Thursday, December 26

Prayers by Devahuti (Tamil) / தேவஹீதியின் பிரார்த்தனைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத்-பாகவதம்
காண்டம் 3 / அத்தியாயம் 33 / பதம் 2- 8

பதம் 2

தேவஹூதி உவாச

அதாப்யஜோந்த: ஸலிலே சயாநம்
பூதேந்த்ரியார்தாத்மமயம் வபுஸ்தே
குணப்வாஹம் ஸத சேஷ பீஜம்
தத்யௌ ஸ்வயம் யஜ்டராப்ஜஜாத:

மொழிபெயர்ப்பு

தேவஹூதி கூறினார் ப்ரம்மா பிறப்பற்றவர் என்று கூறப்படுகிறார். ஏனென்றால் அண்டத்தின் அடியில் உள்ள கடலில் நீங்கள் பள்ளி கொண்டிருக்கும் பொழுது உங்கள் வயிற்றிலிருந்து வளரும் தாமரை மலரிலிருந்து பிறக்கிறார். ஆனால் எல்லையற்ற அண்டங்களின் மூலாதாரமாகிய உடலையுடைய பிரம்மனும் உங்களைக் குறித்துத் தியானித்தார்.

பதம் 3

ஸ ஏவ விஸ்வஸ்ய பவான் விதத்தே
குணப்ரவாஹேண விபக்தவீர்ய:
ஸர்காத்யனீஹோ விததாபிஸந்தி
ராத்மேஸ்வரோ தர்க்யஸஹஸ்ரசக்தி:

மொழிபெயர்ப்பு

என் அன்பு பகவானே, தனிப்பட்ட முறையில் நீங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்றாலும், இயற்கைக் குணங்களின் எதிர்ச் செயல்களில் உங்கள் சக்திகளைப் பகிர்ந்து அளித்துள்ளீர்கள், அந்தக் காரணத்திற்காக, இயலுலக வெளிப்பாட்டின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் நடைபெறுகின்றன. என் அன்பு பகவானே, நீங்கள் உறுதியானவர். எல்லா உயிரினங்களின் பரம புருஷ பகவான். அவர்களுக்காக நீங்கள் இந்த வெளி உலகைப் படைத்தீர்கள், நீங்கள் ஒருவராக இருந்தாலும், உங்கள் பல்வேறு பட்ட சக்திகள் பல்வேறு வகைகளில் செயற்பட முடியும் இது எங்களால் நினைத்துப் பார்க்க இயலாதது.

பதம் 4

ஸ த்வம் ப்ருதோ மே ஜடரேண நாத
கதம் நு யஸ்யோதர ஏததாதஸீத்
விஸ்வம் யுகாந்தே வடபத்ர ஏக:
சேதேஸ்ம மாயா சிகர் அங்க்ரிபான:

மொழிபெயர்ப்பு

பரம புருஷ பகவானாக, நீங்கள் என் வயிற்றிலிருந்து பிறந்துள்ளீர்கள். ஓ என் பகவானே, எல்லா உலகையும் தன் வளிற்றில் கொண்ட மேலான ஒருவருக்கு அது எவ்வாறு முடிந்தது? பதில் அது முடியும் என்பதுவே ஏனெனில் யுக முடிவில் நீங்கள் ஆலமரத்தின் இலைமீது, ஒரு சிறிய குழந்தை போல, உங்கள் பாதகமலத்தின் விரலைச் சப்பிக் கொண்டு படுத்திருப்பீர்கள்.

பதம் 5

த்வம் தேஹதந்த்ர ப்ரசமாய பாப்மனாம்
நிதேசபாஜாம் ச விபோ விபூதயே
யதாவதாராஸ்தவ சூகராதய
ஸ்ததாயம் அபி ஆத்பதோபலப்தயே

மொழிபெயர்ப்பு

என் அன்பு பகவானே, நீங்கள் நெறிதவறியோரின் பாவச் செயல்களைக் குறைக்கும் பொருட்டும், அவர்களின் அறிவை பக்தியிலும் விடுதலையிலும் வளம்பெறச் செய்யும் பொருட்டும் இந்த உடலை எடுத்துள்ளீர்கள். இந்தப் பாவம் நிறைத் மக்கள் உங்கள் வழிகாட்டலைச் சார்ந்துள்ளதால், உங்கள் சொந்த விருப்பத்தால் நீங்கள் ஒரு காட்டுப்பன்றி மற்றும் பிற வடிவங்களாகப் பிறப்பு எடுக்கிறீர்கள். அதுபோல, உங்களைச் சார்ந்தவர்களுக்கு எல்லை கடந்த அறிவை வழங்கும் பொருட்டு நீங்கள் தோன்றியுள்ளீர்கள்.

