Wednesday, October 16

Prayers by Kardama Muni (Tamil) /கர்தம முனிவரின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 3 / அத்தியாயம் 24 / பதம் 28- 33


பதம் 28

பஹுஜந்மவிபக்வேன ஸம்யக்யோக ஸமாதினா
த்ரஷ்டும் யதந்தே யதய: சூந்யாகாரேஷு யத்பதம்

மொழிபெயர்ப்பு

பல பிறவிகளுக்குப் பிறகு பக்குவமடைந்த யோகிகள், மெய்மறந்த யோக நிலையில், பரம புருஷ பகவானின் பாத கமலங்களைக் கண்ணாற் காண்பதற்குத் தனித்த இடங்களில் முயற்சி செய்வர்.

பதம் 29

ஸ ஏவ பகவானத்ய ஹேலனம் நகணய்ய ந:
க்ருஹேஷு ஜாதோ க்ராம்யாணாம் ய: ஸ்வானாம் பக்ஷபோஷண:

மொழிபெயர்ப்பு

நம்மைப் போன்ற சாதாரண குடும்பத் தலைவர்களின் கவனக் குறைவைக் கருதாமல், அதே பரம புருஷ பகவான், அவரின் பக்தர்களுக்கு உதவி புரிய நம் இல்லங்களில் தோன்றுகிறார்.

பதம் 30

ஸ்வீயம் வாக்யம்ருதம் கர்தும் அவதீர்ணோஸிமே க்ருஹே
சிகீர்ஷுர்பகவான் ஞானம் பக்தானாம் மானவர்தன


மொழிபெயர்ப்பு

கர்தம முனிவர் கூறினார்: உங்கள் பக்தர்களின் மதிப்பை எப்போதும் அதிகரிக்கும் என் அன்புள்ள பகவானே, நீங்கள் உங்கள் வார்த்தையை செயற்படுத்தவும், உண்மை அறிவின் நெறிமுறையைப் பரப்பவும் என் வீட்டிற்கு வந்துள்ளீர்கள்.

பதம் 31

தாந்யேவ தேபிரூபாணி ரூபாணி பகவம்ஸ்தவ
யானி யானி ச ரோசந்தே ஸ்வஜனானாமரூபிண:


மொழிபெயர்ப்பு

என் அன்பு பகவானே, உங்களுக்கு உலகியல் வடிவம் இல்லாவிட்டாலும், நீங்கள் உங்கள் எண்ணற்ற வடிவங்கள் பெற்று உள்ளீர்கள். அவை உங்கள் பக்தர்களை மகிழ்விக்கும் அந்த வடிவங்கள் எல்லாம் கடந்தவையாகும்.

பதம் 32

த்வாம் சூரிபிஸ்தத்வ புபுத்ஸயாத்தா
ஸதாபிவாதார்ஹண பாதபீடம்
ஐஸ்வர்ய வைராக்ய யசோவபோத
வீர்யஸ்ரியா பூர்தமஹம் ப்ரபத்யே


மொழிபெயர்ப்பு

என் அன்பான பகவானே, சிறந்த முனிவர்கள் எல்லாம் முழு உண்மையைப் புரிந்துகொள்ள ஆர்வமுடையவர்கள். அவர்களிடமிருந்து வணக்கத்துக்குரிய மதிப்பை எப்போதும் பெறத் தகுதிவாய்ந்த இருப்பிடம் உங்களின் தாமரை போன்ற திருவடிகள் உள்ளன. நீங்கள் செல்வ வளத்தில், துறவில், மெய்யறிவுடைய புகழில், அறிவில், ஆற்றலில் முழுமை பெற்றவர், அதனால் உங்களின் பாத கமலங்களில் என்னை அடைக்கலமாகத் தருகிறேன்.

பதம் 33

பரம் ப்ரதானம் புருஷம் மஹாந்தம்
காலம் கவிம் த்ரிவ்ருதம் லோகபாலம்
ஆத்மாநுபூத்யானுகத ப்ரபஞ்சம்
ஸ்வச்சந்தசக்திம் கபிலம் ப்ரபத்யே


மொழிபெயர்ப்பு

கபிலரின் வடிவில் அவதரித்திருக்கும், சுதந்திர ஆற்றலுடைய உன்னதமான பரம புருஷரை, காலம் மற்றும் பொருளின் மொத்த உருவமாக விளங்கும் பகவானை, ஜட இயற்கையின் மூன்று குணங்களின் கீழ் எல்லா அண்டங்களையும் முழு அறிவுடன் பாதுகாப்பவரை உலகப் பொருள்கள் அழிந்தபின், அவற்றைத் தன்னிடம் இழுத்துக் கொள்பவரை, பரம புருஷ பகவானை நான் சரணடைகிறேன்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question