ராதா கிருஷ்ண ப்ராண மோர ஜுகல கிஷோர்
சகி-வ்ருந்தே விஞ்ஞாப்தி – சகிகளுக்கு பிரார்த்தனை (பிரார்த்தனையிலிருந்து)
– ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகுர்
1
ராதா-கிருஷ்ண பிராண மோர ஜுகல-கிஷோர்
ஜீவனே மரணே கதி ஆரோ நாஹி மோர
2
காலின்தீர கூலே கேலி-கதம்பேர வன
ரதன-பெதீர உபர போஸாபோ து’ஜன
3
ஷ்யாம-கெளரி-அங்கே திபோ சந்தனேர கந்த
சாமர துலாபோ கபே ஹேரி முக-சந்த்ர
4
காதியா மாலதீர் மாலா திபோ தொஹார கலே
அதரே துலியா திபோ கற்புர-தாம்பூலே
5
லலிதா விஷாகா-ஆதி ஜத சகீ ப்ருந்தா
ஆஜ்ஞாய கொரிபோ சேபா சரணாரவிந்த
6
ஸ்ரீ-கிருஷ்ண-சைதன்ய-பிரபுர் தாஸேர் அனுதாஸ
ஸேவா அபிலாஷ கொரே நரோத்தம-தாஸ
————————————————————————————–
- ஸ்ரீமதி ராதாராணி மற்றும் பகவான் ஸ்ரீ கிருணரே என்னுடைய வாழ்வும், மூச்சும் ஆவர். உயிர் வாழ்வதிலும், இறப்பிலும் அவர்களைத் தவிர எனக்கு அடைக்கலம் யாரும் இல்லை.
- யமுனை நதிக் கரையில் உள்ள சிறிய கதம்ப மரங்கள் அடங்கிய காட்டில் மிகப் பிரகாசமான ரத்தினங்கள் பதிக்கப் பட்ட சிம்மாசனத்தை ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்னருக்கு அளித்து அமரச் செய்வேன்.
- “சூயா” என்னும் வாசனைப் பொருள் கலந்த சந்தனக் கலவையை அவர்களது கருமை மற்றும் பொன்னிற திருமேனிகளுக்கு அர்ப்பணிப்பேன். அவர்களுக்கு சாமரம் கொண்டு வீசுவேன். ஓ, எப்போது நான் அவர்களின் நிலவு போன்றதிருமுகங்களை தரிசிப்பேன்.
- மாலதிமலர்களை கொண்டு கோர்த்த மாலைகளை அவர்களது கழுத்தில் அணிவிப்பேன். பிறகு கற்புர வாசனை நிறைந்த தாம்பூலத்தை அவர்களது தாமரை திருவாய்களுக்கு அர்ப்பணிப்பேன்.
- லலிதா மற்றும் விசாகா தலைமையில் உள்ள எல்லா கோபியர்களின் அனுமதியுடன் நான் ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கிருஷ்ணரின் தாமரை பாதங்களுக்கு சேவை செய்வேன்.
- ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் சேவகனுக்கு சேவகனான நரோத்தம தாஸ், ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு இந்த சேவையை செய்ய ஏங்குகிறேன்.