Wednesday, October 30

பகவத் கீதை – 2.63

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

க்ரோதாத் பவதி ஸம்மோஹ:
ஸம்மோஹாத் ஸ்ம்ருதி-விப்ரம:
ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் புத்தி-நாஷோ
புத்தி-நாஷாத் ப்ரணஷ்யதி

வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்:
க்ரோதாத் — கோபத்திலிருந்து; பவதி — ஏற்படுகிறது; ஸம்மோஹ: — பூரண மயக்கம்; ஸம்மோஹாத் — மயக்கத்தினால்; ஸ்ம்ருதி — நினைவின்; விப்ரம: — நிலைஇழப்பு; ஸ்ம்ருதி-ப்ரம்ஷாத் — நினைவு குழம்பிய பின்; புத்தி-நாஷ: — அறிவு இழப்பு; புத்தி-நாஷாத் — அறிவு இழப்பிலிருந்து; ப்ரணஷ்யதி — வீழ்ச்சியடைகிறான்.


Translation:
கோபத்திலிருந்து பூரண மயக்கமும், மயக்கத்தினால் நினைவு நிலை இழப்பும் ஏற்படுகின்றன. நுனைவு குழம்புவதால் அறிவு இழக்கப்படுகிறது, அறிவு இழக்கப்பட்டவுடன், ஒருவன் மீண்டும் ஜட வாழ்க்கையில் வீழ்கிறான்.


Purport:
ஸ்ரீல ரூப கோஸ்வாமி பின்வருமாறு நமக்கு வழிகாட்டியுள்ளார்.

ப்ராபஞ்சிகதயா புத்த்யா
ஹரி-ஸம்பந்தி-வஸ்துன:
முமுக்ஷுபி: பரித்யாகோ
வைராக்யம் பல்கு கத்யதே

(பக்தி ரஸாம்ருத சிந்து 1.2.258)

கிருஷ்ண உணர்வை விருத்தி செய்தவன், அனைத்துப் பொருள்களையும் இறைவனின் சேவையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை அறிவான். கிருஷ்ண உணர்வைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், ஜடப் பொருள்களை தவிப்பதற்கு செயற்கையாக முயற்சி செய்கின்றனர்; அதன் விளைவாக பௌதிக பந்தத்திலிருந்து அவர்கள் முக்தி பெற விரும்பினாலும், துறவின் பக்குவ நிலையை அவர்கள் அடையவில்லை. அதே சமயம், கிருஷ்ண உணர்விலுள்ள பக்தன், எல்லாப் பொருள்களையும் இறைவனின் தொண்டில் எப்படி உபயோகப்படுத்துவது என்பதை அறிவான்; எனவே, பௌதிக உணர்விற்கு அவன் பலியாகி விடுவதில்லை. உதாரணமாக, அருவவாதியைப் பொறுத்தவரை, இறைவன் (பூரண உண்மை) அருவமானவராக இருப்பதால், அவரால் உண்ண முடியாது. எனவே, நல்ல உணவுப் பொருள்களைத் தவிர்க்க விரும்புகிறான் அருவவாதி. ஆனால், கிருஷ்ணரே எல்லாவற்றையும் அனுபவிக்கக்கூடிய பரம ஆளுநர் என்பதையும், பக்தியுடன் அர்ப்பணம் செய்தால் அளிக்கப்படும் எல்லா உணவுப் பொருள்களையும் அவர் மகிழ்வுடன் உட்கொள்கிறார் என்பதையும் பக்தன் அறிவான். எனவே, பகவானுக்கு நல்ல உணவு பொருள்களை படைத்த பின், அவரது மீதியை பிரசாதமாக பக்தன் ஏற்றுக் கொள்கிறான். இவ்விதமாக அனைத்தும் ஆன்மீகப்படுத்துவதால் வீழ்ச்சிக்கான அபாயம் இல்லை. பக்தன் கிருஷ்ண உணர்வுடன் பிரசாத்தை ஏற்றுக் கொள்கிறான், பக்தன் அல்லாதவனோ அதை வெறும் ஜடப் பொருளாக எண்ணி ஒதுக்கிறான். எனவே, தனது செயற்கையான துறவினால், அருவவாதியால் வாழ்வை அனுபவிக்க முடிவதில்லை. இதன் காரணத்தால் ஒரு சிறு மனக் கிளாச்சியும் அவனை பௌதிகச் சுழலின் அடித்தளத்திற்கு ஆழ்த்தி விடுகின்றது. அத்தகு ஆத்மா, முக்தியின் நிலைவரை உயர்ந்தாலும்கூட பக்தித் தொண்டின் உதவி இல்லாததால், மீண்டும் வீழ்ச்சியடைவதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question