பதம் 6

யந்நாமதேயஸ்ரவணானுகீர்தனாத்
யத்ப்ரஹ்வணாத்யத்ஸ்மரணாதபிக்வசித்
ஸ்வாதோபி ஸத்ய ஸவனாய கல்பதே
குத: புனஸ்தே பகவந்நு தர்சனாத்

மொழிபெயர்ப்பு

ஒருவர் ஒருமுறை பரம புருஷ பகவானின் புனிதப் பெயரைக் கூறினால் அல்லது அவரைப் பற்றி இசைத்தல் அவரது திருவிளையாடல்கள் பற்றிக் கேட்டால், அவருக்கு வணக்கங்களை அர்ப்பணித்தால், அல்லது அவரை நினைவு கூர்ந்தாலும் கூட அவர் நாய்க்கறி உண்ணும் குடும்பத்தில் பிறந்தவராயினும் உடனே வேத வேள்விகளை நிகழ்த்துவதற்குத் தகுதியானவர் ஆகிறார் என்றால், பரம புருஷரை நேருக்கு நேர் பார்க்கும் மனிதர்களின் ஆன்மீக முன்னேற்றம் பற்றிச் சொல்ல ஏதுமில்லை.

பதம் 7

அஹோ பத ஸ்வபசோதோ கரீயான்
யஜ்ஜிஹ்வாக்ரே வர்ததே நாம துப்யம்
தேபுஸ்தபஸ்தே ஜுஹுவு ஸஸ்னுரார்யா
ப்ரஹ்மானூகர்நாம க்ருணந்தி யே தே

மொழிபெயர்ப்பு

ஓ, அவர்கள் எத்துணை புகழ் பெற்றவர்கள் அவர்களின் நாக்குகள் உங்களின் புனிதப் பெயரை உச்சரிக்கின்றன. நாய் உண்பவர்களின் குடும்பங்களில் பிறந்திருந்தாலும் அந்த மனிதர்கள் வழிபடத் தக்கவர்கள். உங்கள் மேலாட்சியின் புனிதப் பெயரை உச்சரிப்வர்கள் எல்லாவதிமான துறவுகள், அக்னியாகங்கள் ஆகியவற்றை நிறைவேற்றி இருக்கவேண்டும், ஆரியர்களின் எல்லா நல்ல முறைகளையும் அடைந்திருக்க வேண்டும். உங்கள் மேலாட்சியின் புனிதப் பெயரை உச்சரிப்பதற்கு, அவர்கள் யாத்திரை செய்யும் புனித இடங்களில் குளித்திருக்க வேண்டும், வேதங்களைப் படித்திருக்க வேண்டும் தேவையான எல்லாவற்றையும் நிறைவேற்றி இருக்க வேண்டும்.

பதம் 8

தம் த்வாமஹம் பரம்ஹ பரம் புமாம்ஸம்
ப்ரத்யக்ஸ்ரோதஸ்யாத்மனி ஸம்விபாவ்யம்
ஸ்வதேஜஸா த்வஸ்தகுணப்ரவாஹம்
வந்தே விஷ்ணும் கபிலம் வேதகர்பம்

மொழிபெயர்ப்பு

என் பகவானே, நீங்கள் கபிலர் என்ற பெயரிலிருக்கும் பகவான் விஷ்ணுவே என்றும், நீங்கள் பரம புருஷ பகவான், மேலான பிரம்மன் என்றும் நான் நம்புகிறேன். புனிதர்களும் முனிவர்களும், மனம் மற்றும் புலன்களின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு, உங்களைக் குறித்து த்யானிக்கிறார்கள், ஏனெனில் உங்கள் கருணையால் மட்டுமே ஒருவர் ஜடஇயற்கையின் மூன்று குணங்களின் பிடிகளிலிருந்து விடுபடமுடியும். அழிவின் போது, எல்லா வேதங்களும் உங்களிடம் மட்டும் தக்க வைக்கப்படுகின்றன.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question