Friday, January 3

மதுராஷ்டகம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ வல்லபாச்சாரியரால்
(1478 AD) பாடப்பட்ட பாடல்


1
அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம் ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்
2
வச்சனம் மதுரம் ச்சரிதம் மதுரம் வசனம் மதுரம் வலிதம் மதுரம் ச்சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்
3
வேணுர் மதுரோ ரேணுர் மதுர : பாணீர் மதுர : பாதெள மதுரெள ந்ருத்யம் மதுரம் சக்யம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்
4
கீதம் மதுரம் பீதம் மதுரம் புத்தம் மதுரம் சுப்தம் மதுரம் ரூபம் மதுரம் திலகம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்
5
கரணம் மதுரம் தரனம் மதுரம் ஹரணம் மதுரம் ரமணம் மதுரம் வமிதம் மதுரம் சமிதம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்
6
குஞ்சா மதுரா மாலா மதுரா யமுனா மதுரா வீச்சி மதுரா ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்
7
கோபி மதுரா லீலா மதுரா யுத்தம் மதுரம் புக்தம் மதுரம் ஹ்ருஷ்டம் மதுரம் ஸிஸ்டம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்
8
கோபா மதுரா காவோ மதுரா யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா தலிதம் மதுரம் பலிதம் மதுரம் மதுராதி – பதேர் அகிலம் மதுரம்


1
முகுந்தனின், உதடுகள் இனிமை, திருமுகம் இனிமை கண்கள் இனிமை, புன்னகை இனிமை இதயம் இனிமை, நடையழகு இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை
2
முகுந்தனின், மொழிகள் இனிமை, குணநலன்ங்கள் இனிமை உடைகள் இனிமை, உதர மடிப்புகள் இனிமை செயல்கள் இனிமை, பிரமிப்பூட்டும் பேச்சு இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை
3
முகுந்தனின், புல்லாங்குழல் இனிமை, பாதத்தூசுகள் இனிமை கைகள் இனிமை, தாமரைப் பாதங்கள் இனிமை ஆடல் இனிமை, நட்பு இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை
4
முகுந்தனின், பாடுவது இனிமை, மஞ்சள் வண்ண ஆடை இனிமை உண்பதும் இனிமை, உறங்குவதும் இனிமை அழகு இனிமை, திலகம் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை
5
முகுந்தனின், உன்னத செயல்கள் இனிமை, பரிபூர்ண சுதந்திரம் இனிமை திருடுதல் இனிமை, அன்பு வேடிக்கை இனிமை உதவுதல் இனிமை, உன்னத பரிமாற்றம் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை
6
முகுந்தனின், ஆரத்தின் குஞ்சங்கள் இனிமை, மலர் மாலைகள் இனிமை யமுனை நதி இனிமை, நதியின் ஓசை இனிமை நதியின் தண்ணீர் இனிமை, தாமரை மலர்கள் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை
7
முகுந்தனின், கோபிகள் இனிமை, லீலைகள் இனிமை கூட்டங்கள் இனிமை, பண்டங்கள் இனிமை உவகை இனிமை, விநயம் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை
8
முகுந்தனின், கோபாலர்கள் இனிமை, பசுக்கூட்டங்கள் இனிமை அழகிய கோல் இனிமை, படைப்புகள் இனிமை அழித்தல் இனிமை, காத்தல் இனிமை இனிமை நாயகனின் ஒவ்வொன்றும் இனிமை, இனிமை

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question