
ஸ்ரீ கதாதர கோஸ்வாமி
ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவிற்கு அடிப்படையில் இரண்டு வகையான சகாக்கள் உள்ளனர். 1. துவாதச கோபாலர்கள் (அபிராம கோபாலர், கௌரிதாச பண்டிதர், தனஞ்சயர் மற்றும் பலர்) அடங்கிய முதல் குழுவினர், சக்ய ரசம் (நட்புணர்வு) எனும் பாவத்தில் ஸ்ரீ நித்தியானந்த பிரபுவிற்குச் சேவை செய்கின்றனர். 2. இரண்டாவது குழுவினர் எப்போதும் மாதுர்ய ரசத்தில் (தெய்வீகக் காதல் பாவத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள். ஸ்ரீ கதாதர கோஸ்வாமி என்பவர் சந்திரகாந்தி கோபி (ஸ்ரீமதி ராதாராணியின் தேஜஸின் விரிவாக்கம்) மற்றும் பூர்ணானந்தா (பகவான் பலராமரின் அன்புத் தோழியின் விரிவாக்கம்) ஆகியோரின் ஒன்றிணைந்த வடிவமாவார். எனவே, கதாதர தாசர் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு மற்றும் ஸ்ரீ நித்தியானந்த பிரபு ஆகிய இருவருக்கும் சகாவாக விளங்கினார். கிருஷ்ணதாச கவிராஜ கோஸ்வாமி, பகவான் சைதன்யரை 'ராதா-பாவ-த்யுதி சுவலிதம்' (ஸ்ரீமதி ராதாராணியின் உணர்வுகள் மற்றும் திருமேனி ஒளியால் அலங்கரிக்...
