1) பகவானின் புனித நாமத்தை பரப்ப தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ள பக்தர்களை நிந்திப்பது குற்றம்.
2) பிரம்மா, சிவன், போன்ற தேவர்களின் நாமங்களை விஷ்ணுவின் நாமத்திற்கு சமமாகவோ, தன்னிச்சையானவை என்றோ கருதுவது குற்றம்.
3) ஆன்மீக குருவின் கட்டளையை மீறுவதும், அவரை ஒரு சாதாரண மனிதராக நினைப்பதும் குற்றம்.
4) வேத இலக்கியங்களையும், வேத வழிவந்த நூல்களையும் நிந்திப்பது குற்றம்.
5) ஹரே கிருஷ்ண மகாமந்திரத்தை கற்பனையானது என்று கருதுவது குற்றம்.
6) புனித நாமத்திற்கு பெளதிகமான வியக்யானம் கொடுப்பது குற்றம்.
7) பகவானின் புனித நாமத்தின் பெயரால் பாவ காரியங்கள் செய்வது குற்றம்.
8) வேதத்தில் கர்ம காண்ட பகுதியில், செயல்களுக்கு பலனை கொடுக்கும்சடங்குகளுக்கு ஈடாக திவ்ய நாமத்தை கருதுவது குற்றம்.
9) நம்பிக்கையில்லாத நபர்களுக்கு பகவானின் புனித நாமத்தை எடுத்து சொல்வது குற்றம்.
10) பெளதிக பந்தத்தின் காரணமாக புனித நாமத்தின் மகிமையை அறிந்தும் பூர்ண நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், பகவான் நாமத்தை கவனக் குறைவாக உச்சரிப்பதும் குற்றம்.
Harakrishna prabu. Songs PDF link not opening … Pls send another link..
Thank you.
Click this link V-song
Harinam sangeerthan ki jai 🙏🙇