Wednesday, October 16

ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் பற்றிய வேதச் சான்று

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

1

ப்ருஹன் நாரதீய புராணம்
ஹரேர் நாம ஹரேர் நாம
ஹரேர் நாமைவ கேவலம்
கலெள நாஸ்தி ஏவ நாஸ்தி ஏவ
நாஸ்தி ஏவ கதிர் அன்யத

“இந்த கலியுகத்தில் பகவான் ஹரியின் நாமத்தை
உச்சரிப்பதைத் தவிர வேறு வழியில்லை, வேறு வழியில்லை , வேறு வழியில்லை “


2

ஸ்ரீமத் பாகவதம் (12.3.51 – 52)

கலேர் தோஷ் நிதே ராஜன்
அஸ்தி ஹி ஏகோ மஹான் குண:
கீர்த்தனாத் ஏவ கிருஷ்ணஸ்ய
முத்த சங்க பரம் வ்ரஜேத்

“அன்பார்ந்த மன்னனே ! தோஷங்கள் மிகுந்த கலியுகத்தில் கூட மிக நல்லதொரு வாய்ப்பு ஜனங்களுக்கு உள்ளது. அது ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தைப் பாடுவதாகும். இதனால் ஜடத்துயரம், பாவ விளைவுகள் இவற்றிலிருந்து விடுபட்டு ஒருவன் உன்னத உலகை அடைகிறான். “


3

ஸ்ரீமத் பாகவதம் (12.3. 52)

க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும்
த்ரேதாயம் யஜதோ மகை:
த்வாபரே பரிசர்யாயாம்
கலெள தத் ஹரி கீர்த்தனாத்

“க்ருத யுகத்தில் தியானத்தினாலும், த்ரேதா யுகத்தில் யாகத்தினாலும்,
துவாபர யுகத்தில் தெய்வ வழிபாட்டாலும் ஒருவர் அடைந்த பலனை, உயர்ந்த மோக்ஷ சாம்ராஜ்ஜியத்தை, கலியுகத்தில் (ஹரே கிருஷ்ண) நாம ஜபம் செய்வதால் மட்டுமே ஒருவர் அடைந்து விட முடியும்”.


4

விஷ்ணு புராணம் (6.2.17)

த்யாயன் க்ருதே யஜன் யஜைஞஸ்
த்ரேதாயாம் த்வாபரே ‘ர்சயன்
யத் ஆப்னோதி தத் ஆப்னோதி
கலெள சங்கீர்த்ய கேசவம்

ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியதை உறுதிப்படுத்தும் விஷ்ணு புராண ஸ்லோகம் இது க்ருத யுகத்தில் தியானத்தாலும், த்ரேதா யுகத்தில் யஜ்ஞங்களாலும், துவாபர யுகத்தில் அர்ச்சனையாலும் ஒருவர் அடைந்த பலனை கலியுகத்தில் கேசவ நாம சங்கீர்த்தனத்தால் மட்டுமே எளிதாக அடையலாம்.


5

ஸ்ரீமத் பாகவதம் (12.12.47)

பதித: ஸ்கலிதஸ் சார்த:
சக்ஷுத்வா வா விவசோ க்ருணன்
ஹரயே நம இதி உச்சைர்
முச்யதே ஸர்வ பாதகாத்

ஒருவன் கீழே விழும் போதோ, இடரும் பொழுதோ, துன்பப்படும் பொழுதோ, தும்மும் பொழுதோ தன்னையறியாமல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வணக்கம் என்று கூறினால், அவன் தானாகவே எல்லா பாவ விளைவுகளில் இருந்தும் விடுபடுவான்.


