Thursday, November 21

துர்லப மானவ ஜன்ம

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது-பக்தி வினோததாக்குரரின் “கல்யாண கல்பதரு” ~ விலிருந்து


1.
துர்லப மானவ – ஜன்ம லபியா ஸம்ஸாரே க்ருஷ்ண நா பஜினு – து:க கஹிபோ காஹாரே ?
2.
“ஸம்ஸார் ‘ ஸம்ஸார்” , கோரே மிச்சே கேலோ கால் லாப நா கோய்லோ கிச்சு , கடிலோ ஜஞ்ஜால்
3.
கிஷேர் ஸம்ஸார் யேய்ச்சாயா பாஜி ப்ராய் இஹாதே மமதா கோரீ ப்ருதா தின ஜாய்
4.
யே தேஹோ பத்தன ஹோய்லே கி ரோய்பே ஆமார் கேஹோ சுக நாஹி திபே புக்ர~பரிவார்
5.
கர்தபேர் மத ஆமி கோரி பரிஷ்ரம் கா’ர் லாஹி யேதோ கோரி, நா குச்சிலோ பிரம்
6.
தினா ஜாய் மிச்சா காஜே , நிஷா நித்ரா பஸே நாஹி பாவி ~ மரண நிகடே ஆச்சே போ ‘ ஸே
7.
பாலோ மந்த காய் , ஹேரி , பரி , சிந்தா ஹீனி நாஹி – பாவி , யேதேஹோ சாடிபோ கோன்தின
8.
தேஹோ – கேஹோ – கலத்ராதி – சிந்தா அவிரத ஜாகிச்சே ஹ்ருதோயே மோர் புத்தி கோரி ஹத
9.
ஹாய் , ஹாய் ! நாஹி பாவி – அநித்ய யே ஸப ஜீவன விகதே கோதா ரோஹிபே வைபவ ?
10.
ஸ்மாஷானே க்ஷரீர் மம போடியா ரோஹியே பிஹங்க – பதங்க தாய் பிஹார் கோரிபே
11.
குக்கர் ஸ்ருகால் சப் ஆனந்தித ஹோ ‘ யே மஹோத்சவ கோரியே ஆமாம் தேஹோ லோ’ யே
12.
ஜே தேஹேர் யேய் கதி , தார் அனுகத ஸம்ஸார் – வைபவ ஆர் பந்து – ஜன ஜத
13.
அதைவ மாயா – மோஹச் சாடி புத்திமான் நித்ய ~ தத்வ கிருஷ்ண பக்தி கொருணா ஸந்தான்


