(1)
ஸம்சார-தாவாநல-லீட-லோகா
த்ராணாய காருண்ய-கனாகனத்வம்
ப்ராப்தஸ்ய கல்யாண-குணார்ணவஸ்ய
வந்தே குரோ ஸ்ரீ-சரணாரவிந்தம்
(2)
மஹாப்ரபோ கீர்தன-ந்ருத்ய-கீதா
வாதித்ர-மாத்யன்-மனஸோ ரஸேனா
ரோமஞ்ச-கம்பா ஸ்ருதரங்க-பாஜோ
வந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்
(3)
ஸ்ரீ-விக்ரஹாராதன-நித்ய-நாநா
ஸ்ருங்கார-தன்-மந்திர-மார்ஜனாதெள
யுக்தஸ்ய பக்தாம்ஸ் ச நியுஞ்ஜதோ பி
வந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்
(4)
சதுர்-வித-ஸ்ரீ-பகவத்-பிரஸாதோ
ஸ்வாத்வ்-அன்ன-த்ருப்தான் ஹரி-பக்த-ஸங்கான்
க்ருத்வைவ த்ருப்திம் பஜதக் சதைவா
வந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்
(5)
ஸ்ரீ-ராதிகா-மாதவயோர்அபாரா
மாதுர்ய-லீலா-குண-ரூப-நாம் நாம்
ப்ரதி-சஷணாஸ்வாதன-லோலுபஸ்ய
வந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்
(6)
நிகுஞ்ச-யூனோ ரதி-கேலி-சித்யை
யா-யாலிபிர் யுக்திர் அபேக்ஷணீயா
தத்ராதி-தாக்ஷ்யாத் அதி-வல்லபஸ்ய
வந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்
(7)
ஸாக்ஷாத்-தரித்வேன சமஸ்த-சாஸ்த்ரைர்
யுக்தஸ் ததா பாவ்யத ஏவ ஸத்பி;
கிந்து ப்ரபோர் ய ப்ரிய ஏவ தஸ்ய
வந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்
(8)
யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ
யஸ்யாப்ரஸாதான் ந கதி குதோ பி:
த்யாயன் ஸ்துவம்ஸ் தஸ்ய யசஸ் த்ரி-ஸந்த்யம்
வந்தே குரோ ஸ்ரீ சரணாரவிந்தம்
(1)
மேகங்கள் எவ்வாறு மழையை பொழிந்து காட்டுத் தீயை அணைக்கின்றதோ அவ்வாறே கருணைக் கடலாகிய ஆன்மீக குருவானாவர் பெளதிக விவகாரங்களினால் தகிக்கப்படும் இவ்வுலகை காப்பாற்றுகிறார். மங்களகரமான குணங்களை உடைய அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
(2)
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் ஸங்கீர்த்தன இயக்கத்தில் புனிதநாமத்தை ஜெபித்து, நடனமாடி, பாடி, இசை கருவிகளை இசைத்து ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் ஆனந்தமடைகிறார். சில நேரங்கள் மயிர்கூச்செரிந்து, உடல் நடுங்க, கண்களில் நீர் மல்க தனது தூய பக்தியை வெளிப்படுத்துகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
(3)
ஆன்மீக குருவானவர் எப்பொழுதும் கோவிலில் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணரை வழிபட்டு, தனது சிஷ்யர்களையும் இந்த வழிபாட்டில் ஈடுபடுத்துகிறார். அவர்கள் அழகிய ஆடை, நகைகளால் விக்ரஹங்களை அலங்கரித்து, கோவிலை தூய்மை படுத்தி, இதுபோன்ற சேவைகளை புரிகிறார்கள். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
(4)
ஆன்மீக குருவானவர் எபொழுதும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நான்கு வகையான அறுசுவை உணவுகளை நெய்வேத்யம் செய்கிறார். பகவத் பிரஸாதத்தை ஏற்கின்ற பக்தர்களைக் கண்டு தான் திருப்தி அடைகிறார். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
(5)
ஸ்ரீ ராதிகா மாதவரின் எல்லையற்ற மாதுர்ய லீலைகளை கேட்டும், நினைத்தும் அவர்களின் நாமங்களிலும், ரூபங்களிலும் ஆர்வம் கொண்டும், எல்லா நேரங்களிலும் இவைகளை வெளியிட பேராவல் மிக்கவராய் இருக்கிறார் ஆன்மீக குருவானவர். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
(6)
வ்ருந்தாவனத்தில் ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணரின் மாதுர்ய லீலைகளுக்கு வெவ்வேறு வகையான ஏற்பாடுகளை செய்யும் கோபிகைகளுக்கு பொருத்தமான, சிறந்த ஏற்பாடுகளை செய்வதில் அனுபவமிக்கவரான ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
(7)
குரு என்பவர் உண்மையில் பகவத் ஸ்வரூபமாக ஆராதிக்கப்பட வேண்டியவர். ஏனென்றால் அவர் பகவானுடைய அந்தரங்க தாஸன் என்பதை சாஸ்த்திரங்களும், எல்லா ஆன்மீக அதிகாரிகளும் ஒப்புக் கொள்கிறார்கள். அத்தகைய ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.
(8)
ஆன்மீக குருவின் கருனையை பெறாமல் ஒருவரால் கிருஷ்ணரின் ஆசீர்வாதங்களை பெறமுடியாது.ஆன்மீக குருவின் கருணை இல்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.ஆதலால் ஒருவர் எப்பொழுதும் ஆன்மீக குருவை நினைத்து பொற்றி புகழ வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு மூன்று முறையாவது ஆன்மீக குருவிற்கு மரியாதை கலந்த வணங்களை சமர்பிக்க வேண்டும். எனது ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களுக்கு எனது மரியாதை கலந்த நமஸ்காரங்கள்.