(1)
சேதோ தர்பண-மார்ஜனம் பவ-மஹா-
தாவாக்னி-நிர்வாபணம்
ஸ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம்
வித்யா-வதூ-ஜீவனம்
ஆனந்தாம்புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம்
ஸர்வாதம-ஸ்நபனம் பரம் விஜயதே
ஸ்ரீ கிருஷ்ண-ஸங்கீர்தனம்
(2)
நாம் நாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-சக்திஸ்
தத்ரார்பிதா நியமித; ஸ்மரணே ந கால:
ஏதாத்ருஸீ தவ க்ருபா பகவன் மமாபி
துர்தைவம் ஈத்ருசம் இஹாஜனி நானுராக:
(3)
த்ருணாத் அபி சுனிசேன
தரோர் அபி ஸஹிஷ்ணுனா
அமானீனா மானதேன
கீர்தனீய: ஸதா ஹரி:
(4)
ந தனம் ந ஜனம் ந சுந்தரீம்
கவிதாம் வா ஜகத்-ஈஸ காமயே
மம ஜன்மனி ஜன்மனீஸ்வரே
பவதாத் பக்திர் அஹைதுகி த்வயி
(5)
அயி நந்த-தனுஜ கிங்கரம்
பதிதம் மாம் விஷமே பவாம்புதெள
க்ருபயா தவ பாத-பங்கஜ-
ஸ்தித-தூலீ-ஸத்ருசம் விசிந்தய
(6)
நயனம் கலத்-அஸ்ரு-தாரயா
வதனம் கத்கத-ருத்தயா கிரா
புலகைர் நிசிதம் வபு: கதா
தவ நாம்-க்ரஹணே பவிஷ்யதி
(7)
யுகாயிதம் நிமேஷேண
சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம்
ஸுன்யாயிதம் ஜகத் ஸர்வம்
கோவிந்த-வ்ரஹேண மே
(8)
ஆஸ்லிஷ்ய வா பாத-ரதாம் பினஷ்டு மாம்
அதர்ஸனாம் மர்ம-ஹதாம் கரோது வா
யதா ததா வா விதஹாது லம்படோ
மத்-ப்ராண-நாதஸ் து ஸ ஏவ நாபர:
(1)
ஸ்ரீ கிருஷ்ண நாம ஸங்கீர்த்தனமே மிகப்பெரும் வெற்றியைதரும், ஏனென்றால் இது காலம் காலமாக நம் இதயத்தில் படிந்துள்ள அழுக்கை சுத்தப்படுத்தி, கட்டுண்ட வாழ்வில் தொடரும் பிறப்பு, இறப்பு என்ற தீயை அணைக்கிறது. நிலவு தன் ஒளியால் குளிர்ச்சியை கொடுப்பது போல, இந்த ஸங்கீர்த்தன இயக்கமானது மனித இனத்திற்கு பெரும் வரப்பிரசாதமாகும். இது தெய்வீக ஞானத்திற்கு உயிரூட்டுகிறது. பேரானந்த கடலை பெருக வைக்கிறது. எப்பொழுதும் நாம் விரும்பும் அமுதத்தை முழுமையாக சுவைக்க செய்கிறது.
(2)
எம்பெருமானே, உமது திருநாமம் மட்டுமே அனைத்து ஜீவன்களுக்கும் நன்மை அளிக்கக் கூடியதாகும். இவ்வாறாக கிருஷ்ணா, கோவிந்தா என ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவராயிருக்கிறீர். இத்தகைய தெய்வீக நாமங்களில் உம்முடைய தெய்வீகசக்தியை உள்ளடக்கியிருக்கிறீர்கள். இந்த நாமங்களை ஜெபிப்பதற்கு கடினமான நிபந்தனை எதுவும் இல்லை. உம்முடைய கருணையினால், உம்முடைய தெய்வீக நாமங்களினால், நாங்கள் சுலபமாக உம்மை
அடைந்துவிட முடியும், ஆனால் இத்தகைய நாமங்களில் ருசியற்ற நான் மிகவும் துர்பாக்ய சாலியாயிருக்கிறேன்.
(3)
பகவானின் புனித நாமத்தை ஜெபிக்கும் ஒருவர் தாழ்வான மனநிலையில் இருக்க வேண்டும், தெருவில் உள்ள தூசியை விட தாழ்வாக தன்னை நினைத்து, மரத்தைவிடப் பொறுமையாக, பொய் கர்வங்களை தவிர்த்து, பிறருக்கு எல்லா மரியாதையையும் கொடுக்க தயாராயிருக்க வேண்டும். இத்தகைய மனோபாவத்தில் ஒருவர் பகவானின் புனித நாமத்தை இடைவிடாமல் ஜெபிக்க முடியும்.
(4)
எல்லாம் வல்ல பெருமானே, பொருள் சேர்க்க எனக்குவிருப்பம் இல்லை. அழகிய பெண்களை நான் விரும்பவில்லை, என்னை பின்பற்றுவோரும் எனக்கு வேண்டாம். ஒவ்வொரு பிறவியிலும் உமது காரணமற்ற பக்திசேவையே எனக்கு தேவை.
(5)
நந்த மகராஜாவின் புதல்வனே (கிருஷ்ணா), நான் உனது நிரந்தர சேவகன், எவ்வாறோ நான் பிறப்பு, இறப்பு என்ற கடலில் விழுந்து விட்டேன். தயவு செய்து இதிலிருந்து என்னை கை தூக்கி உனது தாமரைப் பாதங்களில் ஒரு தூசியாக என்னை வைத்துக்கொள்ளும்.
(6)
எம்பெருமானே, உமது புனித நாமத்தை ஜெபிக்கும் போது, என் கண்களில் பக்திப் பரவசத்தால் எப்பொழுது ஆனந்த கண்ணீர் பெருகும்? எப்பொழுது எனது நாதழுதழுத்து, மயிர் சிலிர்த்து உமது நாமத்தை ஜெபிக்கபோகிறேன்?
(7)
ஓ கோவிந்தா! உம்முடைய பிரிவு, ஒரு க்ஷணம் என்றாலும் அது பல யுகங்களாக உணர்கிறேன். கண்களில் கண்ணீர் பெருகி மழை போல் பொழிகிறது. நீர் இல்லாமல் அனைத்து உலகத்தையும் வெற்றிடமாக நான் உணர்கிறேன்.
(8)
கிருஷ்ணரை தவிர வேறு எவரையும் நான் என் இறைவனாக அறியேன். அவர் என்னை முரட்டுத்தனமாக நடத்தினாலும், அணைத்துக் கொண்டாலும், என் முன் தோன்றாமல் என் இதயத்தை நோகச் செய்தாலும் அவரே என் பிரபுவாவார். என்னிடம் எவ்வாறு வேண்டுமானாலும் நடந்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஏனென்றால் அவர் எவ்வித கட்டுப்பாடும் இன்றி எப்பொழுதும் எனதுவணக்கத்திற்குரிய பகவானாவார்.