இந்த ஆலயம் ஆந்திராவின் அஹோபிலத்தில் உள்ள ஒன்பது நரஸிம்ம ஆலயங்களில் ஒன்றாகும். இந்த ஆலயம் கீழ் அஹோபிலத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில், புனித குளம் பார்கவ தீர்த்தம் அல்லது அக்ஷய தீர்த்தம் அருகே ஒரு மலையில் அமைந்துள்ளது.
இடங்கள் மற்றும் லீலைகள்
பரசுராமர் இங்கே தவம் செய்தார்:
பார்க்கவ ராமர் என்று அறியப்பட்ட பரசுராமர் தனது தவத்தை நிகழ்த்திய இடம் இது. எனவே இங்குள்ள பகவான் “பார்க்கவ நரஸிம்ம” சுவாமி என்று அழைக்கப்படுகிறார். விஷ்ணுவின் ஒரு அவதாரம் மற்றொரு அவதாரத்தை வணங்குவதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் பரசுராமர் “கெளவன அவதாரம்”, நரசிம்மர் “முக்ய அவதாரம்”.
நரஸிம்ம பகவானை தரிசனம் செய்ய பார்கவ முனி தவம் செய்தார் என்றும் நம்பப்படுகிறது.
ஆலயம்
அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த ஆலயம் 132 படிகள் கொண்ட ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலவர் “பார்க்கவ நரஸிம்மர்” என்று அழைக்கப்படுகிறார். மூலவர் சூர்யன் / சூரியனை ஆட்சி செய்கிறார். இங்கே பகவான் 4 கரங்களுடன் காணப்படுகிறார், இரண்டு ஷங்கு & சக்ரம் மற்றும் மற்ற இரண்டு கைகள் ஹிரண்யாவின் உடலைக் கிழிக்கின்றன. பர்க்கவ நரஸிம்மரின் ஆலயத்தில் தசாவதர செதுக்கள்களைக் காணலாம். மேலும், பிரஹலாதரை பகவானின் காலடியில் காணலாம். இந்த ஆலயத்துக்கு அருகில் பார்கவ தீர்த்தம் / அக்ஷய தீர்த்தம் என்று ஒரு புனித குளம் உள்ளது.