6

கலிசந்தரன உபநிஷத்
இந்த உபநிஷ்த் நாரதர் தன் தந்தையும் படைக்கும் கடவுளுமான பிரம்மாவிடம் கலியுக மக்கள் உயர்ந்த ஆன்ம உணர்வு நிலையை அடையும் வழியைப் பற்றி கேட்டதையும் அதற்கு பிரம்ம தேவர் கூறிய பதிலையும் கூறுகிறது. பிரம்ம தேவர் கூறியதாவது,

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஹரே ராம ஹரே ராமராம ராம ஹரே ஹரே
இதி ஷோட சகம் நாம்நாம் கலி கல்மஷ நாஷனம்நத: பரதரோவய: சர்வ வேதேஷு த்ரிஷயதே
பதினாறு சொற்கள் கொண்ட இந்த ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை தினமும் ஜபம் செய்வதே கலியின் கல்மஷ்த்தை நீக்கி அதன் தீய விளைவுகளிலிருந்து காத்துக் கொள்ள சிறந்த வழி. இதைத் தவிர வேறு வழியொன்றும் இல்லை. வேத இலக்கியங்கள் அனைத்தையும் புரட்டிப் புரட்டித் தேடினாலும் ஹரே கிருஷ்ண மந்திர ஜபத்தைத் தவிர கலியென்னும் இருண்ட பெருங்கடலைக் கடக்கும் மற்றொரு வழியைக் காண முடியாது.


ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் விளக்க உரை(தெய்வத்திரு அ.ச.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா)

