Thursday, November 21

கெளர ஆரத்தி (கீதாவளி)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கீழே உள்ள பாடலை எளிதில் பாட இந்த ஆடியோவை “PLAY” செய்யவும்.

(1)
ஜய ஜய கோராசாந்தேர் ஆரதிகோ சோபா
ஜானவீ-தட-வனே ஜக-மன-லோபா
(2)
தகினே நிதாய்சாந் பாமே கதாதர
நிகடே அத்வைத ஸ்ரீநிவாஸ சத்ர-தர
(3)
போசியாசே கோரசாந் ரத்ன-சிம்ஹாஸனே
ஆரதி கோரேன் பிரஹ்மா-ஆதி தேவ-கணே
(4)
நரஹரி-ஆதி கோரி சாமர துலாய
ஸஞ்ஜய-முகுந்த-பாஸு-கோஷ்-ஆதி காய
(5)
சங்கா பாஜே கண்டா பாஜே பாஜே கரதால
மதுர ம்ருதங்க பாஜே பரம ரசால
(6)
பஹு-கோடி சந்த்ர ஜினி வதன உஜ்வல
கல-தேசே வன-மாலா கோரே ஜலமல
(7)
சிவ-சுகா-நாரத ப்ரேமே கத-கத
பகதிவினோத தேகே கோரார ஸம்பத


1)
சைதன்ய மகா பிரபுவின் அழகிய ஆரத்தி நிகழ்ச்சிக்கு அனைத்து மங்களமும் உண்டாகட்டும், இந்த கெளர ஆரத்தி யானது கங்கை கரையில் உள்ள காட்டில் உள்ள தோப்பில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களின் உள்ளங்களையும் இந்த ஆரத்தி யானது கவர்ந்து இழுக்கிறது
2)
ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் வலது புறம் நித்தியானந்த பிரபுவும், இடது புறம் ஸ்ரீ கதாதரரும் இருக்கின்றனர். அருகில் அத்வைதரும், ஸ்ரீ வாச தாகூரரும் சைதன்ய மகாபிரவிற்கு குடை பிடித்தபடி நிற்கின்றனர்.
3)
நவரத்தின சிம்மாசனத்தில் சைதன்ய மகாபிரபு உட்கார்ந்திருக்க பிரம்மா தலைமையில் தேவர்கள் ஆரத்தி செய்கிறார்கள்.
4)
நரஹரி மற்றும் சைதன்ய மகாபிரபுவின் மற்ற தோழர்கள் சாமரம் வீச, சஜ்ஜய பண்டிதர், முகுந்த தத்தா, வாசு கோஷா ஆகியோர் தலைமையில் பக்தர்கள் இனிமையாக கீர்த்தனையை பாடுகிறார்கள்.
5)
சங்கு, மணி, கரதாளம் இவைகளின் ஓசையுடன், மிருதங்கம் மிக இனிமையாக வாசிக்கப்படுகிறது, இந்த கீர்த்தனை மிக உயர்ந்த இனிமையையும், கேட்பதற்கு ஆனந்தத்தையும் உண்டு பண்ணுகிறது.
6)
சைதன்ய மகாபிரபுவின் முக தேஜஸானது கோடிக்கணக்கான சந்திரர்களை வெல்லக் கூடியதாக இருக்கிறது. கழுத்தை சுற்றி அவர் அணிந்திருக்கும் காட்டு புஷ்பங்கள் ஜொலிக்கின்றன.
7)
சிவபெருமான், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நாரத முனிவர் அனைவரும் அங்கு உள்ளனர், அவர்கள் குரல் தழுதழுக்க தெய்வீக பேரானந்தத்தில் திளைக்கிறார்கள். இவ்வாறு பக்தி வினோத தாகூரர் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் பெருமைகளை மனக்கண்ணால் காண்கிறார்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question