Saturday, July 27

விபாவரி சேஷ (கல்யாண கல்ப-தருவிலிருந்து)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

(1)
விபாவரீ சேஷ ஆலோக-ப்ரவேச
நித்ரா சாரி உடோ ஜீவ
போலோ ஹரி ஹரி முகுந்த முராரி
ராம க்ருஷ்ன ஹயக்ரீவ

(2)
ந்ருஸிம்ஹ வாமன ஸ்ரீ-மதுஸுதன
ப்ரஜேந்ர-நந்தன ஸ்யாம
பூதன-காதன கைடப-சாதன
ஜய தாசரதி-ராம

(3)
யசோதா துலால கோவிந்த-கோபால
வ்ருந்தாவன புரந்தர
கோபி-ப்ரிய-ஜன ராதிகா-ரமண
புவன-சுந்தர-பர

(4)
ராவாணாந்தகர மாகன-தஸ்கர
கோபி-ஜன-வஸ்த்ர-ஹாரி
ப்ரஜேர ராகால கோப-வ்ருந்த-பால
சித்த-ஹாரி பம்சீ-தாரீ

(5)
யோகீந்த்ர-பந்தன ஸ்ரீ-நந்த-நந்தன
ப்ரஜ-ஜன-பய-ஹாரி
நவீன நீரத குப மனோஹர
மோஹன-பம்சீ-பிஹாரீ

(6)
யசோதா-நந்தன கம்ஸ-நிஸூதன
நிகுஞ்ஜ-ராஸ-விலாஸீ
கதம்ப-கானன ராஸ-பராயண
ப்ருந்த-விபின்ன-நிவாஸி

(7)
ஆனந்த-வர்தன ப்ரேம-நிகேதன
புல-சர ஜோஜக காம
கோபாங்கனா-கண சித்த-வினோதன
ஸமஸ்த-குண-கண-தாம
(8)
ஜாமுன-ஜீவன கேலி-பராயண
மானஸ-ஸ்ந்தர-சகோர
நாம-ஸுதா-ரஸ காவோ க்ருஷ்ண-ஜச
ராகோ வ சன மன மோர


1)
இருள் முடிந்த அதிகாலைப் பொழுது விடிகிறது. ஓ ஜீவனே(ஆத்மா) தூக்கத்தை விட்டு எழுந்திரு, முக்தியைக் கொடுப்பவரும், முர என்ற அசுரனின் விரோதியும்; உன்னத அனுபவிப்பாளரும்; அனைவரையும் கவர்ந்திழுப்பவரும்; குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்த பகவான் ஹரியின் புனித நாமங்களை உச்சரி.
2)
பகவான் ஹரி(க்ருஷ்ணர்) பாதி மனிதனாகவும், பாதி சிங்கமாகவும் உள்ள நரசிம்மராக அவதரித்தார். வாமன என்ற பெயர் கொண்ட குள்ள பிராமணனாகவும், மது என்ற அசுரனைக் கொல்பவராகவும் அவதரித்துள்ளார். வ்ரஜ பூமியின் அரசரான நந்த மகாராஜாவின் மகனான அவர், அரசரால் மிகவும் நேசிக்கப்பட்டவர். கருமைனி நிறம் உள்ளவர். அரக்கி பூதனாவை வதம் செய்து, கைடப என்ற அசுரனையும் அழித்தார். அரசர் தசரதருக்கு மகனாக, ராமராக தோன்றிய, பகவான் ஹரிக்கு எல்லா புகழும் உண்டாவதாக.
3)
அன்னை யசோதையால் மிகவும் நேசிக்கப்படுபவர்; ஆன்மீக புலன்கள், பூமி, பசுக்கள், ஆகியவைகளுக்கு இன்பத்தையும், பசுக்களுக்கு பாதுகாப்பையும் கொடுப்பவர். விருந்தாவன காட்டின் பிரபு அவரே. கோபிகைகளால் நேசிக்கப்படும், ராதிகாவின் அன்பிற்கு உகந்தவருமான அவர், அனைத்து உலகங்களிலும் அதி உன்னத அழகியா நபராவார்.
4)
ராமச்சந்திரராக வந்து அசுர அரசனான ராவணனுக்கு ஒரு முடிவு கட்டினார்; கிருஷ்ணர் வயதான கோபிகளின் வீட்டில் உள்ள வெண்ணாயியும், யமுனா நதியில் குளித்துக் கொண்டிடுந்த இள வயது கோபிகைகளின் ஆடைகளையும் திருடினார். விருந்தாவனத்தில் பசுக்களை மேய்க்கும் சிறுவனாகவும், பசுக்களை மேய்க்கு சிறுவர்களுக்கு பாதுகாப்பாளராகவும் இருக்கிறார். அனைவருடைய இதயங்களையும் திருடும் அவர், எப்போதும் ஒரு புல்லாங்குழலை ஏந்தியுள்ளார்.
5)
மிகச்சிறந்த யோகிகளால் வணங்கப்படும் கிருஷ்ணர் நந்தமகாராஜாவின் புதல்வராவார். விருந்தாவன வாசிகளின் எல்லா பயங்களையும் அகற்றுகிறார். நீலமேக வர்ணத்தை உடைய அவரது உடல் மனதை கவர்ந்திழுக்கிறது. தனது புல்லாங்குழலை அவர் ஊதும் பொழுது, மிகவும் வசீகரமாக காட்சியளிக்கிறார்
6)
கிருஷ்ணர் யசோதையின் புதல்வர், கம்சனை வதம் செய்தவர், விருந்தாவன தோப்புகளில் அவர் ராச நடனம் புரிகின்றார். கதம்ப மரங்களுக்குக் கீழே இத்தகைய ராச நடனத்தை கிருஷ்ணர் நடத்தி, விருந்தாவன காட்டில் அவர் வசிக்கின்றார்.

7)
தனது பக்தர்களுக்கு பரவச நிலையை உண்டு பண்ணும் அவர், எல்லாவித அன்பிற்கும் இருபிடமாவார், கோபியர்களின் அன்பை அதிகரிக்க மலர்க்கணையை விடும் தெய்வீக மன்மதன் அவர். கோபியர்களின் ஆனந்தமும், எல்லா அற்புதமான தன்மைகளின் இருப்பிடமும் கிருஷ்ணரே.

8) பகவான் கிருஷ்ணர் யமுனா நதியின் ஜீவ நாடியாவார், தெய்வீக அன்பில் எப்பொழுதும் மனம் லயித்தவராக இருக்கிறார். சந்திர ஒளியின் கீழ் மட்டுமே உயிர் வாழும் சகோரா பறவைகள் போல, கிருஷ்ணர் கோபிகளுடய மனங்களுக்கு சந்திரனாவார். ஓ மனமே என்னுடைய இந்த வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, முழுவதும் அமிர்தரசமாகிய இத்தகைய புனித பெயர்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளை மட்டுமே பாடு.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question