ப்ரேமே ரேபரமஸாரா மஹா பாவ ஜானி
குஸமஹா பாவரூபா ராதா தாக்கூராணி
ஆனந்த குண ஸ்ரீராதிகாரா பஞ்சீக ப்ரதான
ஏகுணேர வாசி ஹயா க்ருஷ்ண பகவான்
-சைதன்ய சரிதாமிருதம் (8.160)
பக்தியுடைய சாரம் மஹாபாவம் ( ஆன்மீகஆனந்தம் ) என்று அழைக்கப்படுகிறது . அவைகளை ஸ்ரீமதி ராதாராணி பிரதிபலிக்கிறாள். ஸ்ரீமதிராதாராணியை விட உயர்ந்த பக்தர் யாரும் கிடையாது. அளவற்ற வகையில் பக்தி குணங்கள் உடையவள். அவள் தன்னிடமுள்ள இருபத்தைந்து பிரதானமான பக்தி குணங்களால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை தன்வசம் வைத்திருக்கிறாள்.
1. மதுரா : மிகவும் இனிமை நிறைந்தவள்
2. நவ்யா : புத்துணர்வோடு இளமையாக இருத்தல்
3. சால அபங்க :கண்கள் ஓய்வற்று கிருஷ்ணரை நாடிக் கொண்டிருக்கும்.
4. உஜ்வல ஸ்மிதா : பிரகாசமான சிரிப்பை உதிர்ப்பவள்
5. சாது சௌபாக்ய ரேக ஆத்யா :உடலில் அழகும் மங்களமும் நிறைந்த ரேகைகள் கொண்டவள்.
6. கந்த அன் மடித்த மாதவ : தன் உடலில் உள்ள நறுமணத்தால் கிருஷ்ணரை கவருபவள்.
7. சங்கீத ப்ரஸார அபிக்யா : சிறந்த பாடகி
8. ரம்ய வாக் :வசீகரமான பேச்சுத்திறன் கொண்டவள்.
9. நார்மபண்டிதா : நகைச்சுவையாக பேசுவதில் சிறந்தவள்
10. வினிதா : பணிவும் அடக்கமும் கொண்டவள்
11. கருண பூர்ணா : முழு கருணை உள்ளம் கொண்டவள்
12. விதாப்தா : தந்திர சுபாவம் கொண்டவள்
13. பார்த்தவ அன்வீதா :தன் கடமைகளைச் செய்வதில் சாமார்த்தியம் கொண்டவள்.
14. லஜ்ஜ ஸூலோ : கூச்ச சுபாவம் கொண்டவள்
15. சூ மரியாதா : மரியாதை கொண்டவள்
16. தைர்ய : சலனமற்றவள்
17. காம்பீர்ய சாலினி : கம்பீர மனம் உடையவள்
18. சூவிலாச : விளையாட்டு சுபாவம் கொண்டவள்
19. மஹாபாவ : உயர்ந்த ஆன்மீக ஆனந்தத்தை உடையவள்
20. பரம உர்கஷ தர்ஷினி கோகுலப் ப்ரேமா : தலை சிறந்தவள்
21. ஜகத் ஸ்ரீ நியாஸா : அடக்கமான பக்தர்களில் மிகவும் புகழ்வாய்ந்தவள்
22. குரு ஸ்நேகா : பெரியவர்களிடம் பிரியம் கொண்டவள்
23. சகி ப்ரணமித வாஸா : கோபியர்களின் அன்பிற்கு கட்டுப்பட்டவள்
24. க்ருஷ்ணப்ரிய ஆவளிமுக்யா : கோபியர்களின் தலைவி
25. ஆஸ்ரவ கேசவா :கிருஷ்ணரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவள்.
ஸ்ரீ மதி ராதா ராணியின் பாத கமலங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரமங்கள் .
Srimati radharani radhashtami ki jai
பொற்றாமரையால்
திருமதி ராதா ராணி நமக்கெல்லாம் தாய் அவருடைய பிறந்தநாளான இன்று அதிகமாக நாமங்களை ஜெபம் செய்து ராதாரணியின் அருளையும் பங்காராய ஸ்ரீ கிருஷ்ணரின் அருளையும் நமது குருவின் ஆசிர்வாதத்துடனும் அருளுடனும் பெற்றுக் கொள்வோம் வாருங்கள்
Radhakrishna kki jey