இந்த ஆலயம் ஆந்திராவின் அஹோபிலத்தில் உள்ள ஒன்பது நரஸிம்ம ஆலயங்களில் ஒன்றாகும். சத்ரவட நரஸிம்மர் நவ நரஸிம்ம ஆலயங்களில் மிகவும் அழகானவர். இந்த ஆலயம் “தேவத-ஆராதன” க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது.
இடங்கள் மற்றும் லீலைகள்
தல முத்ராவுடன் பகவான்:
ஹாஹா மற்றும் ஹூஹூ என்ற இரண்டு கந்தர்வர்கள் மேரு மலையிலிருந்து ஹிரண்ய சம்ஹாரத்திற்குப் பிறகு நரஸிம்மரை குளிர்விக்க இங்கு வந்து தங்கள் இனிமையான இசையுடன் பகவானை மகிழ்வித்தனர். அவரது அழகான புன்னகைக்கு இதுவே காரணமாக இருந்தது. நரஸிம்மர் தன் தொடையில் தாளம் போடுகிறார் (இடது கீழ் கை) மற்றும் ஒரு அழகான நித்திய புன்னகையுடன் இருக்கிறார். சிறந்த பாடகர்களாக அவர்கள் புகழ் பெறுவார்கள் என்று பகவான் அவர்களை ஆசீர்வதித்தார்.
கேது இங்கே இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்:
ஒன்பது கிரகங்களில் ஒன்றான கேது தனது சாபங்களிலிருந்து விடுபட இங்கே பிரார்த்தனை செய்ததாக நம்பப்படுகிறது.
இந்திரன் நரஸிம்மரிடம் பிரார்த்தனை செய்தார்:
இந்திரனும் மற்ற தேவதூதர்களும் இங்கே பகவானை வணங்கி, அரக்கன் ஹிரண்யாவைக் வதம் செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள்.
ஆலயம்
மூலவர் “சத்ரவத நரஸிம்மர்” என்று அழைக்கப்படுகிறார். சத்ர என்றால் குடை என்றும் வடம் என்றால் ஆலமரம் என்று பொருள். குடை போன்ற ஆலமரத்தடியில் வீற்ற நிலையில் காட்சி தந்ததால், பகவான் நரஸிம்மருக்கு இந்த திருநாமம். மூலவர் கேதுவை ஆட்சி செய்கிறார். அவரது முகத்தில் மிகவும் அழகான பரந்த புன்னகையுடன் இருப்பதால் பகவான் மிகவும் தனித்துவமானவர். கந்தர்வர்கள், ஹாஹா மற்றும் ஹூஹூ ஆகிய இருவரின் சிற்பங்களையும் கோவிலில் காணலாம்.