Sunday, January 12

Suddha Bhakata Carana Renu (Tamil) / சுத்த பகத சரண ரேணு

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

(ஶ்ரீல பக்தி வினோத தாகுர், சரணகதி)

கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும்.

(1)
சுத்த பகத சரண ரேணு
பஜன அனுகூல
பகத சேவா பரம சித்தி
ப்ரேம லதிகார மூல

(2)
மாதவ திதி பக்தி ஜனனி
ஜதனே பாலன கோரி
கிருஷ்ண பசதி பசதி போலி
பரம ஆதரே போரி

(3)
கௌர் ஆமார ஜே சப ஸ்தானே
கோரலோ ப்ரமண ரங்கே
சே சப ஸ்தான ஹேரிபோ ஆமி
ப்ரணயி பகத சங்கே

(4)
ம்ருதங்க பாத்ய சுனிதே மன
அபசர சதா ஜாசே
கௌர பிஹித கீர்தன சுனி
ஆனந்த ஹ்ருதோய நாசே

(5)
ஜுகல-மூர்தி தேகியா மோர
பரம ஆனந்த ஹோய
ப்ரசாத-சேபா கோரிதே ஹோயா
சகல ப்ரபஞ்ச ஐய

(6)
ஜே தின க்ருஹே பஜன தேகி
க்ருஹேதே கோலோக பாய
சரண-சிந்து தேகியா கங்கா
சுக நா சீமா பாய

(7)
துளசீ தேகி ஜுராய ப்ராண
மாதவ தோஷனி ஜானி
கெளர ப்ரிய சாக சேவனே
ஜீவன சார்தக மானி

(8)
பகதிவினோத கிருஷ்ண பஜனே
அனகூல பாய ஜாஹா
ப்ரதி-திபசே பரம சுகே
ஸ்விகார கோரோஹே தாஹா


மொழிபெயர்ப்பு:

  1. சுத்த பக்தர்களது பாதத் தூளிகள் பக்தித் தொண்டிற்கு அனுகூலமானவை. பக்தர்களுக்கு சேவை செய்வதே பரம சித்தியும், பிரேமை என்னும் கொடியின் வேருமாகும்.

2. ஏகாதசி, ஜென்மாஷ்டமி ஆகிய நாள்கள் பக்திக்கு அன்னையாகத் திகழ்வதால், நான் அச்சமயங்களில் கவனத்துடன் விரதம் அனுசரிக்கிறேன். பெரும் அன்புடனும் மதிப்புடனும் ஸ்ரீ கிருஷ்ணாது தெய்வீக தாமத்தை எனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.

3. எனது கௌராங்கர் தமது லீலைகளுக்காக எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் நான் பக்தர்களுடைய சங்கத்துடன் செல்வேன்.

4. மிருதங்க வாத்தியத்தைக் கேட்பதற்கு எனது மனம் எப்போதும் ஆவலுடன் உள்ளது. கௌராங்கரால் விதிக்கப்பட்ட கீர்த்தனத்தைக் கேட்கும்போது, எனது இதயம் ஆனந்தத்தில் நடனமாடுகிறது.

5. தெய்வீக தம்பதிகளான ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் விக்ரஹங்களைப் பார்க்கும்போது, பரம ஆனந்தத்தை அடைகிறேன். பகவானின் பிரசாதத்தை ஏற்பதால் அறியாமையை வெல்கிறேன்.

6. எப்போதெல்லாம் எனது வீட்டில் ஹரி பஜனையைப் பார்க்கின்றேனோ, அப்போது கோலோக விருந்தாவனமே வீட்டினுள் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது. பகவானின் திருவடிகளிலிருந்து தோன்றிய கங்கை நதியைக் காணும்போது எனது ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.

7. மாதவருக்கு இன்பத்தைத் தரும் துளசியைப் பார்க்கும்போது ஆத்மாவிற்கு இனிமையாக உள்ளது. கௌராங்கருக்கு பிரியமான கீரையைச் சுவைக்கும்போது, எனது வாழ்வைப் பயனுள்ளதாக எண்ணுகிறேன்.

8. இந்த பக்திவினோதன் கிருஷ்ண பக்திக்கு அனுகூலமானவை அனைத்தையும் ஏற்பதில் தினமும் பரம சுகத்தை அடைகிறான்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question