Thursday, July 11

ஸ்ரீ ஜெகந்நாதாஷ்டகம் (சங்கராச்சாரியார்)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

(1)
கதாசித் களிந்தி-தத-விபின்னா-சங்கீத்தக-ராவோ
முடாபீரி நாரி வதானா கமலாஸ்வதா-மதுபக
ரமா-சம்பூ-பிரஹ்மரா-பதி கணேஷார்சித்தோ பதோ
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே
(2)
புஜெ ஸ்வயே வேணும் சிசி சிகி-புச்சம் கதிததே
துகுலம் நேத்ரன்டே-சாக்சரா-ஷ்க்ஷம்- விதததே
சதா-ஸ்ரீமத்-விருந்தாவன-வசதி-லீல பரிசயோ
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே
(3)
மகம்போதேஸ் தீரே கனக ருசிரேநீலசிகரே
வாசன் பிரசாதாத் சகஜ பலபத்ரேன பலினா
சுபத்ரா-மத்ய-ஸ்த்தாசகலசரசேவாவசரா-தோ
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே
(4)
கிருபா-பராவராகசஜலே-ஜலதா-சிரினி-ருசிரோ
ரமா-வாணி-ரமாகஸ்புரத்-அமல-பெளக்ரேன்கமுக
சுரேந்திரோ அராதியக சுருதி-கன-சிகா-கீத-சரிதோ
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே

(5)
ரதாருதோ கச்சன் பதி மிலித-பூதோவ-பதலய்க
ஸ்ருதி-ப்ரதுர்பவம் ப்ரதி-பதம்உபகாரண்யசதயக
தயா-சிந்தோர் பந்தோ சகல-ஜெகதம் சிந்து-சதயோ
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே
(6)
பரா-பிரம்மாபிதிக குவலய-டலோல் புல-நயனோ
நிவிசி நிலத்ரு நிகித்த-சரணோ அனந்த சீரசி
ரசானந்தோ ராதா-சரச-வாபுர் அலிங்கனா சுபா
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே
(7)
நவை யக்கி ராஜ்யம் நச கனக மாணிக்க-வைபவம் ந
யார்க்கி அகம் ரம்யம் சகல-ஞான-கம்யம்வரம் வதுகும்
சதா காலே காலே பிரமாத பதினா கீத சரிதோ
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே
(8)
ஹரா த்வம் சம்சாரம் துருததரம் அசரம் சுர-பதே
ஹராத்வம் பாபனம் விததிம் அபரம் யதவர-பதே
ஆகோ தினே ஆனதே நிகித்த
சரணோ நிஸ்சித்தம் இதம்
ஜெகந்நாத சுவாமி நயனபத காமி பவது மே


1
யமுனைக் கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன் புல்லாங்குழலை ஊதி இசைக்கச்சேரி நிகழ்த்துவார். அவர் விரஜபூமியிலுள்ள இடைய கன்னியர்களின் தாமரை போன்ற வதனங்களை சுவைக்கும் பெரும் வண்டு போன்றவர். அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மஹா ஜனங்களால் பூஜிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஜெகந்நாத ஸ்வாமியின் தரிசனத்தை யாசிக்கிறேன்.
2
பகவான் ஜெகந்நாதர் இடது கரத்திலே புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார். இடுப்பில் மஞ்சள்நிறப்பட்டு உடுத்தியிருக்கிறார். அவருடைய கடைக் கண்கள் அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன. அவர் தனது நித்திய இருப்பிடமாகிய விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு தன்னை வெளிப்படுத்துகிறார். அப்படிப்பட்ட ஜெகந்நாத ஸ்வாமியின் தரிசனத்தை யாசிக்கிறேன்.
3
பெரிய சமுத்திரத்தின் கரையில் தங்கமயமான நீலாசல மலையில் உச்சியில் இருக்கும் பெரிய மாளிகையில், சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே தங்கை சுபத்ராவுடனும் வீற்றிருந்து பகவான் ஜெகந்நாதர், தேவர்களைப் போன்ற தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவவை யாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட ஜெகந்நாத ஸ்வாமியின் தரிசனத்தை யாசிக்கிறேன்.
4
பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம், மழை, முகில்களின் கறுப்புக்கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர், லக்ஷ்மி தேவியின் இன்பவார்த்தைகளால் திருப்தியடைபவர். அவருடைய வதனம் நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது. அவர் தேவர்களாலும் முனிவர்களாலும் பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷதங்களில் பாடப்படுகின்றன. அப்படிப்பட்ட ஜெகந்நாத ஸ்வாமின் தரிசனத்தை யாசிக்கிறேன்.
5
பகவான் ஜகந்நாதர் தன் ரதத்தில் அமர்ந்து வீதிகளில் வலம் வரும்பொழுது, அங்கே குழுமியிருக்கும் பிராமணர்கள், ஒவ்வொரு அடிக்கும், பிரார்த்தனைப் பாடல்களால் அவரை புகழ்கிறார்கள். அவற்றை கேட்கும், பகவான் ஸ்ரீ ஜகந்நாதர் அவர்கள் மேல் அருள்பாலிக்கிறார். கருணைக் கடலான அவர், அகில உலகங்களுக்கும் உண்மையான நண்பனாவார். அமிர்த கடலிலிருந்து பிறந்த லஷ்மித் தாயாருடன் ஜகந்நாத ஸ்வாமியின் தரிசனத்தை யாசிக்கிறேன்.
6
பிரம்மாவின் தலையில் அணியும் ஆபரணமாக இருக்கும் அவருடைய கண்கள் முழுவதும் மலர்ந்த தாமரையின் இதழ்கள் போல் இருக்கின்றன. நிலாச்சல மலையில் வசிக்கும் அவரின் பாத கமலங்கள் அனந்த தேவரின் திருத்தலை முடிவில் அமர்ந்திருக்கின்றன. தூய அன்பில் திளைத்திருக்கும் பகவான் ஸ்ரீ ஜகந்நாதர், குளிர்ந்த தடாகம் போன்ற ஸ்ரீமதி ராதாராணியைத் தழுவுகையில் ஆனந்தம் அடைகிறார். அப்படிப்பட்ட ஜக்ந்நாத ஸ்வாமியின் தரிசனத்தை யாசிக்கிறேன்.
7
நான் ராஜ்யத்தையோ, தங்க வைர வகைகளையோ செல்வத்தையோ யாசிக்கவில்லை. மற்ற எல்லா ஆண்கள் கேட்பது போல் அழகான சிறந்த மனைவியை யாசிக்கவில்லை. பகவான் பரமசிவன் எப்பொழுதும் புகழ்ந்துரைக்கும் ஸ்ரீ ஜகந்நாத ஸ்வாமியின் தரிசனத்தையே யாசிக்கிறேன்.
8
தேவர்கள் தொழும் பகவானே, நான் இப்பொழுது அனுபவிக்கும் பயனற்ற இந்த ஜட வாழ்க்கையை விரைவில் நீக்குங்கள். யாதவர்களின் தலைவரே, கரையில்லாமல் விரிந்திருக்கும் இந்தப் பாவக்கடலைப் பொசுக்குங்கள். தங்களை இழிந்தவர்களாகக் கருதும் இவ்வுலகில் வேறெந்த புகலிகமும் இல்லாமல், அவரையே தஞ்சம் அடைந்தவர்களுக்கு பகவான் ஜகந்நாதரின் பாத கமலங்கள் கிட்டும். அப்படிப்பட்ட ஜகந்நாத ஸ்வாமியின் தரிசனத்தை யாசிக்கிறேன்.


+1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question