(1) ஆன்மீக குருவின் தாமரைப் பாதங்களே தூய பக்தி சேவைக்கு இருப்பிடமாகும். மிகக் கவனத்துடன் அத்தகைய பாதங்களை பணிவோடு விழுந்து வணங்குகின்றேன். மனமாகிய எனதருமை சகோதரனே! ஆன்மீக குருவின் கருணையினால் நாம் இந்த பெளதிக வாழ்கையை கடந்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை அடைய முடியும். (2) ஆன்மீக குருவின் போதனைகளை மனதில் பதிய வைத்து, அதை தவிர வேறு எதையும் விரும்பக்கூடாது. குருவின் பாதங்களில் பற்று கொண்டிருப்பது, ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச்சிறந்ததாகும். அவரது கருணையினால் ஆன்மீகம் சம்பந்தமான அனைத்து ஆசைகளும் நிறைவேற்றப்படும். (3) எனக்கு ஞான கண்ணை பரிசாகக்கொடுத்த அவரே எனது பிறவிதோரும் எனக்கு குருவாவார். அவரின் கருணையால் தான் தெய்வீக அறிவானது இதயத்திலிருந்து வெளிப்பட்டிருக்கிறது, அது அறியாமையை அழித்து, பிரேம பக்தியைக் கொடுக்கிறது. வேத நூல்கள் அவரது குணநலன்களையே பாடுகின்றன. (4) ஓ ஆன்மீக குருவே, கருணைக் கடலே, நிலை இழந்த ஆத்மாக்களின் நண்பரே, ஒவ்வொருவருக்கும் நீங்களே வாழ்க்கையும், போதகருமாவீர். ஓ குருதேவரே! என் மீது கருணை காட்டி, உங்களது தாமரைப் பாத நிழலை எனக்கு கொடுங்கள். உங்களுடைய புகழ் மூவுலகங்களிலும் பரவுவதாக.
ஸ்ரீ குரு-வந்தனம்
by பக்தி யோகம் குழு
இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻
(பிரேம – பக்தி – சந்த்ரிகாவில் இருந்து)
(1) ஸ்ரீ-குரு-சரண-பத்ம கேவல-பக்தி-ஸத்மா பந்தோ முயி ஸாவதான மாதே ஜாஹார ப்ரஸாதே பாய் ஏ பவ தோரியா ஜாய் க்ருஷ்ண-ப்ராப்தி ஹோய் ஜாஹா ஹ’தே