பகவான் ஜெகன்நாதருக்கு விஷ்ணுபிரியா எழுதிய கடிதம்
பூரியில் வசிக்கும் பாண்டாக்கள் ( பூஜாரிகள்) இந்தியா முழுவதும் பிரயாணம் செய்து, பகவான் ஶ்ரீ ஜெகன்னாதர், ரத யாத்திரையில், ரத வீதியில் பவனி வரும்போது, அவரை தரிசிக்க இயலாத மக்களுக்கும் பகவான் ஜெகன்நாதருக்கும் இடையில் ஒரு தொடர்பை உண்டாக்குகிறார்கள். பகவான் ஶ்ரீ ஜெகநாதரின் பிரசாதத்தை அவர்களுக்கு கொடுத்தும், அவர்களால் நேரடியாக சமர்ப்பிக்க முடியாத ( நன்கொடை , பரிசு பொருட்கள், நைவேத்திய பொருட்கள் போன்றவை )பொருட்களை இந்த சேவாதாரிகள் பெற்று வருவது வழக்கம். அவர்கள் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் பிரியமான பக்தர்கள் அவருக்கு சமர்ப்பித்த நன்கொடையை பூரிக்கு கொண்டு வந்து பிரபு ஜெகந்நாதரின் திருபாதங்களில் சமர்ப்பிப்பார்கள். இன்றும் ஒரிசாவில் இது பழக்கத்தில் உள்ளது.சில நூறு வருடங்களுக்கு முன்னர் ஒரு பாண்டா, ராஜ்புதனாவிற்கு (இன்று ராஜஸ்தான்) பிரயாணம் செய்தார். அந்த மாகாணத்தின் மன்னன் ஒரு விஷ்ணு பக்தர். அச்சமயம்...