.
1
நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன்
பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண்
2
(ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவன் ஜன் ஹே)
பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா
போலோ கிருஷ்ண பஜோ கிருஷ்ண கோரோ கிருஷ்ண சிக்ஷா
3.
அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ கிருஷ்ண நாம்
கிருஷ்ண மாதா, கிருஷ்ண பிதா, கிருஷ்ண தன-ப்ராண்
4.
கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார்
ஜீவே தோயா, கிருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார்
1.
நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார்.
2.
ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கெளரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! கிருஷ்ணரையே வழிபடுங்கள்! கிருஷ்ணரைப் பற்றியே அனைவருக்கும் கற்று கொடுங்கள்!!!
3.
வைஷ்ணவ அபராதத்திலிருந்து எப்போதும் கவனமாக விலகியிருங்கள். பிரபு கிருஷ்ணரின் புனித நாமத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே உனது உண்மையான தாய், தந்தை, மற்றும் வாழ்வின் ஒரே பொக்கிஷமும் ஆவார்.
4.
பாவச் செயல்கள் அனைத்தையும் கைவிட்டு உலகச் செயல்கள் அனைத்தையும் கிருஷ்ணருடனான உறவை அடைவதற்காக மட்டுமே செய்ய வேண்டும். கிருஷ்ணரின் புனித நாமத்தை உரக்க அழைத்து அனைத்து மதங்களின் சாரம்சமும் அவரே என்பதை அனைவருக்கும் பறைசாற்றுவதே உண்மையான ஜீவகாருண்யம் ஆகும்.