இந்த ஆலயம் ஆந்திராவின் அஹோபிலத்தில் உள்ள ஒன்பது நரசிம்ம ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் மேல் அஹோபிலத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடம் “மார்க்கொண்ட லட்சுமி” க்ஷேத்ரா என்றும் அழைக்கப்படுகிறது.
இடங்கள் மற்றும் லீலைகள்
மாலோலன்:
ஹிரண்ய வதத்திற்குப் பிறகு நரஸிம்மரை அமைதிப்படுத்த மகாலட்சுமி செஞ்சு கோத்திரத்தில் செஞ்சு லட்சுமியாகப் பிறந்தார். அவள் பகவானை மணந்து அவரது கோபத்தை தணித்தாள், எனவே பகவான் மாலோலன் என்று அழைக்கப்படுகிறார் – ஒரு சாந்த ஸ்வரூபி.
ஆலயம்
இந்த ஆலயம் ஜ்வால நரசிம்ம ஆலயத்தை விட பெரியது. வீனஸ் / சுக்ரனை ஆட்சி செய்கிறார். மாலோல நரஸிம்ம பகவான் (மா – லட்சுமி, லோலன் – பிரியமானவர்.) மாலோலன் – லட்சுமி தேவிக்கு மிகவும் பிரியமானவர்) அழகான வடிவத்தில் தனது துணைவியார் லட்சுமியுடன் இருக்கிறார் மற்றும் சுதர்ஷன சக்கரம் ஏந்தி அருள்பாளிக்கிறார்.
பகவானுக்கு நான்கு கைகள் உள்ளன. அவர் இடது காலை மடித்து, வலது கால் இடது மடியில் லட்சுமியுடன் கீழே தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம். ஸ்ரீ மகாலட்சுமி தேவி மாலோல நரசிம்மரின் மடிந்த காலில் அமர்ந்திருக்கிறார். மாலோலனின் வலது பாதத்தில் ஒரு படுகை (செருப்பு) உள்ளது. இந்த மாலோலன் மிக அழகான கம்பீரமான புன்னகையும், அருமையான இனிமையான தாயாரையும் கொண்டவர்.