தேவையான பொருட்கள்:
பசும்பால் – ½ லிட்டர்
மஞ்சள் பூசணி – ½ லிட்டர்
திராட்சை
முந்திரி
ஏலக்காய்
வெல்லம் (உருண்டை) – (1/4 கிலோ) தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை
மஞ்சள் பூசணியை கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின்னர் சிறிது, சிறிதாக வெட்டி குக்கரில் போட்டு சிறிது அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் குக்கரில் இருந்து பூசணியை தட்டில் கொட்டி ஆற விடவும், பின்னர் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பாலை அடுப்பில் வைத்து பொங்கி வரும் போது அரைத்த பூசணிக் கலவையை அதில் போட்டு நன்றாக கலக்கி, 5 நிமிடத்தில் இறக்கி வைக்க வேண்டும், வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக வெல்லம் கரைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
பால் பூசணிக்கலவை நன்றாக ஆறியதும் தேவையான அளவு வெல்லப் பாகு ஊற்றி திராட்சை, முந்திரி, நெய்யில் பொரித்து கலவையில் கொட்டி ஏலக்காய் பொடி போட்டு கலந்து விடவும் இப்போது பூசணிக் கீர் ரெடி.
thank you.hare krishna