ராதே ஜய ஜய மாதவ-தயிதே
கோகுல-த்ருணீ-மண்டல-மஹிதே
(1)
தாமோதர-ரதி-வர்தன-வேசே
ஹரி-நிஷ்குத-வ்ருந்தா-விபினேசே
(2)
வ்ருஷபானுதனி-நவ-சசி-லேகே
லலிதா-ஸகி குண-ரமித-விசாகே
(3)
கருணாம் குரு மயி கருணா-பரிதே
ஸனக-ஸனாதன-வர்ணித-சரிதே
(குழுவினர்)
ஓ ராதையே! மாதவனால் நேசிக்கப்படுபவரே! கோகுலத்தில் உள்ள இளம் பெண்களால் வண்ங்கப்படுபவர் நீங்களே! எல்லாப் புகழும் உங்களுக்கே, எல்லாப் புகழும் உங்களுக்கே!
(1-3) தாமோதரரின் அன்பை அதிகப்படுத்தி உங்கள் மேல் பற்றுதல் உண்டாக்கும்படி உங்கள்
நீங்களே அலங்கரித்துக் கொள்கிறீர்கள். விருந்தாவனத்தின் அரசியான நீங்கள், பகவான் ஹரியின் ஆனந்தத்தை அதிகரிக்கிறீர்கள்! வ்ருஷ்பானு என்ற அரசரின் கடலிலிருந்து உதித்த புதிய நிலாவே! லலிதாவின் தோழியே, நீங்கள் கிருஷ்ணரிடாத்தில் உண்மை, அன்பு, தோழமை போன்ற உங்களது அற்புதமான தன்மைக்கேற்ப விசாகாவை உங்களுக்கு
விசுவாச முள்ளவராக ஆக்குகிறீர்கள்!
ஓ கருணைக் கடலே! ஓ ராதே உங்களுடைய தெய்வீக நற்குணங்கள் மிகச்சிறந்த முனிவர்களானஸனகர், ஸனாதார் போன்றவர்களால் விவரிக்கப்படுகிறது! ஓ ராதையே,
தயவு செய்து எனக்கு கருணை காட்டுங்கள்.