Tuesday, January 28

ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்கள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


பல்வேறு சாஸ்த்திர நூல்களை ஆய்ந்த பின்னர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னத குணங்களைப் பின்வருமாறு வரிசைப் படுத்துகின்றார்:

  1. அவரது எழில் மிகு அங்க அடையாளங்கள்
  2. சர்வ மங்களத் தன்மைகள் வாய்ந்தது
  3. காணும் கண்ணுக்கு அளவற்ற இன்பம் நல்குவது
  4. ஒளியுடையது
  5. வலிமையுடையது
  6. எப்போதும் இளமையுடனிருப்பது
  7. பன்மொழி அறிவுடையவர்
  8. உண்மையுடையவர்
  9. இனிமையாகப் பேசுவபவர்
  10. ஆற்றொழுக்கு என பேசுபவர்
  11. உயர்கல்வியுடையவர்
  12. சிறந்த புத்திமான்
  13. நுண்ணறிவாளர்
  14. கலைஞர்
  15. மதி நலமிக்கவர்
  16. மேதை
  17. நன்றி மிக்கவர்
  18. உறுதியுடையவர்
  19. காலம் மற்றும் சூழ்நிலைகளின் உயர் நீதி அரசர்
  20. வேதங்கள் அல்லது சாத்திரங்கள்ளில் ஆழங்கால் பட்டவர்
  21. தூய்மையானவர்
  22. சுய அடக்கமுடையவர்
  23. கொள்கை மாறாதவர்
  24. எதையும் தாங்குபவர்
  25. மன்னித்தருள்பவர்
  26. உணர்ச்சியை வெளிப்படுத்தாதவர்
  27. சுய திருப்தியுடையவர்
  28. நடுவு நிலைமையுடையவர்
  29. தாராள மனதுடையவர்
  30. தர்ம நெறி நிற்பவர்
  31. வீரர்
  32. இரக்க குணமுடையவர்
  33. மரியாதை மிக்கவர்
  34. மேன்மையுடையவர்
  35. பரந்த மனமுடையவர்
  36. நாணமுடையவர்
  37. சரணடைந்த ஆத்மாக்களின் பாதுகாவலர்
  38. மகிழ்ச்சியுடையவர்
  39. பக்தர்களின் நலன் நாடுபவர்
  40. அன்பினால் கட்டுப் படுத்தப்படுபவர்
  41. சர்வமங்களமுடையவர்
  42. மகா சக்தியுடையவர்
  43. எல்லாப் புகழுமுடையவர்
  44. எல்லோரிடத்தும் செல்வாக்கு மிக்கவர்
  45. பக்தர்களின் சார்பாக இருப்பவர்
  46. பெண்கள் அனைவரையும் வசீகரிப்பவர்
  47. எல்லோராலும் வணங்கப்படுபவர்
  48. எல்லா வளங்களும் உடையவர்
  49. எல்லா மாண்புகளுமுடையவர்
  50. பரம நெறியாளர்

முழுமுதற் கடவுளிடம் இந்த ஐம்பது உன்னதக் குணங்களும் ஒரு கடலைப் போல ஆழ்ந்து அகன்று விளங்குகின்றன. அதாவது அவரது குணங்கள் கற்பனைக் கெட்டாதவையாகும்.

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐம்பது குணங்கள் தவிர, பகவான் கிருஷ்ணரிடம் மேலும் ஐந்து குணங்கள் இருக்கின்றன. இக்குணங்கள் பிரம்ம தேவரிடமும், சிவபெருமானிடமும் சில வேளைகளில் ஓரளவே வெளிப்படுகின்றன. அவ்வுன்னதக் குணங்கள் பின்வருமாறு

  • மாற்றமின்மை
  • எல்லாம் அறிய வல்ல தன்மை
  • என்றும் புதிதாய் இருத்தல்
  • சச்-சித்-ஆனந்தம் (பரமானந்தமான வடிவம் உடைமை)
  • எல்லாவிதமான யோக ஸித்திகளும் உடைமை

கிருஷ்ணரிடம் மேலும் ஐந்து குணங்கள் இருக்கின்றன. அவை நாராயணிரின் உடலில் வெளிப்படுகின்றன. அவை பின்வருமாறு

  • அவரிடம் கற்பனைக்கெட்டாத சக்தி இருக்கின்றது
  • அவரது உடலிலிருந்து எண்ணற்கரிய பிரபஞ்சங்கள் உண்டாகின்றன
  • அவரே அனைத்து அவதாரங்களுக்கும் மூலாதாரமாக இருப்பவர்
  • அவரால் கொல்லப்படும் பகைவர்களுக்கு அவரே வீடுபேறு அளிப்பவராக விளங்குகிறார்
  • அவரே முக்திபெற்ற ஆத்மாக்களுக்கு கவர்ச்சியளிப்பவராக இருக்கின்றார்.

இவ்வுன்னதக் குணங்கள் அனைத்தும் வியப்பிற்குறிய வண்ணம் பகவான் கிருஷ்ணரின் சுய வடிவத்தில் வெளிப்படுகின்றன.

இந்த அறுபது குணங்களுக்கும் மேலாக கிருஷ்ணரிடம் மேலும் நான்கு குணங்கள் இருக்கின்றன. அக்குணங்கள் நாராயணரின் வடிவத்திலேயே வெளிப்படுவதில்லையென்றால் பிறகு தேவர்களைப் பற்றியோ, உயிர்களைப் பற்றியோ சொல்வதற்கு என்ன இருக்கிறது ? அக்குணங்கள் பின்வருமாறு

  • அவரே பல்வேறு வகையான லீலா வினோதங்களைச் செய்பவர்
  • அவர் எப்போதும் முழுமுதற் கடவுள் மீது அன்புடைய பக்தர்களால் சூழப்பட்டிருக்கிறார்
  • அவர் இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களையும் தமது வேணுகானத்தினால் கவரவல்லவர்.
  • படைப்பில் எதுவும் எங்கும் போட்டியிட முடியாத விந்தைமிகு எழில் நலம் வாய்ந்தவர்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question