1.
ஆன்மீகத் தன்னுணர்வை அடைய, மனித வாழ்வானது கிடைத்தற்கரிய வாய்ப்பாக இருந்த போதும், என்னை நான் துன்பச் சுழலுக்குள்ளேயே சிக்க வைத்துக் கொண்டு துன்பங்களையே தொடர்ந்து அனுபவித்து வருகிறேன். எது எப்படியாகிலும் ஏதோ ஒரு வழியில் எனக்கு இந்த மனிதப் பிறவி கிடைத்த போதிலும், நான் சுலபமாக அதை வீணடித்து ஒரு போதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்காது இருக்கின்றேன். ஓ, யாரிடம் எனது தவறுகளின் எண்ணிக்கையை சொல்லி முறையிடுவேன்.
2.
திருமண வாழ்வை மேற்கொண்டு ஜட உலகின் குடும்ப வாழ்வென்னும் துன்பங்களின் வலைக்குள் நுழைந்ததன் மூலம் நான் எனது பொன்னான நேரத்தை வீணடித்து விட்டேன். மேலும் நான் ஜட வாழ்வின் மூலம் நிரந்தர பயனையோ, நீடித்த பலனையோ துளியும் பெறவில்லை . ஆனால் தொடர்ந்த துன்பங்களையும் , தொல்லை கொடுக்கும் நிலைகளையுமே கண்டேன்.
3.
இந்த உலகத்தின் நிலைதான் என்ன ? இந்த உலகமானது ஒரு மாயாஜால விளக்கை போன்று காட்சியளிக்கிறது. இதனுள் நிறைய, நிழற்படங்களை போன்ற கண்களை ஏமாற்றும் மாயாஜால ஆடல்களே என் கண் முன்னே தெரிகின்றது. இந்த உலகில் பற்றுதலும், பலன் கருதலுமே நிரப்பியுள்ளதை முழுமையாக உணர்கிறேன். மேலும் நேற்று, இன்று, நாளை என்று எந்தவிதமான குறிக்கோளும் இன்றியே ஒவ்வொருவரும் திரிகின்றனர்
4.
எப்பொழுது உயிர் பிரிந்து இந்த உடலானது நிலத்தில் விழுகின்றதோ , அதன் பிறகு எனக்காக எஞ்சியிருப்பது என்ன ? அந்த சூழ்நிலையில் எனது எல்லா மகன்களாலும் , மற்றும் நெருங்கிய அன்பு மிக்கவர்களாலும் எனக்கு எந்த ஆனந்தமும் கொடுக்க முடியாது.
5.
நான் தினமும் கழுதையைப் போல் மிகவும் கடினமாக உழைக்கின்றேன் . இதனால் நான் என்னையே ஆச்சர்யத்துடன், ” என்னைவிட கடினமாக உழைப்பவர் யார் ? என்று கேட்டுக் கொள்கிறேன் . என்னை நானே கணக்கிலடங்கா மாயவலையில் சிக்க வைத்துக் கொள்கிறேன் .
6.
நான் ஒவ்வொரு நாளையும் உபயோகமற்ற அற்பமான, இழிவான வேலைகளை கடுமையாக செய்து முடிப்பதும், ஒவ்வொரு இரவையும் உறக்கத்தின்பிடிக்குள்ளுமாக பொழுதை கழிக்கின்றேன். மேலும் இந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் ஒருமுறை கூட கொடுமையான மரணமானது எப்போதும் என் முன் அமர்ந்து கொண்டு இருப்பதை நான் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
7.
நான் கற்பனை செய்து கொண்டிருப்பது என்னவென்றால் “நான் மிகவும் சுதந்திரமான வாழ்வு முறையை மேற்கொண்டுள்ளேன்.” என்று மேலும் சிலசமயம் நிறைய உண்கிறேன். சிலசமயம் குறைவாக உண்கிறேன். எல்லாம் என் விருப்பம் போல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் நான் நகரத்தை சுற்றித் வந்து அருமையான பொருள்களைக் காண்கிறேன். சில நேரங்களில் வெளியே நான் செல்வதே இல்லை என்று எண்ணுகிறேன். எனது விருப்பப்படி நான் சிலசமயம் உயர்ந்த பகட்டான ஆடைகளை அணிகிறேன். சிலசமயம் மிகவும் எளிமையான உடையணிகிறேன். நான் மிகவும் சுதந்திரமாக வாழ்வதாக நினைத்து, “ஒரு நாள் இந்த உடம்பை விட வேண்டி வரும்” என்பதனை சிந்தனை கூட செய்து பார்க்காமல் இருக்கின்றேன்.
8.
ஆனால் , உண்மையில் எனது பலகீனமான இதயம் எப்போதும் தொடர்ந்த தொல்லைகளால் பிடுங்கப்பட்டு , எனது உடல் மீது கவனம் , உடல் பராமரிப்பு , எனது வீடு , எனது மனைவி , எனது குடும்ப உறுப்பினர்கள் மேலும் சமுதாயக் கடமைகள் என்று பலவித துன்பங்களால் அழுத்தப்படுகின்றன . இவ்வகைத் துன்பங்களனைத்தும் ஒன்று சேர்ந்து எனது தெளிவான உண்மை அறிவை அழித்துவிட்டன .
9.
ஐயகோ ! ஐயகோ செய்த தவறுக்கு வருந்தும் எண்ணம் என்னுள் தோன்றினால்தான் என்ன ! ஒவ்வொன்றாக தோன்றும் எல்லாவிதமான துன்பங்களையும் கவனித்த பின்பும் இங்கிருக்கும் அனைத்து பொருட்களும் நிலையற்றவை , வெகு விரைவில் அழிய போகின்றன என்று தெரிந்த பின்பும் , நான் இதைப் பற்றிய சிந்தனையை மேற்கொள்ள வில்லையே நான் இறந்து போன பிறகு ” எனது ஜடபகட்டுகள் எஞ்சி இருந்து தான் என்ன பயன் ? “
10.
எப்பொழுது என் உடல் சவக்குழியில் எறியப்பட்டதோ , அப்பொழுது நான் எவ்வித அசைவுமின்றி , ஆரவாரமின்றி படுத்துக் கொண்டுள்ளோம் . பின்னர் பலவகைப்பட்ட காக்கைகள் , கழுகுகள் , எறும்புகள் மற்றும் புழு பூச்சிகள் அனைத்தும் சூழ்ந்து கொண்டு என் உடலை பந்தாடத் தொடங்கின .
11.
மேலும் அலைந்து கொண்டிருக்கும் நாய்களும் , நரிகளும் மிகுந்த விருப்பத்துடன் , அவ்விடத்தில் கூடி மிக்க ஆனந்தத்துடன் , ஒரு திருவிழாவையே நிகழ்த்தி எனது உடலை மண்ணிலிருந்து வெளியே இழுத்து பிரம்மாண்டமான விருந்தை ஏற்பாடு செய்து கொண்டன.
12.
இதோ பாருங்கள் , இது தான் உடல் இறுதியாக அடையுமிடமாகும் . கிடைத்தற்கரிய பொருள்களை அடைவதிலும் ஜட வசதிகளையும், (எனது வீடு,குடுப்பம்) மற்றும் பெருக்கிக் கொள்வதையே அனைவரும் தமது முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனர்.
13.
எனவே உங்கள் அனைவருக்கும் எனது அறிவுரை என்னவெனில் , எவர் தமது அறிவை தெளிவாக்கிக் கொள்ள விரும்புகின்றனரோ அவர்கள் தயவு செய்து மாயையால் பரிசளிக்கப்பட தற்காலிகமான , அனைத்துவித மயக்கும் ஜட பந்தத்தினின்றும் விடுபட்டு, பகவான் கிருஷ்னருக்கு தூய பக்தி தொண்டு செய்யும் நிலையை அடைய முயற்சி செய்ய வேண்டும் . ஏனெனில் இது ஒன்று மட்டுமே நித்தியமான உண்மையாகும்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question