ஒரு முறை நாரத முனி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் இந்த சத்தில ஏகாதசியின் மகிமையைப்பற்றி கேட்க, அதற்கு பகவான் கூறினார்.
முன்பு ஒரு காலத்தில் ஒரு பிராமணப் பெண் ஒருத்தி என்னை அன்புடன் பூஜித்து வந்தாள். விரதங்களை (ஏகாதசி, கோகுலாஷ்டமி, இராம நவமி…முதலியன) தவறாமல் அனுசரித்தும், வேண்டியவர்களுக்கு தானங்களை கொடுத்தும், எந்த வித பலனையும் எதிர்பாராமல் என்னையும் பூஜித்தும் வந்தாள். ஆனால், அவளிடம் ஒரு பழக்கம் உண்டு. உணவை பிராமணர்களுக்கோ மற்ற தேவர்களுக்கோ அளிக்க மாட்டாள். இதை நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். இவள் தன் கடும் விரதங்களாலும், பூஜைகளாலும் என் உலகை அடையத்தகுந்தவள் என்றாலும் நான் அவளை சோதிக்க எண்ணி, மண்டை ஓடு மாலை அணிந்த சிவணடியார் வேடம் பூண்டு அவளிடம் சென்றேன். அவளிடம் நான் பிச்சை கேட்க, அவள் கோபமுடன் சேற்றை (களிமண்) என் பிச்சை பாத்திரத்தின் மீது எறிய, நான் என் இடம் திரும்பி வந்தேன். காலம் கணிந்தது. அவளும் தன் விரதம், தானம் பூஜை ஆகியவற்றால் அதே மனித உடலோடு, என் இடம் வந்தாள்: அன்று அவள் கொடுத்த சேற்றை (களிமண்) வைத்து நான் அவளுக்கு வீடு கட்டினேன். ஆனால் அதில் தானியங்களோ, நகைகளோ, வேறு வீட்டு உபயோக பொருட்களோ இல்லை. இதனால் அவள் என்னிடம் வந்து முறையிட்டாள்.
நீ வீட்டிற்கு திரும்பவும் செல், தேவர்களின் மனைவியர்கள் உன்னைப்பார்க்க வருவார்கள். கதவை திறக்காதே, சத்தில ஏகாதசியின் பெருமைகளை கேள், அவர்கள் சொன்ன பிறகு கதவைத்திற என்று சொன்னேன், தேவர்களின் மனைவியரும் அவள் வீட்டிற்கு வந்து. கதவை தட்ட அவளும் சத்தில ஏகாதசியின் பெருமைகளை கேட்க அவர்கள் ஒன்றும் சொல்லாமல் திரும்பினார்கள். பிறகு அதில் ஒருத்தி மட்டும் வந்து ஏகாதசியின் பெருமைகளை சொல்ல அவள் கதவை திறந்தாள்.
பிறகு வந்த சத்தில ஏகாதசியில் அவள் விரதம் இருந்து சரியாக அனுஷ்டித்ததாள் அவளுக்கு சத்-சித்-ஆனந்த உருவை கொடுத்து, மனித உருவை எடுத்தேன். இதுவே இந்த ஏகாதசியின் பலன் என்றார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
எனவே இந்த சத்தில ஏகாதசியன்று ஒருவர், துணிமணிகள், உணவு ஆகியவற்றை தன்னால் முடிந்த அளவு தானமாக கொடுக்கலாம். இதனால் பாவங்கள் நீங்கும், வாழ்வு வளம் பெறலாம். பகவானின் இருப்பிடமாகிய வைகுண்டத்திற்கு செல்வது உறுதி. மேலும் பகவானின் புணிதமான நாமமாகிய “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே”. என்ற மந்திரத்தை சொல்வீராக.
I already have whatsup application.
Kindly send a message to Bhakti Yogam number – 75399 16108