கருவில் உருவாகி இவ்வுலகில் பிறக்க பத்து மாதங்களாவது போல் பிரேத உடல் கிடைக்க பத்துத் தினங்களாகும்)

முதல் நாள் பிண்டம் படைக்கும் போது

அந்த ஆத்மாவிற்கு – தலை கிடைக்கின்றது.

இரண்டாம் நாள் – கழுத்துக் கிடைக்கின்றது

மூன்றாம் நாள் – மார்பு கிடைக்கின்றது

நான்காம் நாள் – வயிறு கிடைக்கின்றது

ஐந்தாம் நாள் – உந்தி கிடைக்கின்றது

ஆறாம் நாள் – பின்பாகம் கிடைக்கின்றது

ஏழாம் நாள் – குய்யம் கிடைக்கின்றது

எட்டாம் நாள் – தொடை கிடைக்கின்றது

ஒன்பதாம் நாள் – கால்கள் கிடைக்கின்றது

பத்தாம் நாள் – முழு உடல் கிடைத்து விடுகின்றது.

 இப்போது அந்த ஜீவன் பிரேத உடலுடன் எமபுரிக்குப் பிரயாணம் செய்யத் தயாராகின்றது. எமதூதர்கள் இழுத்துக் கொண்டு போகும் போது அந்தப் பிரேத உடல் தனது வீட்டையும் சுற்றத்தாரையும் பார்த்துக் கொண்டே செல்லும். இரவும் பகலுமாக சேர்த்து ஒரு நாளைக்கு 1729 மைல் தூரம் நடக்க வேண்டும். இந்தப் பிரயாணம் முடிய ஒரு வருட காலம் பிடிக்கும். செல்லும் வழியில் அடர்ந்த காடு காணப்படும். அந்த காட்டில் உள்ள இலைகள் கூர்மையான பற்கள் போன்ற அமைப்பைக் கொண்டவை. பாதைகள் கரடு முரடானவை.

 பசியாலும் தாகத்தாலும் தவிக்கும் ஜீவன் காட்டைக் கடந்து செல்ல மிகவும் சிரமப்படும். அந்த நேரத்தில் தன் கற்றத்தாரையும். கடந்த காலத்தையும் நினைத்துப் பார்க்கும். தனக்கு உதவி செய்ய இனி யாரும் வரமாட்டார்கள் என்று புரிந்து கொள்ளும். வாழ்ந்த போது தான, தர்மம் செய்யவில்லையே என்று மனவருத்தம் கொல்லும். யமதூதர்கள் அவனுடைய தவறைச் கட்டிக்காட்டி அவனை அடிப்பார்கள். இப்படியாக முதல் மாதம் “யம்பபுர ” வந்து சேரும் . அங்கே கூட்டங்கூட்டமாக மற்றப் பிரேதங்கள் காணப்படும் . அங்கு “ புண்ணிய பத்ரை என்ற நதியும் வடவிருட்சம் ” என்ற மரமும் உள்ளன . வீட்டில் புத்திரன் படைக்கும் முதல் மாசிகா பிண்டத்தை பெற்று பசியாறி மறுபடியும் பயணத்தை தொடரும் . செல்லும் வழியில்

“ நாகேந்ர நதியிலிருந்து வரும் கடும் , குளிரால் ஜீவன் வருந்துவான் . இவ்விதமாக இரண்டாம் மாதம் “ சௌரியபுரம் ” சேரும் . அங்கு வீட்டில் படைக்கப்படும் மாசிகா பிண்டத்தை உண்டு பிரயாணத்தை தொடரும் . மூன்றாம் மாதம் – நாகேந்திர நகரில் ஓய்வெடுக்கும் நான்காம் மாதம் – கந்தமாதனபுரத்தில் ஓய்வெடுக்கும் ஐந்தாம் மாதம் – சைலாகபுரத்தில் ஓய்வெடுக்கும் ஆறாம் மாதம் – குரூரபுரத்தில் ஓய்வெடுக்கும் ஏழாம் மாதம் – க்ரௌஞ்சபுரத்தில் ஓய்வெடுக்கும் ஏழாம் மாத மாசிகா பிண்டத்தைப் பெற்று பிரயாணத்தைத் தொடரும் போது அஞ்சத்தக்க பயங்கர உருவம் கொண்ட பத்தாயிரம் படகோட்டிகள் அவன் முன் ஓடி வந்து கோபத்துடன் ஜீவனிடம் நீ கோதானம் செய்திருக்கின்றாயா ? செய்திருந்தால் இந்த ” வைதரணி ” நதியை கடக்க நாங்கள் உதவுவோம் . இல்லாவிட்டால் உன்னை நதியில் தள்ளி துன்புறுத்துவோம் என்பர் . குறிப்பு : வைதரணி நதி 800மைல் நீளம் உடையது . இரத்தமும் , சீழும் கலந்து ஓடும் துர்நாற்றம் வீசும் . கொடிய பிராணிகள் வாழும் . வாழும் காலத்தில் கோ ( பசு ) தானம் செய்திருந்தால் இந்த நதியைக் கடக்க பசு வந்து உதவி செய்யும் . வைதரணி நதியைக் கடத்து ஜீவன் எட்டாவது மாதம் எமனது சகோதரனான விசித்திரன் என்பவனது நகரமாகிய விசித்திரபுரியை அடையும் . அங்கு தங்கி ஓய்வெடுத்து வீட்டில் படைக்கும் மாசிகா பிண்டத்தை உண்டு பயணத்தைத் தொடரும் . ஒன்பதாம் மாதம் – நான கரந்தபுரம் பத்தாம் மாதம் – தப்தபுரம் பதினொன்றாம் மாதம் – சுதப்த பாவனபுரம் பன்னிரெண்டாம் மாதம் – ஸ்ரோத்திய புரம் ( யமபுரி ) யை அடையும் .

யமபுரியில் கந்தர்வர்களும் , அப்ஸரர்களும் இருப்பார்கள் . சித்திரகுப்தன் என்ற கணக்கன் பன்னிரெண்டு சிரவணர்கள் மூலம் ஜீவன்கள் செய்யும் பாவ புண்ணியங்களை எமதர்மனிடம் தெரிவிப்பான் . ஒருவன் எந்த உறுப்பால் தவறு செய்கிறானோ அந்த உறுப்பு மூலமாகவோ அதற்கான தண்டனையை அனுபவிப்பான் . வாக்கால் செய்த பாவத்திற்கு வாக்காலும் , மனதால் செய்த பாவத்திற்கு மனதாலும் , உடலால் செய்த பாவத்திற்கு உடலாலும் தண்டனை பெறுகிறான் .

8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question