Wednesday, October 30

Radha Krishna Pranamora – Tamil / ராதா கிருஷ்ண ப்ராண மோர ஜுகல கிஷோர்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ராதா கிருஷ்ண ப்ராண மோர ஜுகல கிஷோர்

சகி-வ்ருந்தே விஞ்ஞாப்தி – சகிகளுக்கு பிரார்த்தனை (பிரார்த்தனையிலிருந்து)
– ஸ்ரீல நரோத்தம தாஸ் தாகுர்


1

ராதா-கிருஷ்ண பிராண மோர ஜுகல-கிஷோர்
ஜீவனே மரணே கதி ஆரோ நாஹி மோர

2

காலின்தீர கூலே கேலி-கதம்பேர வன
ரதன-பெதீர உபர போஸாபோ து’ஜன

3

ஷ்யாம-கெளரி-அங்கே திபோ சந்தனேர கந்த
சாமர துலாபோ கபே ஹேரி முக-சந்த்ர

4

காதியா மாலதீர் மாலா திபோ தொஹார கலே
அதரே துலியா திபோ கற்புர-தாம்பூலே

5

லலிதா விஷாகா-ஆதி ஜத சகீ ப்ருந்தா
ஆஜ்ஞாய கொரிபோ சேபா சரணாரவிந்த

6

ஸ்ரீ-கிருஷ்ண-சைதன்ய-பிரபுர் தாஸேர் அனுதாஸ
ஸேவா அபிலாஷ கொரே நரோத்தம-தாஸ

————————————————————————————–

  1. ஸ்ரீமதி ராதாராணி மற்றும் பகவான் ஸ்ரீ கிருணரே என்னுடைய வாழ்வும், மூச்சும் ஆவர். உயிர் வாழ்வதிலும், இறப்பிலும் அவர்களைத் தவிர எனக்கு அடைக்கலம் யாரும் இல்லை.
  2. யமுனை நதிக் கரையில் உள்ள சிறிய கதம்ப  மரங்கள் அடங்கிய காட்டில் மிகப் பிரகாசமான ரத்தினங்கள் பதிக்கப் பட்ட சிம்மாசனத்தை ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்னருக்கு அளித்து அமரச் செய்வேன்.
  3. “சூயா” என்னும் வாசனைப் பொருள் கலந்த சந்தனக் கலவையை அவர்களது கருமை மற்றும் பொன்னிற திருமேனிகளுக்கு அர்ப்பணிப்பேன். அவர்களுக்கு சாமரம் கொண்டு வீசுவேன். ஓ, எப்போது நான் அவர்களின் நிலவு போன்றதிருமுகங்களை தரிசிப்பேன்.
  4. மாலதிமலர்களை கொண்டு கோர்த்த மாலைகளை அவர்களது கழுத்தில் அணிவிப்பேன். பிறகு கற்புர வாசனை நிறைந்த தாம்பூலத்தை அவர்களது தாமரை திருவாய்களுக்கு அர்ப்பணிப்பேன்.
  5. லலிதா மற்றும் விசாகா தலைமையில் உள்ள எல்லா கோபியர்களின் அனுமதியுடன் நான் ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கிருஷ்ணரின் தாமரை  பாதங்களுக்கு சேவை செய்வேன்.
  6. ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் சேவகனுக்கு சேவகனான நரோத்தம தாஸ், ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு இந்த சேவையை செய்ய ஏங்குகிறேன்.

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question