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற இந்த மந்திர உச்சரிப்பிலிருந்து உண்டாகும் தெய்வீக அதிர்வானது நமது கிருஷ்ண உணர்வை புத்துயிர் பெற செய்யும் மேன்மையான முறையாகும். தெய்வீக உயிர் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் உண்மையில் கிருஷ்ண உணர்வுள்ள ஜீவன்களாவோம். ஆனால் பெளதிகத்துடன் நமது தொடர்பின் காரணமாக நினைவிற் கெட்டாத காலத்திலிருந்து நமது உணர்வானது பெளதிக சூழ்நிலையினால் மாசடைந்துள்ளது. நாம் வாழும் தற்போதைய பெளதிக சூழ்நிலையே மாயை எனப்படுகிறது. மாயை எனறால் ‘இல்லாத ஒன்று’ என்று அர்த்தம். இந்த மாயை என்பது என்ன? நாம் அனைவரும் பெளதிக இயற்கையின் எஜமானராக இருக்க முயற்ச்சி செய்கிறோம். ஆனால் உண்மையில் அதன் கடுமையான சட்டத்தின் பிடியின் கீழ் நாம் இருக்கிறோம். ஒரு வேலைக்காரன் சக்தி வாய்ந்த எஜமானனைப் போல் நடிப்பது மாயை எனப்படுகிறது. இத்தகையகளங்கப்பட்ட வாழ்க்கையில் பெளதிக இயற்க்கையின் வசதிகளை நமது சுயநலத்திற்கு உபயோகிக்க நாம் முயற்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம், ஆனால் உண்மையில் மேன்மேலும் அதில் சிக்கிக் கொள்கிறோம். ஆகவே இயற்கையை வெல்வதற்கு கடினமாக உழைத்த போதிலும் நாம் எப்போதுமே அதற்கு கீழ்ப்பட்டே இருக்க வேண்டியுள்ளது. நமது கிருஷ்ண உணர்வை உயிர்ப்பிப்பதன் மூலம், பெளதிக இயற்கைக்கு எதிரான மாயையான இந்த கடினமுயற்ச்சியை உடனேயே நிறுத்த முடியும். கிருஷ்ண உணர்வென்பது செயற்கையாக மனதில் திணிக்கப்படும் ஒன்றல்ல; இந்த உணர்வே உயிர்வாழியின் உண்மையான சக்தியாகும். இந்த தெய்வீக அதிர்வை நாம் கேட்கும்போது, இந்த உணர்வு புத்துயிர் பெறுகிறது. இந்த முறையானது கலியுகத்திற்காக வேதங்களால் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. நடைமுறை அனுபவத்தில் கூட, இந்த மஹா மந்திரத்தை உச்சரிப்பதால், ஒருவர் உடனடியாக ஆன்மீக தளத்திலிருந்து வரும் தெய்வீக பரவச நிலையை உணரலாம். ஒருவர் புலன்கள், மனது, அறிவு ஆகிய நிலையை கடந்து உண்மையில் ஆன்மீக உணர்வு நிலையில் இருக்கும்போது, அவர் தெய்வீக நிலையில் உள்ளார் என்பதை அறிந்து கொள்ளலாம்.ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரேஎன்ற இந்த உச்சாடனமானது ஆன்மீக தளத்திலிருந்து நேரடியாக விதிக்கப்பட்டதாகும். இவ்வாறாக. இந்த சப்த அதிர்வானது புலன், மனம், புத்தி போன்ற கீழ்நிலை உணர்வுகளையெல்லாம் கடக்கிறது. இம்மந்திரத்தை உச்சரிப்பதற்கு மொழி தேவையில்லை. எவ்விதமான மனக்கற்பனையும் தேவையில்லை. இது தானாகவே ஆன்மீக தளத்திலிருந்து தோன்றுகிறது. ஆகவே எந்தவிதமான முன் தகுதியுமில்லாமல் ஒருவர் இந்த மந்திர உச்சரிப்பில் கலந்து கொள்ளலாம்.இதை நாங்கள் நடைமுறையில் காண்கிறோம். ஒரு குழந்தையோ, அல்லது, ஒரு நாயோ கூட இந்த சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளலாம். பெளதிக பந்தத்தில் அதிகம் சிக்குண்டவர்கள் இந்திலைக்கு வர சிலகாலமாகலாம். ஆனால் அத்தகைய பெளதிகவாதியும் கூட வெகு சீக்கிரம் ஆன்மீக தளத்திற்கு உயர்த்தப்படுகிறான். இம்மந்திரத்தை பகவானின் தூய பக்தர் ஒருவர் அன்போடு உச்சரிக்கும் போது, கேட்பவர்களுக்கு இது நல்ல பயனை கொடுக்கும். எனவே இந்த மந்திர உச்சாடனமானது தூய பக்தர் ஒருவரின் உதடுகளில் இருந்து கேட்க வேண்டும். இதனால் உடனடியான பலன் கிடைக்கும். முடிந்த வரையில் பக்தர் அல்லாதவர்களிடம் இருந்து இந்த நாம ஸங்கீர்த்தனத்தை கேட்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாம்பின் உதடுபட்ட பால் விஷமாகி விடுகிறதல்லவா?   “ஹரா” என்கின்ற வார்த்தை பகவானின் சக்தியை குறிப்பதாகும். “கிருஷ்ண”, “ராம” என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும். கிருஷ்ண, ராம என்ற வார்த்தைகள் கடவுளையே குறிப்பதாகும், கிருஷ்ண, ராம என்பதன் பொருள் மிக உன்னத ஆனந்தம் என்பதாகும். “ஹரா” என்பது பகவானின் அதி உன்னத ஆனந்த சக்தியை குறிக்கிறது. இது விளி வேற்றுமையால் “ஹரே” என்று மாற்றப்பட்டுள்ளது. பகவானின், இந்த அதி உன்னத ஆனமீக சக்தியானது பகவானை அடைய நமக்கு உதவுகிறது.“மாயை” என்று அழைக்கப்படும் பெளதிக சக்தியானது பகவானின் அநேக சக்திகளில் ஒன்றாகும். உயிர்வாழிகளாகிய நாமும் பகவானின் விளிம்பிலான சக்தியாவோம். உயிர்வாழிகள் பெளதிக சக்தியைவிட மேலானவர்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளனர். உன்னத சக்தியானது தாழ்ந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும்போது பொருத்தமில்லாத ஒரு சூழ்நிலை உருவாகிறது. ஆனால் விளிம்பிலான உன்னத சக்தியானது “ஹரா” என்று அழைக்கப்படும் உன்னத சக்தியோடு தொடர்பு கொள்ளும் போது உயிர்வாழி சக நிலையான மகிழ்ச்சியில் நிலை பெறுகிறான். ஹரே, கிருஷ்ண, ராம என்று மூன்று வார்த்தைகள் மஹா மந்திரத்தின் தெய்வீக விதைகளாகும், மந்திர உச்சாடனமானது கட்டுண்ட ஆத்மாக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக கடவுளிடமும் அவரது உள்ளுரை சக்தியான ஹரா(ராதாராணி) விடமும் விடுவிக்கும் ஒரு ஆன்மீக அழைப்பாகும், தாயை நினைத்து கதறும் ஒரு குழந்தையின் அழுகைக்கு சமமானது இந்த மந்திர உச்சாடனம். “ஹரா” என்ற தாய் “ஹரி” அல்லது “கிருஷ்ணர்” என்று அழைக்கப்படும் உன்னதமான தந்தையின் அருளைப் பெறுவதற்கு பக்தர்களுக்கு உதவுகிறார்.ஆகவே ஆன்மீக தன்னுணர்வை அடைவதற்கு,ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரேஎன்ற இந்த மகாமந்திரத்தை உச்சரிப்பதை தவிர, இந்த கலியுகத்தில் வேறு சக்தி வாய்ந்தது ஒன்றுமில்லை.ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரேஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே


ஹரி நாமத்தின் மகிமை

கண்ணனின் அடியார்கள் ஆடிப் பாட, கலி கெட்டதே

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

நம்மாழ்வார் திருவாய்மொழி 5.2

பொலிக! பொலிக! பொலிக! உயிர்களுக்கு உள்ள சாபம் எல்லாம் போயிற்று. நரகமும் நைந்து நலிந்தது. யமனுக்கு வேலை ஒன்றும் இல்லாமல் போயிற்று. கலியும் கெட்டு ஒழிந்தது. கடல் நிற வண்ணன் கண்ணனின் அடியார்கள் இந்த பூமியில் அவதரித்து எங்கும் ஆடிப் பாடுவதைக் காணுங்கள். (5.2.1)

கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கு இனியன கண்டோம். தொண்டர்கள் அனைவரும் வாரீர், தொழுது நின்று ஆனந்தத்தில் ஆர்ப்பரியுங்கள். துளசி மாலை அணிந்த மாதவனின் அடியார்கள் மண் மேல் பண்கள் பாடி நின்று ஆடி எங்கும் பரந்து திரிகின்றனரே. (5.2.2)

கலியுகம் நீங்கியது. தேவர்களும் இங்கு வந்து புகுந்தனர். சத்திய யுகம் வந்து விட்டது. பேரின்ப பெரு வெள்ளம் பெருகுகிறது. கரிய முகில் வண்ணன், கடல்வண்ணன் கண்ணனின் அடியார்கள் மண் மேல் புகுந்து இசை பாடி எங்கும் இடம் பிடித்தனரே. (5.2.3)


கிருஷ்ணரின் திருநாமங்களை உச்சரிப்போம், வாரீர்!


மாயனை மன்னுவட மதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
மாயனை, வட மதுரையின் வலியோனை, தூய யமுனை ஆற்றுக்கு உரியவனை, இடையர் குலத்திலே பிறந்த மங்களச் சுடர் போன்றவனை, தாயின் வயிற்றிற்குப் புகழ் தேடித் தந்தவனை, தாமோதரனை, நாம் அகமும் புறமும் தூய்மையாக வந்து வணங்கி, தூய மலர்களைத் தூவி, வாயினால் பாடி, மனதால் அவனைச் சிந்திப்போமானால், இதுவரையில் செய்த பாவங்களும், அறியாமையால் சேர்ந்த பாவங்களும் நெருப்பிலிட்ட பஞ்சுபோல் மாய்ந்துபோகும். ஆகையால் அவனுடைய திருநாமங்களை நாம் சொல்வோமாக.


(ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 5)

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question